முயற்சி செய்யும் குழந்தை ஒருபோதும் தோற்காது! கடவுள் விடா முயற்சியை ஆசீர்வதிப்பார்!ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்! சிறு முன்னேற்றம் கூட வெற்றி!நம்பிக்கையுடன் தொடர். இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
16-ஆயிரம் புலி தங்கை தாத்தா… தாத்தா என ஓடி வந்தான் ரகு. என்ன ரகு!என்றார் தாத்தா.தாத்தா நீங்களே சொல்லுங்கள். ரவி விட்டிற்கு அவன் பெரியப்பா வந்து இருக்கிறார். நல்லா படி என்று கூறினார் தாத்தா.“அதற்கு இவன் போங்க பெரியப்பா! நீங்க ஒன்னும் எனக்குச் சொல்ல வேண்டாம். எனக்கு தெரியும்” என பேசுகிறேன் தாத்தா. பெரியவர்கள் சொன்னா கேட்கணுமில்ல தாத்தா, என பெரிய மனிதன் போல் பேசினான் ரகு.பெரியவர்கள் சொல்லைக் கேட்காததினால் ஒரு சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை விளக்க உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன் என சொன்ன தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். *****மகத நாட்டை ராஜேந்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு மூன்று மகன்கள். அதில் ரவிக்குமார்,முத்துக்குமார் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. மகன் ஜெயக்குமார் மட்டும் திருமண வயது வந்தும் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்தான். அதற்கு காரணம் தனது நண்பர்கள் கூறிய தகவல்…
சிறிய உதவி கூடப் பெரியது!மற்றவருக்கு உதவி செய்! கடவுள் கருணையை நேசிக்கிறார்! நல்ல மனம் வளர்த்துக் கொள்! உதவும் கை உயர்ந்தது! அன்பு என்றும் நிலைக்கும். இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.
நாம் கற்பக் கிரகத்தில் போய் கொழுக்கட்டையை சாப்பிட்டு கோயிலை அசுத்தப் படுத்தியதால் தான் கோயில் குளத்து நீர் வற்றி இருக்குமோ? என ‘திடீர்’ என மண்டையில் உரைத்தது. தெரியாமல் செய்து சாப்பிட்டது தப்புதான். அதுவும் இல்லாமல் கோயிலுக்குள் வைத்து சாப்பிட்டது அதைவிட தப்புதான். என்ன செய்வது விடிந்தால் நம்மை பிள்ளையார் காட்டிக் கொடுத்து விடுவாரோ! என்ற பயத்தில் திலகத்திற்கு தூக்கம் வரவில்லை. பயத்தில் திலகம் புரண்டு… புரண்டு படுத்து கொண்டிருந்தாள். “என்ன பிள்ளே தூங்காமல் புரளுகிறாய் என்றார் திலகத்தின் கணவன் குமார்.” “ஒன்னும் இல்லை மச்சான் லேசாக தலைவலி” அதுதான் என தலைக்குப்புற படுத்துக் கொண்டால் திலகா.” மாமியாருடன் கேட்பதற்கு வெட்கப்பட்ட எனக்கு ஊரார் முன் வெட்கப்பட்டு நிற்கும் படியாகி விடுமோ என்று அஞ்சினாள் திலகா. கோயிலுக்கு அந்தி காலைப் பொழுதில் சென்றவள் கதவை சாத்திக் கொண்டு “பிள்ளையார் அப்பா” நான் செய்தது தப்புதான் தெரியாமல் செய்துவிட்டேன். திரும்பவும் குளத்தில் நீர்…
கோபத்தை குறைத்து அமைதியை அதிகப்படுத்து!கடவுள் அமைதியில் பேசுகிறார்!நிதானமாக சிந்தி நல்ல முடிவுகள் எடு!மகிழ்ச்சி நீடிக்கும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
உன்னை மற்றவருடன் ஒப்பிடாதே!நீ தனித்துவமானவன்! கடவுள் உன்னை சிறப்பாக படைத்தார்! உன் திறமையை அறிந்து கொள்! நம்பிக்கையுடன் வளர்! நீ நட்சத்திரமாக பிரகாசிப்பாய். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
72-நெற்பயிர் விளை ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். விவசாயி “சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்”.“ விவசாயிகள் கிராமத்தின் முதுகு எலும்புகள்” சுழலும் உலகில் பல தொழில்கள் இருந்தாலும் அது உழவுத் தொழிலை நம்பியே இயங்குகிறது.ஏர் தொழில் எத்தனை கஷ்டம் இருந்தாலும் விவசாயமே சிறந்தது. வேறு தொழில்கள் செய்பவர்கள் பசியையும் போக்குபவன் விவசாயி. எனவே, விவசாயி தான் உலகம் என்ற வண்டிக்கு அச்சாணி.நமது நாட்டில் அரிசியை அதிகமாகப் பயன் படுத்துவதால் நெல் அதிகமாக பயிரிடப் படுகிறது. ஔவையாரும் “நெற்பயிர் விளை” என்று கூறி இருக்கிறார். என்று மாணவர்களுக்குப் புரியும் படி பாடம் நடத்தினார் ஆசிரியர்.
15- பிள்ளையாரும் கொழுக்கட்டையும் தாத்தா நடந்து வந்து கொண்டிருந்தார்.ராணியும், வாணியும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். “என்ன? குழந்தைகளே!” என தாத்தா கேட்டார். தாத்தா! ராணியை சாமி கும்பிட வா என கூப்பிட்டேன் தாத்தா.பெரிய ‘சாமி’ போடி என்று கூறுகிறாள். “அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருக்க வேண்டியது தானே” என்றார் தாத்தா.“என்னையும் கேலி செய்கிறாள். அதுதான் எனக்கு கோபமாக வருகிறது தாத்தா” என்றாள் வாணி. ராணி பேசாமல் நின்றாள். “இருவரும் என்னுடன் வாருங்கள் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். முடிவில் ராணி பதில் சொன்னால் போதும்” என அழைத்து வந்தார் தாத்தா.பின் அமர்ந்து கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஊரில் ராஜாம்மா என்ற பெண் இருந்தாள். அவளுக்கு குமார் என்ற மகன் இருந்தான். குமார் சிறு பையனாக இருக்கும்போதே அவன் தந்தை இறந்து போனார். ராஜம்மா கணவர் போனபின் சகலமும் தன் மகன் தான் என வாழ்ந்து வந்தாள். வயலுக்கு…
தரையில் இறங்கிய ரவிவர்மா கம்பளத்தின் முன் நின்று, “தாயே காளிகா தேவி உன் கருணையினால் நான் இங்கு வர முடிந்தது குகைக்குள் செல்ல எந்த தடையும் வரக்கூடாது” என வேண்டினான். பின் குகைக்குள் செல்லத் தொடங்கினான் ரவிவர்மா. எந்த தடையும் இன்றி குகைக்குள் சென்றான். அங்கு ஒரு பெட்டி இருப்பதைக் கண்டான். அதைப் பார்த்த ரவிவர்மா அதிர்ச்சியுற்று பின் நகர்ந்தான். பெட்டியைச் சுற்றி சிறிதும், பெரிதுமாக ஏகப்பட்ட நாகப்பாம்புகள் படம் எடுத்து ஆடியது. “காளியின் அருள் பெற்ற நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. இப்போது பெட்டியை விட்டு நீங்களாக நகர்ந்து கொள்ளுங்கள்” என்றான்.“ தர்மம் நிலைக்க நான் இங்கு வந்து இருக்கிறேன். எனக்கு அன்னை காளிகா தேவி அருள் கிடைத்தமையால் அன்னை வழி காட்டி இங்கு வந்திருக்கிறேன். நீங்களும் எனக்கு வழிவிட வேண்டும் என சொன்ன ரவிவர்மா மண்டியிட்டு வணங்கினான்”. அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்ட பாம்புகள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தன.“ அன்னையை…
இன்று நீ கற்ற சிறு விசயம் நாளை பெரிய பயன் தரும் கடவுள் உழைப்பை வீணாக்க மாட்டார் ஆர்வத்துடன் படி மகிழ்ச்சியுடன் வளர் சிகரம் உனக்காக காத்திருக்கிறது. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.