அன்று அமாவாசை! கமிஷனர் உத்தரவுப்படி
போலீஸ் படை கிளம்பியது!
ஒரு பிரிவு, நகரில் உள்ள
பெரிய கடையை நோக்கி
சென்றது!
நகர எல்லையில் உள்ள
தொழிற்சாலைக்கு, மற்றொரு பிரிவு சென்றது!
தொழிற்சாலையை சுற்றிலும் மரங்கள் நிறைந்து இருந்தன!
போலீஸ் படை சுற்றி வளைத்துக் கொண்டது!
இரவு! காரின் விளக்குகளால்
கண்கள் கூசியது!
இரண்டு மூடிய லாரிகள்
வந்து நின்றன!
அதில் இருந்து ஆட்கள் குதித்தார்கள்!
தொழிற்சாலை கதவுகள்
திறக்கப்பட்டன!
அப்பொழுது….
விசில் சத்தம் காதை பிளந்தது! வாட்ச்மேன் உஷார் ஆகி விட்டான்!
அருகில் இருந்த பொத்தனை அழுத்தினான்!
அபாயமணி அலறியது இதற்குள்….
ரிங்….ரிங்…. ரிங்…
போலீஸ் நெருங்கியது!
வாட்ச்மேன், முதல் பலி ஆனான்!
ஆ…. டுமீல்….
வானத்தை நோக்கி சுட்டார்கள்!
டுமீல்…. டுமீல்…டுமீல்..
ஐயோ…போலீஸ்!..
பொம்மைகளைத் தூக்கி
போலீஸ் மீது வீசினார்கள்!
கமிஷனர் முன்னே வந்தார்!
டுமீல்…டுமீல்…
கமிஷனர் எச்சரிக்கை செய்தார்!
யாரும் தப்பி, ஓடவோ,
தாக்கவோ முயற்சிக்க
வேண்டாம்!
இங்கிருந்து ஒரு துரும்பு கூட வெளியேற முடியாது.
கையில் உள்ள ஆயுதங்களை எறிந்து
விட்டு….
சரண் அடையுங்கள்!
அப்பொழுது…
‘தள தள’ என கொதித்துக்
கொண்டிருந்த பொம்மை
குழம்பை கமிஷனர் மீது
கொட்ட ஒருவன் முயற்சி
செய்தான்!
டுமீல்…. அம்மா….
சுருண்டு விழுந்தான்!
அனைவரும் கைது செய்யப் பட்டார்கள்!
அதே நேரத்தில்….
விற்பனை கடை விளக்குகள் ‘பளிச்’
என எரிந்தது!
சுற்றி நின்ற போலீஸ்
உஷார் ஆனது!
இன்ஸ்பெக்டர்,சங்கர் கையில் வயர்லெஸ் கருவி….
எஸ்…சங்கர், சார்…
சங்கர்…இங்கு, அனைவரும் கைது செய்யப் பட்டனர்!
முக்கிய புள்ளிகள்
இருவரை காணோம்!
ஓகே சார்!… இங்கு
கடை விளக்குகள்
இப்பொழுது எரிகிறது!…
அப்படியா?
சங்கர்!கதவை அவர்களே
திறப்பார்கள்….
சிறிது நேரத்தில் கடையின் கதவு திறந்தது!
போலீஸ் படை அவர்களை
‘கப்’ என்று பாய்ந்து பிடித்தது! அதில்….
சி. ஐ. டி. ரகுவை பாதாள
சிறையில் இருந்து மீட்டனர்!
நகரின் ‘பெரிய புள்ளி’
தலை குனிந்து நின்றார்!
அனைவரும் ஆச்சரியப்
பட்டனர்!
ஆ! நீங்களா!…
மிஸ்டர் ரகு! நமது பழம் பெரும் கலைச் செல்வங்களான சிலைகளை
மீட்டதில் வெற்றி அடைந்த உங்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்து உள்ளார்!
அந்த வெற்றி எனக்கு மட்டும் அல்ல சார்! நமது
இலாகாவுக்கும், உங்களுக்கும் தான்!
முடிந்தது.