10- இரவல் நகை
இது என்ன நம்ம வீட்டு
சங்கிலி போல் அல்லவா
தெரிகிறது, என யோசித்தான்.
தனது வேட்டியை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு, கையில் நெருப்புப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டான்.
மகேஷ் குதித்துக் கொண்டே எனக்கு…எனக்கு…என
தலையை நீட்டினான்.
ஒவ்வொருத்தருக்கா சங்கிலியை போட்ட பேய்கள் மகேஷ் கழுத்திலும் சங்கிலியைப் போட்டது.
உடனே, கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து கொளுத்தினான் மகேஷ்.
நெருப்பைப் பார்த்த பேய்கள் மறைந்து விட்டன.
வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்ட மகேஷ்
கழுத்தில் சங்கிலியுடன்
வீட்டை நோக்கி வந்தான்.
பேய்களிடம் இருந்து பிழைத்தது இறைவனின் செயல்தான். என நினைத்து இறைவனுக்கு
நன்றி சொல்லிக் கொண்டு வந்தான் மகேஷ்.
காலை விடிந்த உடன் வந்த விமலா அண்ணன்
வந்து விட்டார்களா? மாலா, சங்கிலியை தருகிறாயா? என்றாள் விமலா.
“நீ இன்னும் ஊருக்குப் போக வில்லையா?”என்றாள்
மாலா.
இப்பத்தான் புறப்பட்டுக்
கொண்டு இருக்கிறோம்.
சங்கிலி தருவதாகச் சொன்னாயே தருகிறாயா? எனக் கேட்டாள் விமலா.
“என்ன சங்கிலியா? நான் காலையிலேயே கொடுத்தேனே!” என்றாள் மாலா.
“என்ன? மாலா இப்படி சொல்கிறாய், என்ன ஆச்சு உனக்கு”என்றாள் விமலா.
“எனக்கு ஒன்றும் ஆகவில்லை உனக்குத் தான் ஏதோ ஆகிப்போச்சு” என்றாள் மாலா.
“என்ன? மாலா வந்ததில்
இருந்தே பார்க்கிறேன்.
ஏதேதோ சொல்கிறாய்”
என்ன? விபரமாகச்சொல்?
என்றாள் விமலா.
இதைக் கேட்ட மாலாவிற்கு கோபம் வந்தது.
“என்ன விமலா காலையில் நான்கு மணிக்கு வந்து சங்கிலியை வாங்கிச் சென்ற நீ இப்போது திரும்பவும் வந்து கேட்டால் என்ன அர்த்தம்”
என்றாள்.
“மாலா…. என்ன சொல்கிறாய் நீ! நான் வந்து வாங்கிச் சென்றேனா!” அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“தர விருப்பம் இல்லை என்றால் தரமாட்டேன் என்று சொல்.அதை விடுத்து அபாண்டமாய்
பொய் பேசாதே” என்றாள் விமலா கோபத்துடன்.
“நகையை வாங்கிச் சென்றதும் இல்லாமல்
என்னுடனே சண்டைக்கு வருகிறாயா?” என மாலா கத்த..
அக்கம்…. பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள்.
என்ன…..? மாலா!
என்ன…..? விமலா!
…. என விசாரிக்கத் தொடங்கினார்கள்.
“ஒரு தட்டில் சாப்பிட்டவளுக
சண்டை போடுவதைப் பாரு” என சில பேர் ஆச்சரியப் பட அந்த வீதியே சலசலத்தது.
அந்த நேரம் அங்கு வந்து கொண்டிருந்த மகேஷ் . என்ன எனது வீட்டின் முன் இவ்வளவு கூட்டம். என்ன நடக்கிறது என வர…
மகேஷைக் கண்ட மாலா ஓ…என அழ.
“அண்ணே! நீங்களே நியாயம் சொல்லுங்க அண்ணா”என விமலா கூற….
இப்ப…என்ன? என்ன நடந்தது அமைதியாக கூறுங்கள். என மகேஷ் கேட்க!
மாலா நடந்தவற்றைக் கூறினாள்.
“விமலா நான் வாங்கவே இல்லை” என மறுததாள்.
“இந்தா…இந்த நகையா பாரு மாலா” என தன் கழுத்தில் இருந்த நகையை கழற்றி காண்பித்தான் மகேஷ் .
அதைக் கண்ட மாலா, என்னுடைய நகைதான்….
அது எப்படி உங்கள் கழுத்தில் என ஆச்சரியப் பட்டாள் மாலா.
கொஞ்சம் பொறுங்கள் என்ற மகேஷ் பேருந்தில் இருந்து இறங்கி வரும் வழியில் நடந்தவற்றை கூறி முடித்தான்.
விமலா மாதிரி வந்தது “பேயா” என மாலா பயந்தாள்.
“நகைக்காக உங்கள் நட்பையே குழிதோண்டி
புதைத்து விட்டீர்கள்?” சிறிது நேரத்தில்.
“பணமும், நகையும் நட்பை கெடுக்கும்”
என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இனியாவது உங்கள் நட்பை காப்பாற்றிக் கொள்ளுங்கள். என அறிவுரை கூறினான் மகேஷ் .
இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டோம்
என உறுதி கூறினார்கள்.
பின் அவர்…. அவர் வீட்டிற்குச் சென்றார்கள்.
தனக்கென்று உள்ளதை வைத்து திருப்திப்பட்டால்
இந்த நிலை வராது அல்லவா? என பலவாறு பேசினார்கள்.
அன்று முழுவதும் ஊர் மக்கள்.
பார்த்தீங்களா சிறுவர்களே…அடுத்தவர்
பொருளைக் கேட்டதற்கே
விமலாவிற்கு எவ்வளவு கெட்ட பெயர் என்று.
“கோபு இனி யார் பொருளையும் கேட்க மாட்டாயே?”என்று தாத்தா கேட்டதும்.
“மாட்டேன் தாத்தா” என்று கோபு கூற.
“நாங்களும் யார் பொருளுக்கும் ஆசைப்பட மாட்டோம் தாத்தா” என்று
சிறுவர்கள் எல்லோரும் கூறிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார்கள்.
தாத்தாவும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.