10- இரவல் நகை
அப்பளக் குடுமி தாத்தா உட்கார்ந்து இருந்தார்.
அவரைச் சுற்றி சிறுவரும், சிறுமிகளும் கூடியிருந்தார்கள்.
ராமு கையில் கடிகாரம் கட்டியிருந்தான்.
அதை கவனித்த கோபு,
“ஏய்! ராமு கடிகாரம் நல்லா இருக்குடா எப்ப வாங்கினாய்” என்றான்.
“தீபாவளிக்கு எங்க அப்பா வாங்கித் தந்தாங்க” என்றான் ராமு.
“டேய் கொஞ்ச நேரம் கொடுடா! கட்டி பார்த்து விட்டு தருகிறேன்.” என்றான் கோபு.
கொடுப்பதா? வேண்டாமா?….. என
யோசித்துக் கொண்டிருந்தான் ராமு.
இதை கவனித்த தாத்தா,
“கோபு இங்கே வா” என்றார்.
“அடுத்தவர் பொருளைக் கேட்பதே தவறு. அதற்கு ஒரு கதை சொல்லப் போகிறேன்”. என்றார் தாத்தா.
ஹாய்…. தாத்தா கதை சொல்லப் போகிறார்.
என குழந்தைகள் எல்லோரும் அமைதியாக கேட்க ஆரம்பத்தார்கள்.
ஒரு ஊரில் மாலாவும், விமலாவும் பக்கத்து..
பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்கள்.
இருவரும் நல்ல தோழிகளாக இருந்தார்கள்.
ஒருவர் செய்வதை மற்றவருக்கு கொடுத்து உண்பது முதல், ஒருவருக்கு இல்லாததை
மற்றவருக்கு கொடுத்து உதவுவது வரை அவ்வளவு நட்பு.
இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் இரவு மாலா வீட்டிற்கு விமலா வந்தாள்.
வா…விமலா! என வரவேற்றாள் மாலா.
“எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என பீடிகை போட்டாள் விமலா.
என்ன உதவி செய்ய வேண்டும், எனக் கேட்டாள் மாலா.
எனது கணவரின் நண்பர்
வீட்டு திருமணத்திற்கு நாளைக்குச் செல்ல வேண்டும். உனது “தங்கச் சங்கிலியை தருகிறாயா?
எனக் கேட்டாள் விமலா.
“எனது கணவர் ஊருக்குப்
போயிருக்கிறார். நாளைக்குத் தான் வருவார். கேட்காமல்” என
இழுத்தாள்…மாலா.
“அதனால் என்ன? காலையில் அண்ணன் வந்ததும் கொடுத்தால் போதும்” எனச் சொல்லி
போய் விட்டாள் விமலா.
இருவரும் பேசியதை ஒரு ‘பேய்’ கேட்டுக் கொண்டு இருந்தது.
காலை நான்கு மணிக்கு விமலா மாதிரி மாறிய ‘பேய்’ மாலா வீட்டு கதவை தட்டியது.
தூக்க கலக்கத்தில் வந்த
மாலா, கதவைத் திறந்தாள்.
வாசலில் விமலா நின்றிருந்தாள்.
“என்ன விமலா இன்னேரத்தில் வந்திருக்கிறாய்…என கொட்டாவி போட்டுக் கொண்டே கேட்டாள்” மாலா.
“சங்கிலியை கொடு சீக்கிரம் ஊருக்குப் போக வேண்டும்” என்றது விமலா உருவில் இருந்த
‘பேய்’.
“ஏன் இவ்வளவு அதிகாலையில் கிளம்பி விட்டீர்கள்” என்றாள் மாலா.
“ஆமாம்! சீக்கிரம் போகலாம் என்றார்” என் கணவர் என்றது ‘பேய்’ உருவில் வந்த விமலா.
என் கணவர் இன்னும் வரவில்லை சரி தருகிறேன். பத்திரமாக கொண்டு வந்து கொடுத்துவிடு என்ற மாலா, உள்ளே போய் சங்கிலியை எடுத்து வந்து கொடுத்தாள்.
சங்கிலியை வாங்கிக் கொண்ட விமலா உருவில் வந்த ‘பேய்’ வாரேன் என்று கூறிய படி
போனது.
மாலாவும் கதவை தாழ்போட்டுக் கொண்டு படுக்கச் சென்று விட்டாள்.
சங்கிலியை கொண்டு சென்ற ‘பேய்’ தனது கழுத்தில் போட்டுக் கொண்டது.
அதைப் பார்த்த மற்றொரு ‘பேய்’ எனக்கு ஒருமுறை போட்டுவிடு என்றது.
இப்படியே பல பேய்கள் கூடிவிட்டன.
எல்லா பேய்களும் மாற்றி…மாற்றி போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தன.
அந்த அதிகாலை நேரத்தில் மாலாவின் கணவன் மகேஷ் அந்த வழியாக பேருந்தில் இருந்து இறங்கி நடந்து வந்து கொண்டு இருந்தான்.
காலைக் கருக்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத இருள். மகேஷ் தனியாக நடந்து வந்தான்.
பறவைகள் அங்கும், இங்கும் சிறகடித்து சலசலக்கும் சத்தம்.
ஆந்தை அலறும் சத்தமும் கேட்டது.
நாய் விடாது குரைத்துக் கொண்டே இருந்தது.
தூரத்தில் நரி ஊளையிட்டது.
இந்த சத்தங்களையும் தாண்டி…. எனக்கு.. எனக்கு என ‘பேய்கள்’ கூச்சல் போட்டதும் கேட்டது மகேசுக்கு, மனதிற்குள் பயம் கவ்விக்
கொண்டது.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன கூச்சல்” என சத்தம் வந்த பக்கம் சென்றான் மகேஷ்.
பேய்கள் ஒரு சங்கிலியை வைத்துக் கொண்டு மாற்றி.. மாற்றி போட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்தான் மகேஷ்.
தொடரும்.