கண்இல்லாதவனுக்கு
இரவு பகல் பேதம் இல்லை

காதில்லாதவனுக்கு இறைச்சலும் இசையும்
வேறு இல்லை

வாய் இல்லாதவனுக்கு
எந்த மொழியும் தடை இல்லை

மூளை இல்லாதவனுக்கு முயற்சியும் பயிற்சியும்
பயன் இல்லை

இல்லாதவர்கள் கூட
இல்லை என்பதை
மறந்து விட்டு
இருப்பதை வைத்து
வளர்ந்து நிற்கும் போது எல்லாம் இருந்தும்
நீ ஏன் இல்லை
இல்லை என்று
இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறாய்

இருப்பதை பயன்படுத்த துவங்கினார் உண்மையில் இல்லை என்பது
இல்லாமலே
போய் விடும்.

Share.

Leave A Reply