நல்ல வார்த்தை பேசப் பழகு! அது இதயத்தை தொடும்! கடவுள் அன்பே விரும்புகிறார்!மற்றவரை மகிழ்ச்சிப் படுத்து! அன்பு கொடுத்தால் அன்பே திரும்ப வரும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
இப்போது தனிமையில் விடுவது தான் நல்லது என நினைத்த மந்திரவாதி. “ நல்ல முடிவு எடுத்துவை” என்றவன் அறைக் கதவைப் பூட்டிச் சென்றான். கவலையே இல்லாமல் வாழ்ந்த இளவரசி இப்போது கலங்கினாள். தன்னை மீட்டிச் செல்ல இளவரசர் வருவாரா? என ஏங்கினாள்.தினம்…தினம் வந்து மந்திரவாதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளவரசியை கட்டாயப் படுத்தினான்.“ எனக்கு பொன், பொருள் எல்லாம் இருக்கிறது. நீ மட்டும் எனக்கு வேண்டும். நீ என்னை திருமணம் செய்து கொள் என கத்தினான்” மந்திரவாதி. அவன் குரல் அந்த காடு முழுவதும் எதிரொலித்தது. பவளவள்ளியோ பதில் கூறாது நடுங்கி, ஒடுங்கி நின்றாள். நீயாக என்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் காத்திருக்கிறேன். இனி யாரும் உன்னைக் காப்பாற்ற வர முடியாது. நினைவில் வைத்துக் கொள். என்றவன் அறையைப் பூட்டிச் சென்றான். ***** அவன் சென்ற பின் தட்டுத் தடுமாறி இக்கட்டுகளுக்குப் பின் அந்த குகையை கண்டுபிடித்து வந்தான்…
மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை!நிற்காமல் இருந்தால் போதும்!கடவுள் உன் பயணத்தைப் பார்க்கிறார்!ஒவ்வொரு அடியும் முக்கியம்!நம்பிக்கையுடன் செல்!இலக்கு அருகில் தான் உள்ளது.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
நேர்மை ஒரு அழகான ஆடை!அதை தினமும் அணிந்து கொள்!கடவுள் உண்மையை விரும்புகிறார்!பொய்யை விலக்கி நட!நல்ல பெயர் உருவாகும் மதிப்பு உன்னை நாடும்.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
பவளவள்ளி நந்தவனத்தில் தன் தோழிகளுடன் ‘கண்ணைக் கட்டி’ விளையாடிக் கொண்டிருந்தாள் அந்த சமயம் ரவிவர்மா அங்கு வர…தோழிகள் சொல்ல வாய் அசைப்பதற்குள். “ச்… சூ” என விரலை வாயில் வைத்து சைகை காண்பித்தவன் அவர்களைப் போகச் சொன்னான். “எங்கு போனீர்கள் என இரு கைகளையும் தடவிக் கொண்டு வந்தாள்” பவளவள்ளி. ரவிவர்மா முன் நிற்கவும், மாட்டிக் கொண்டாயா! என இருக கட்டித் தழுவிக் கொண்டே… கண் கட்டை அவிழ்த்தாள் பவளவள்ளி. ரவிவர்மா தன் அருகில் நிற்பது கண்டு வெட்கத்தால் தலை குனிந்தாள். வெட்கப்படும் போது உன் அழகு இன்னும் கூடுகிறது பவளம் என்றான். என்ன சிறு பிள்ளை விளையாட்டு என்றவன். குழந்தையாகி விட்டாயா?தூக்கி வரட்டுமா? என கண்களைச் சிமிட்டினான். போங்கள் என்றவள் அவன் கைப்பிடியில் இருந்து ஓடினாள். நில் பவளம், என்றவன். அவளைத் துரத்திக் கொண்டு ஓடினான். அந்த சமயம் அங்கு வந்த மந்திரவாதி “ஓம்.. க்ரீம்… க்ரீம்… மகா… காளி…
உன் கனவுகளை சிறியதாக என்னாதே! அவை உன் எதிர்காலம்!கடவுள் பெரிய கதவை திறக்கலாம் முயற்சி மட்டும் நிறுத்தாதே! இன்று தொடங்கு நாளை சிகரத்தை தொடு. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
71- நூல் பல கல் மாதவனும், ராகவனும் நல்ல நண்பர்கள். முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தவர்கள். இருவருக்கும் ஒரே ஒரு விசயத்தில் வேறு பட்டவர்கள். மாதவன் பள்ளி பாடப் புத்தகம் படிப்பதுடன், செய்தித்தாள், நூலக புத்தகம் என படிப்பான். நூலகத்தில் தான் எடுத்து வரும் புத்தகத்தை படிப்பதுடன் இல்லாமல், ராகவன் எடுத்து வரும் புத்தகத்தையும் வாங்கி படித்து விட்டு…. புத்தகத்தில் உள்ள கதை, கருத்துகளை ராகவனுக்குச் சொல்லவும் செய்வான். ராகவன் பாடத்தில் முதல் மதிப்பு வாங்கினாலும் பிற புத்தகங்களைப் படிக்க மாட்டான். அதனால், படிப்பு வேலை என சின்ன வட்டத்திற்குள் அவன் வாழ்க்கை அடங்கி விட்டது. மாதவன் பல புத்தகங்கள் படிப்பதால் பல கருத்துக்களை சிறிய வயதிலேயே தெரிந்து கொண்டு பிறருக்கும் சொல்வதால் அவன் நட்பு வட்டம் பெரியதாகிக் கொண்டு வந்தது. வாழ்க்கையை நெறியுடனும், நல் வழியிலும் அமைத்துக் கொண்டான். இதைத்தான் ஔவையாரும்…
புத்தகம் நல்ல நண்பன்!அறிவு பெரிய செல்வம்!கடவுள் கொடுத்த அறிவை வளர்த்துக் கொள்!தினமும் புதிது கற்றுக் கொள்!கேள்வி கேட்க தயங்காதே!அறிவு உன்னை உயர்த்தும்.இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.
14-மந்திரவாதியும் பவள வள்ளியும் “தாத்தா எங்க பள்ளியில் மேஜிக் நிபுணர் ஒருவர் மணலை சர்க்கரை ஆக்கி தந்தார்கள்” என பெருமையுடன் சொன்னால் ரமேஷ். அப்படியா! என ஆச்சரியத்துடன் கேட்டார் தாத்தா. அப்புறம் என்ன செய்தார் என கேட்டார் தாத்தா.ஒரு பூவில் பல பூக்கள் வரவைத்தார். தண்ணீரை தெளித்து மல்லிகை பூ வர வைத்தார் என்றான். அப்படியா! என கேட்டுக் கொண்ட தாத்தா. மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா? என்றார். இல்லை என எல்லாரும் கூறினார்கள். இது எல்லாம் தந்திரம் தான் உங்களுக்கு மந்திரவாதியைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். என்றவர் கதை சொல்ல ஆரம்பித்தார். பவள நாட்டு மன்னன் ராஜேந்திரனுக்கும், ராணி புஷ்பவள்ளிக்கும் பிறந்த ஒரே வாரிசு ‘பவளவள்ளி’. அவள் நாள் ஒரு மேனியாகவும் பொழுதொரு வண்ணமாகவும் வளர்ந்தாள்.ஆடும் மயிலாகவும், பாடும் குயிலாகவும், ஓடும் மானாகவும் இருந்தாள் பவளவள்ளி. பருவ மங்கையானாள். எல்லா கலைகளையும் கற்றுத் தேர்ந்தவள் அழகில் தனக்கு இணை…
பயம் வந்தால் நினைத்துக் கொள்!நீ தனியாக இல்லை!கடவுள் உன் அருகில் இருக்கிறார்! தைரியமாக ஒரு அடி எடு அடுத்த வழி தெரியும்!நம்பிக்கை உன்னை வழி நடத்தும். இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.