சித்திரையில் வரும் பௌர்ணமி முழுநிலவே
எத்தனம் முயன்ற வளர் பிறையே!
முத்திரை பதித்து சுழலும் போது
இத்தரையில் ஒளிச் சுடரே நீ!
அத்திரி நிலவில் கதை சொல்லி
ஆனந்தம் அடையும் சிறுவர் கூட்டம்!
தித்தியம் உலக நன்மை அடையும்
மதுரை நகரம் விழா கோலம்!
பச்சைப் பைங்கிளி தோள் சுமந்து
மரகதம், மாணிக்கம்
கழுத்து அணிந்து!
இச்சை கொண்டு சுந்தரேசனை மணக்க
இசைந்த மீனாட்சி
மணமகள் நீ!
விச்சை கற்ற வீர மங்கை
விண் சென்று மணமகனை அறிந்தாய்!
உச்சம் தொட்ட பெண் மகளே
உனது ஆட்சி மண் மணக்கும்!
வைகைத் தோன்ற காரணம் ஆகி
கள்ளழகர் இறங்க நதி ஓடி!
மை விழியால் மீனாட்சி அண்ணன்
பௌர்ணமி நாளில் ஆற்றைக் கடக்க!
கை பிடித்த கணவருடன் வந்து
காட்சி தந்து ஆட்சி செய்வாய்!
தைவதம் உன்னை வணங்க வரும்
பக்தர் கூட்டம் சித்திரா பௌர்ணமி.