காத்திருக்கிறேன்!
ஆண்டவன் அனுப்பவில்லை இன்னும் பதில் !

நான் ஒரு வழியில்
செல்ல எண்ணி ஆண்டவனுக்கு
மனு போட்டேன்!

இன்னும் பதில் வந்து சேரவில்லை!

அதற்குப் பொருள்
என்னதான் இருக்கும்.

நான் அவ்வழி செல்லக்
கூடாதா?
நான் வந்த வழியே
செல்ல வேண்டுமா?
இல்லை இதை விட
ஒரு நல்ல வழியில்
செல்ல வேண்டுமா?

இல்லை எனக்
கென்று நானே
ஒரு வழி வகுக்க
வேண்டுமா ?

ஆண்டவனின் பதில் என்னவாய் இருக்கும்.
எதற்கு இந்த தாமதம்?
காத்துக் கொண்டு
இருக்கிறேன்!

உன் பதிலுக்காக….!

Share.

Leave A Reply