ஆத்திசூடி கதைகள்
66- நன்மை கடைப்பிடி

கந்தன் விவசாய குடும்பத்தில் பிறந்தவன்.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்.

அவன் அப்பா, அம்மாவுடன் வயலுக்குப் போவதால், விவசாயத்தின் மேல் அவனுக்கு பற்று இருந்தது.

அப்பா சொல்லாமலே வயலுக்கு  தண்ணீர் பாய்ச்சுவான், களை எடுப்பான்.

ஆடு, மாடுகளைப் பார்த்துக் கொள்வான். தீவனம் போடுவான்.
படிக்கவும் செய்வான்.

ஒரு நாள் கந்தனிடம் அப்பா சொன்னார் நான்  தான் கஷ்டப் படுகிறேன். நீ நல்லா படித்து வேலைக்குப்  போ! என்றார்.

அப்பா இந்த மண்ணில் தான் நானும் பிறந்தேன் மண்தராததை வேறு யார் தருவா?

என் படிப்பும், உங்கள் உழைப்பும் சேர்ந்தால் போதும். வேலை நாம பிறருக்குக் கொடுக்கலாம்.

“நன்மை கடைப்பிடி” என்று ஔவையார் கூடச்சொல்லி இருக்கிறார்கள்.
நம்ம விவசாய வேலையைத் தொடர்ந்து செய்வோம்.

உங்களுக்குத் தோள் கொடுக்கும் தோழனாக இருப்பேன். என்று பெரிய மனிதனைப் போல் உறுதியாகச் சொன்னான் கந்தன்.

Share.

Leave A Reply