“தம்பியும் நான் களி தருகிறேன் நான் கேட்டது எல்லாம் தர வேண்டும். அப்படித் தருவது என்றால் தான் களி தருவேன். இல்லை என்றால் தரமாட்டேன்” என்று கூறிவிட்டான்.
இருக்கும் பசியில் இவன் வேறு எனமுணு…முணுத்துக் கொண்டு, சரி நீ என்ன கேட்டாலும் தருகிறோம். எங்களுக்கு களி கொடு” என்று உறுதி சொன்னவுடன்…
நிறைமதியனும் களியும், கொக்கும் கறியும் கொடுத்தான்.
சாப்பிட்டவுடன் பயணத்தை ஆரம்பித்தார்கள்.
காட்டுக்குப் பக்கத்தில் ஒரு கழுதை மேய்ந்து கொண்டு இருந்தது. இதைப் பார்த்த நிறைமதியன், “அந்த கழுதை எனக்கு வேண்டும் அண்ணா” என்று கேட்டான்.
“கழுதைக்காரன் வந்தால் வண்ணாந் தொறையில் வைத்து அடிப்பான் வேண்டாம்” என்றார்கள்.
அப்ப என் தவிட்டுக் களியும் கொக்குக் கறியையும் கொடுங்கள் என்றான்.
இவனுடன் தொந்தரவாகப் போச்சு என்று கழுதையைப் பிடித்து வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள்.
சிறிது தூரம் போயிருப்பார்கள். ஒரு தென்னை மரம் சாய்ந்து கிடந்தது. அதைப் பார்த்த நிறைமதியன். “எனக்கு இந்த மரம் வேண்டும்” என்று அடம் பிடித்தான்.
இவ்வளவு பெரிய மரத்தை எப்படி தூக்கிச் செல்வது என்று கூறவே!
“அப்ப என் தவிட்டுக் களியும், கொக்குக் கறியையும் கொடு” என்று கேட்டு அழ ஆரம்பித்தான்.
“இவனுடன் தொந்தரவாப் போச்சு” என்று அலுத்துக் கொண்டு மரத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள்.
சிறிது தூரம் போகவும் பெரிய எறும்புகள் போய் கொண்டு இருந்தது. அதைப் பிடித்து தரும்படி கேட்டான் நிறைமதியன்.
வேறு வழி இல்லாமல் எறும்பையும் பிடித்து கொடுத்தார்கள்.
சிறிது தூரம் வரவும் ஒரு குகை தெரிந்தது. அதற்குள் போய் பார்க்கலாம் என்று போய் பார்த்தார்கள்.
அங்கே தங்கை கமலா… அழுது கொண்டு இருந்தாள். தங்கையைப் பார்த்ததும் கமலா என்று கட்டிப்பிடித்து அழுதார்கள்.
தங்கை பயத்துடன் அண்ணா! சிங்கம் வேட்டைக்குப் போய் இருக்கிறது. வரும் நேரம் ஆகிவிட்டது. எனவே, மேலே ஒரு குகை இருக்கிறது, அதில் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள் என்று தங்கை கூறினாள்.
அண்ணன்கள் எல்லோரும் போகப் போனார்கள்.
உடனே, நிறைமதியன் எனக்கு எறும்பு, கழுதை, மரம் எல்லாம் எடுத்து வர வேண்டும் இல்லை என்றால் என் “தவுட்டுக் களியையும் கொக்கு கறியையும்” தாங்க என்று அடம்பிடித்தான்.
“இவனுடன் தொந்தரவு தாங்க முடியவில்லை” நேரம், காலம் தெரியாமல் என்றவர்கள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மேலே போனார்கள்.
சிறிது நேரம் கழித்து சிங்கம் குகைக்கு வந்தது.
என்ன…. மனித வாடை அடிக்கிறது. என்று மோப்பம் பிடித்துக் கொண்டு வந்தது.
சிங்கத்தின் குரல் குகையில் கேட்ட உடன், எனக்கு தண்ணீர் வேண்டும் அண்ணா! என கேட்டான் நிறைமதியன்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.