மாதம் மாதம் வரும் பௌர்ணமி
         வளர் பிறையாய் வரும் முழுமதி
வாதம் செய்து அமாவாசை பௌர்ணமி
         ஆனது பட்டர் நூறு பாடலால்
ஊதல் குளுமை உடல் நடுங்க
          வெண்மதி கண்டு
மனம் நெகிழ
காதல் கொண்டு பௌர்ணமி காண
          அன்பு ஆற்று நீராய்
ஓட…


தமிழர் புத்தாண்டு சித்திரை மகள்
       வரவு  கண்டு  முக்கனி
காய்த்தது
உமி அகன்று அரிசி வரும்
       உழவர் உழைப்பில் காய், கனி
கமித்தல் மனம் தமிழர்க்கு  உண்டு
       கமழ்தல் உலகம் எங்கும் பரவும்
குமிழ்தல் உரக்கச் சொல்வோம் தமிழன்
       மூத்த  மொழி சித்திரை பௌர்ணமி

உயர்வு உண்டு என்று சொல்வோம்
       ஏற்றம்  எங்கு சென்றாலும் வெல்லும்
துயரம் தூரப் போக உழைப்போம்
       துணிவு எமக்கு என்று
சொல்வோம்
தயாள குணம் தமிழன்
பெருமை
        திடம் கொண்டு முழுமதி ஆவோம்
கயல் விழியால் மீனாட்சி
அருளால்
          கயமை அகற்றி வெற்றி கொள்வோம்.

         கவிஞர் சு. வேலன்

Share.

Leave A Reply