13-ஞான உதயம் தன் கணவர் கழுதையுடன் வருவது கண்டு ஆச்சரியப்பட்டாள்.எதற்காக கழுதை என கேட்டாள். பேசாமல் இரு, என மனைவியை அதட்டியவன் அம்மாவிடம் சென்றான். “இந்தா! புருசன் கேட்டே இல்ல” என்றவன்.ஒரு அறையில் கழுதையையும் அம்மாவையும் உள்ளே விட்டு கதவை சாத்தி வைத்தான். என்னங்க…. இதெல்லாம் என்றாள் குணா. கழுதை உதைக்கிற உதையில் எங்க அம்மா சாகட்டும் என்றான். எங்க அம்மாவை தெய்வமாய் மதித்தேன் என்றவன் கண் கலங்க என்னை தனியாக விடு என வார்த்தைகள் வராமல் அவன் அறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டான். அம்மா ஒரு புறம்,மகன் மறுபுறம் நம்மை இந்த வராண்டாவில் படுக்க வைத்து விட்டார்களே? என்று நினைத்தாள் குணா. சரி விடியட்டும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என நினைத்த குணம், அங்கே படுத்து தூங்கிவிட்டாள். சிவனும், பார்வதியும் உலகைச் சுற்றி வந்தார்கள். உங்கள் பக்தைக்கு நடக்கும் கொடுமையைப் பாருங்கள். அம்மாவையும், கழுதையையும் ஒரு அறையில்…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
13-ஞான உதயம் குழந்தைகளே! “இன்று உங்களுக்கு நல்ல கதை சொல்லப் போகிறேன்” என்றார் தாத்தா.என்ன கதை தாத்தா என எல்லோரும் குதூகளித்தனர். சிறுவர்களே “ஒருவருக்கு முற்பகல் துன்பம் செய்தால் அந்த துன்பம் பிற்பகல் தாமே வரும்” என்பதற்கு இணங்க இக்கதை இருக்கும் என்றார் தாத்தா. சொல்லுங்க தாத்தா என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு ஊரில் இராமாயி என்பவளுக்கு ரகு என்ற மகன் இருந்தான். அவனுக்கு குணவதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தாள் இராமாயி. குணவதி என்ற பெயருக்கு எதிர்மறையாக இருந்தாள் அவள். ரகு ஒருநாள் தன் மனைவியை அருகில் அழைத்து, “குணா! எனது தந்தை இறந்த பின் என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் எனது அம்மா…” இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம்.எனவே, தினமும் உணவில் நெய்யிட்டு நல்ல உணவைக் கொடுத்து அன்பாக நடத்து என் தாயை மகிழ்விக்க வேண்டும் என்றான் ரகு. சரி, ஆகட்டும் அப்படியே நடந்து கொள்கிறேன்…
தோல்வி வந்தால் வருந்தாதேஅது ஒரு புதிய பாடம்!கடவுள் உன்னை வலிமையாக்குகிறார்!மீண்டும் முயற்சி செய்!உன்னால் முடியும் என்று நம்பு நாளை உன் நாளாகும். இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.
காலை எழுந்ததும் நன்றி சொல் இன்று ஒரு பரிசு!கடவுள் உனக்கு புதிய வாய்ப்பு தந்துள்ளார்!மகிழ்ச்சியுடன் தொடங்கு!நல்லதை நினைத்து செயல் படு!நாள் அழகாக மாறும். இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.
கீழே சிங்கத்தின் குரல் கேட்கிறது. சிந்தாமல் தண்ணீர் குடி என எச்சரித்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தார்கள். “மடமட எனக் குடித்தவன்” பாதி தண்ணீரை கீழே சிந்தினான். தண்ணீர் ஒழுகி சிங்கத்தின் மீது விழுந்தது. இது என்ன?என சிங்கம் அதட்டியது. “உங்களுக்காக சாப்பாடு செய்து ரசம் வைத்திருந்தேன் எலி தட்டி விட்டிருக்கும் போல் இருக்கிறது” என்றாள் கமலா.இந்தப் பெண் வந்ததில் இருந்து “உம்” என்று இருந்தாலே இன்று நமக்காக ரசம் எல்லாம் வைத்ததாகச் சொல்கிறாளே என்று சந்தோசத்தில் நாக்கால் நக்கி சாப்பிட்டது சிங்கம். மேலே என்ன தட்டி இருக்கும், என பார்த்து வருகிறேன். என்ற சிங்கம் மேலே ஏறப்போனது. அப்போது நிறைமதியன் அண்ணன்களிடம் அண்ணா! எனக்கு ஒரு பாட்டு வருகிறது பாடட்டுமா? என்று கேட்டேன். முடியாது நீ பாடினால் நாம் எல்லோரும் சிங்கத்திடம் மாட்டிக் கொள்வோம். என்று மறுத்தனர். என் கொக்கு கறியும், தவிட்டுக் களியையும் தாங்க என்று கதற ஆரம்பித்தான்.“உன்னிடம் வாங்கி…
“தம்பியும் நான் களி தருகிறேன் நான் கேட்டது எல்லாம் தர வேண்டும். அப்படித் தருவது என்றால் தான் களி தருவேன். இல்லை என்றால் தரமாட்டேன்” என்று கூறிவிட்டான். இருக்கும் பசியில் இவன் வேறு எனமுணு…முணுத்துக் கொண்டு, சரி நீ என்ன கேட்டாலும் தருகிறோம். எங்களுக்கு களி கொடு” என்று உறுதி சொன்னவுடன்… நிறைமதியனும் களியும், கொக்கும் கறியும் கொடுத்தான். சாப்பிட்டவுடன் பயணத்தை ஆரம்பித்தார்கள். காட்டுக்குப் பக்கத்தில் ஒரு கழுதை மேய்ந்து கொண்டு இருந்தது. இதைப் பார்த்த நிறைமதியன், “அந்த கழுதை எனக்கு வேண்டும் அண்ணா” என்று கேட்டான். “கழுதைக்காரன் வந்தால் வண்ணாந் தொறையில் வைத்து அடிப்பான் வேண்டாம்” என்றார்கள். அப்ப என் தவிட்டுக் களியும் கொக்குக் கறியையும் கொடுங்கள் என்றான். இவனுடன் தொந்தரவாகப் போச்சு என்று கழுதையைப் பிடித்து வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள். சிறிது தூரம் போயிருப்பார்கள். ஒரு தென்னை மரம் சாய்ந்து கிடந்தது. அதைப் பார்த்த நிறைமதியன். “எனக்கு இந்த…
நல்ல நண்பர்களைத் தேர்வு செய்! நல்ல பாதையில் நட!கடவுள் நல்ல மனங்களைச் சேர்ப்பார்!உண்மையைப் பேச பழகு! அன்பை விதை போல விதை! நல்ல வாழ்க்கை மலரும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
12-நிறைமதியன் அப்பளக்குடுமி தாத்தா உள்பட சிறுவர், சிறுமியர்கள் கூடி இருந்தார்கள். தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது…. கூட்டத்தில் “போடா நொண்டி” என்று குரல் கேட்டு தாத்தா திரும்பினார்.“கால் ஊனம் என்பதற்காக கேலி பேசக்கூடாது. ஒருவர் உடல் ஊனமாக இருக்கலாம். ஆனால், மனம் வலுவாக இருக்கும்.” அதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்றார். ஒரு ஊரில் ஏழு அண்ணன்களும், ஒரு தங்கையும் இருந்தார்கள். அதில் கடைசி அண்ணனுக்கு ஒரு கால் நொண்டி அவனது பெயர் நிறைமதியன். தம்பியை அண்ணன்கள் அவ்வளவாக கவனிப்பதே கிடையாது. இருந்தாலும் கடைசி தம்பி தன்னம்பிக்கையையும், புத்தி கூர்மையும் உள்ளவனாக விளங்கினான். தங்கை கமலாவிடம் அண்ணன்களுக்கு மிகுந்த அன்பு. அவளை அவர்கள் கண்ணிமை போல் காத்து வந்தார்கள். தங்கை ‘எள்’ என்றால் இவர்கள் ‘எண்ணெயாக’ நின்றார்கள். எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்து அவளை சந்தோசமாக வளர்த்து வந்தார்கள். அவளும் பெரியவளாக வளர்ந்து விட்டாள் . தங்கப்பதுமை போல்…
உன் புன்னகை ஒரு வரம்!அதை எப்போதும் மறைக்காதே!கடவுள் உன் மகிழ்ச்சியைவிரும்புகிறார்!மகிழ்ச்சியோடு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்!உலகம் உன்னை நேசிக்கும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
வெற்றி கடினம் என்று பயப்படாதே!உனது முயற்சி சிறியதாகஇருக்கலாம்!கடவுள் உழைப்பவரைகைவிடுவதில்லை!நம்பிக்கையுடன் முயன்றிரு…!மெல்ல…மெல்ல முன்னேறு வெற்றி உன் நண்பனாகும்.இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.