நெற்றிக் கண் திறப்பினும் குற்றம்குற்றமே
நக்கீரர் வாதிட்டு எரித்தபோது வயதில்லை!
தருமிக்கு பொற்கிழியும்
நக்கீரருக்கு புகழும்
தமிழ் புலமைக்கு அங்கு
வயதில்லை!
மாங்கனி கொடுத்து உணவிட்ட புனிதவதியை
அம்மையே என்றழைத்த
போது வயதில்லை!
அறுபத்து மூன்றுநாயன் மார்களில் ஒருவரான
காரைக்கால் அம்மையார் பாடலுக்கு வயதில்லை!
கணபதியை வணங்கி கணநேரத்தில் முதுமைபெற்ற
தமிழுக்கு அர்ப்பணித்த
ஔவைக்கு வயதில்லை!
தானுண்டு வாழ்வதை விடதமிழ் தழைக்க
ஔவைக்கு நெல்லிக்கனி தந்தஅன்பிற்கு வயதில்லை!
காளியின் அருளால் காளிதாசர் ஆகி
கவிதை பாடிய புலமைக்கு வயதில்லை!
காலனை காலால் எட்டியுதைத்த பாரதி காலம் கடந்தும் வயதில்லா தமிழ்!
காலம் காலமாய் கடந்த போதும்
களமிறங்கிய புலமைக்கு வயதில்லாத போது
தொன்மை மிகுந்த தமிழ்
செம்மொழிக்கு
வயதை தேடினேன் வதில்லா தமிழ்!
வளரும் தமிழ் வாழும் தமிழ்!
வயசுப் பிள்ளையாய் வளம்வரும் தமிழ்!
வலிமை தனித்துவம் காட்டும் தமிழ்!
மூத்த தமிழ் முழங்கும் தமிழ்!