Author: கவிமணி பாலா கிருஷ்ணன்

தேடிக் கிடைப்பது தான் தேன்! தேடாமல் கிடைப்பது எல்லாம் வீண் !தேடிக் கிடைப்பது எல்லாவற்றிற்கும் ஒரு மதிப்பிருக்கும் உயர்வான எல்லாமே தேடிக் கிடைத்ததாகத்தான் இருக்கும்! இல்லாத ஒன்றைத் தேட ஒரு தூண்டல் வேண்டும் துடிப்பாக ஒரு துணிச்சல் வேண்டும்! கிடைக்கும் என்ற நம்பிக்கை வேண்டும்!தேடல் ஒரு கலை அது குரு இன்றிவழி இன்றி முறை இன்றி கலைகளைக் கற்றுக் கொள்ள நாம் கற்க வேண்டிய கலை…. தேடல் கலை தேடல் ஒரு தவம் ஒன்றை நோக்கி ஒருமித்த கருத்தில் செய்யும் தவம் அல்ல…ஒன்றை அடைய பல வற்றை அறிந்து பார்க்கும் தேடல் தவம்…! தேடல் சுகம் !தெரியாதவையை தேடிச் செல்லும் போது புரியாதவை புரியப்படும் போது அறியாதவைஅறியப்படும்போது அனைத்தும் தெரியப்படும் போது தேடல் ஒரு சுகம்.

Read More

நீ எழுந்து நின்றாலே உன்னை தட்டி விட ஒரு கூட்டம் வரும் உன்னை வீழ்த்த ஆயிரம் சூழ்ச்சிகள் நடக்கும் உன்னை முறியடிக்க முயற்சிகள் நடக்கும் உன்னை மூழ்கடிக்க முற்றுகை இடுவார்கள் உன்னை புதைத்து விட போட்டி போடுவார்கள் எல்லாவற்றையும் தாண்டி நீயாக மட்டுமே எழ வேண்டும் உன்னால் மட்டும் என்ற உறுதியோடு எழு அது உன்னால் முடியும் உறுதியோடு எழுந்து வா…!

Read More

திரை இசை பாடல் கூட கேட்க முடியாமல் வெளியேறிய நான் இன்று நீ பாடும் கர்நாடக இசையை ஏன் இப்படி ரசித்து கொண்டு இருக்கிறேன். உன் குரலா? இல்லை அழகா? ஈர்க்கும் விழியா ?இல்லை இசையா? நீ பாடும் ராகம் தெரியவில்லை நீ பாடும் பாசை புரியவில்லை ஆனாலும், உன் உதட்டு அசைவுகளுக்கு தலை அசைத்துக் கொண்டிருக்கிறேன். இசையை நேசித்த நீ! சபையில் பாடிக் கொண்டு இருக்க… நான் மட்டும் உன்னை நேசித்துக் கொண்டு கதவு ஓரம் நின்று கொண்டு இருக்கிறேன். நீ! பாடும் போது புன்னகையோடு பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக….!

Read More

காத்திருக்கிறேன்! ஆண்டவன் அனுப்பவில்லை இன்னும் பதில் !நான் ஒரு வழியில் செல்ல எண்ணி ஆண்டவனுக்கு மனு போட்டேன்! இன்னும் பதில் வந்து சேரவில்லை! அதற்குப் பொருள் என்னதான் இருக்கும். நான் அவ்வழி செல்லக்கூடாதா? நான் வந்த வழியே செல்ல வேண்டுமா?இல்லை இதை விட ஒரு நல்ல வழியில் செல்ல வேண்டுமா? இல்லை எனக்கென்று நானே ஒரு வழி வகுக்க வேண்டுமா ?ஆண்டவனின் பதில் என்னவாய் இருக்கும். எதற்கு இந்த தாமதம்?காத்துக் கொண்டுஇருக்கிறேன்! உன் பதிலுக்காக….!

Read More

ஆசையின் ஆழத்தை தேடுதலின் போது அறிந்து கொள்ளலாம். காதலின் ஆழத்தை பிரிவின் போது அறிந்து கொள்ளலாம். நட்பின் ஆழத்தை துயரின்போது அறிந்து கொள்ளலாம். நேர்மையின் ஆழத்தை நெருக்கடியின் போது அறிந்து கொள்ளலாம்.நம்பிக்கையின் ஆழத்தை தளர்வடையும்போது அறிந்து கொள்ளலாம். ஒழுக்கத்தின் ஆழத்தை கட்டுப்பாட்டின் போது அறிந்து கொள்ளலாம். இப்படி எல்லா ஆழத்தையும் அறிந்து கொள்பவன் தான் உயரத்தில் பயமின்றி பக்குவமாய் பதட்டமின்றி பயணம் செய்து நிலைத்து நிற்க முடியும்.

Read More

எது நடக்கக் கூடாதோ! அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அது நடப்பதே கிடையாது. எதைத் தேடிச் சென்றேனே! அது கிடைக்கவே இல்லை. எது கிடைக்கவில்லையோ! அதை மறக்க முடியவில்லை. எதை மறக்கிறேனோ !அதுவே எனக்கு கிடைக்கிறது. எது கிடைக்கிறதோ! அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதை ஏற்க முடியவில்லையோ! அதுவே பழகி விடுகிறது.எது பழகிவிடுகிறதோ! அதுவே ஞாபகத்தில் இருக்கிறது. எது ஞாபகத்தில் இருக்கிறதோ! அதுவே அனைத்தும் தருகிறது. எதை தேடிச் சென்றேனோ! அதைவிட எது கிடைத்ததோ! அதுவே சிறந்தது.

Read More

கண்இல்லாதவனுக்கு இரவு பகல் பேதம் இல்லை காதில்லாதவனுக்கு இறைச்சலும் இசையும் வேறு இல்லை வாய் இல்லாதவனுக்கு எந்த மொழியும் தடை இல்லை மூளை இல்லாதவனுக்கு முயற்சியும் பயிற்சியும் பயன் இல்லை இல்லாதவர்கள் கூட இல்லை என்பதை மறந்து விட்டு இருப்பதை வைத்து வளர்ந்து நிற்கும் போது எல்லாம் இருந்தும் நீ ஏன் இல்லை இல்லை என்று இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறாய் இருப்பதை பயன்படுத்த துவங்கினார் உண்மையில் இல்லை என்பதுஇல்லாமலே போய் விடும்.

Read More

இவர்கள் எப்போதும் இப்பஇவர்கள் இப்படித்தான்டித்தான் இல்லாத ஒன்றை உருவாக்கி அதையே இருப்பதாய் உருவம் கொடுத்து உருவத்தை ஊதி ஊதி பெரிதாக்கி ஊசியால் குத்தி இரத்தம் உருவாக்கி புரை ஓடியபின் முகம் சுழிக்கும் இவர்கள் எப்போதும் இப்படித்தான்…..!

Read More

உணர்வாலே பெருமிதம் கொள்கிறேன் என் கரம் கூப்பி உனை வணங்குகிறேன்.தமிழாலே தழைத்த என் குலத்தின் நன்றியினை நீத்தமும் நான் நினைக்கின்றேன். தமிழாலே உன்னைப் பாடி தலைமுறைகள் பாடட்டும்…. தமிழ் பண்பாடு மாறாது என்னாலும் ஓங்கட்டும்.தமிழ் பேசும் புண்ணியத்தை தரணியில் எனக்களித்த தமிழ்த்தாயே உன்னை நினைத்து என்றும்…. பெருமிதம் கொள்வேன்.

Read More

முதன்மை என்ற அகரமே தமிழ்! முருகன் என்ற வெற்றியே தமிழ்!முயற்சி என்ற தன்னம்பிக்கையே தமிழ்! முடியும் என்ற நம்பிக்கையே தமிழ்! உருக்கம் என்ற அன்பே தமிழ்! உறுதி என்ற வேரே தமிழ்! உயர்வு என்ற கனியே தமிழ்! உழைப்பு என்ற வேர்வையே தமிழ்! நல்வினை என்ற தவமே தமிழ்! நல்லறம் என்ற ஒழுக்கமே தமிழ்! நன்மை என்ற மேன்மையே தமிழ்! நட்பு என்ற நட்சத்திரமே தமிழ்! பரிதி என்ற ஒளியே தமிழ்! பரிசு என்ற கொடையே தமிழ்! பரிட்சை என்ற ஆராய்ச்சியே தமிழ்! பண்பு என்ற பரிவே தமிழ்! அகல் என்ற விளக்கே தமிழ்! அகக்கண் என்ற ஞானமே தமிழ்! அடித்தளம் என்ற திடமே தமிழ்! அடக்கம் என்ற ஆதி அறிவே தமிழ்! விருத்தி என்ற சித்தியே தமிழ்! விரித்தல் என்ற விளக்கமே தமிழ்! விழிப்பு என்ற தெளிவே தமிழ்! விளைவு என்ற முதிர்ச்சியே தமிழ்!

Read More