தேடிக் கிடைப்பது தான் தேன்! தேடாமல் கிடைப்பது எல்லாம் வீண் !

தேடிக் கிடைப்பது எல்லாவற்றிற்கும்
ஒரு மதிப்பிருக்கும்
உயர்வான எல்லாமே
தேடிக் கிடைத்ததாகத்தான் இருக்கும்!

இல்லாத ஒன்றைத் தேட
ஒரு தூண்டல் வேண்டும் துடிப்பாக ஒரு துணிச்சல் வேண்டும்!
கிடைக்கும் என்ற
நம்பிக்கை வேண்டும்!

தேடல் ஒரு கலை
அது குரு இன்றி
வழி இன்றி
முறை இன்றி
கலைகளைக் கற்றுக் கொள்ள நாம் கற்க வேண்டிய கலை….

தேடல் கலை
தேடல் ஒரு தவம்
ஒன்றை நோக்கி
ஒருமித்த கருத்தில்
செய்யும் தவம் அல்ல…

ஒன்றை அடைய
பல வற்றை
அறிந்து பார்க்கும்
தேடல் தவம்…!
தேடல் சுகம் !

தெரியாதவையை தேடிச் செல்லும் போது
புரியாதவை
புரியப்படும் போது அறியாதவை
அறியப்படும்போது அனைத்தும்
தெரியப்படும் போது
தேடல் ஒரு சுகம்.

Share.

Leave A Reply