Author: கவிமணி பாலா கிருஷ்ணன்

இன்னும் ஒரு வழி பிறக்கும் அது சொல்லும் படி இருக்கும் உலகை வெல்லும் உளி கிடைக்கும் தடை உடைப்போம் வா! எண்ணம் வழி நடத்தும் நம்மை திண்ணம் செயல் படுத்தும் நம்மை விண்ணும் தலை இடிக்கும் வரைவீறுகொண்டு எழுவோம் வா!உப்பு நம்மை உருக்கும் என்றும் நட்பு நம்மை இணைக்கும் நம் மொத்த கை இணைக்கும் ஒன்றாய் உச்சிவான் அடைவோம் வா! பிரிவினை உடைத்திருவோம் நாம் ஒற்றுமை நிலைத்திடுவோம் நாம் நிச்சயம் ஒன்று பட்டால் நம் இலட்சியம் ஜெயித்திடுவோம் வா! சூழ்ச்சிகள் நம்மை சூழும் என்றும் சூழ்நிலை தினம் மாறும் அன்றும் பிரியாது இணைந் திருந்தால் நாம் இமயத்தை வென்றிடுவோம் வா! தினம் தினம் கூட்டம் எழும் நம்மை வெல்ல போட்டி இடும் ஒற்றுமையாய் எதிர் கொண்டு நம் வெற்றியை உறுதி செய்வோம் வா!

Read More

உடன் பிறந்தவற்றுள் அவைகளும் உண்டு எப்போதும் உடன் இருந்தவைகள் அவை அவைகளுக்கும் என்மீது அலாதி பிரியம் உண்டு நான் எங்கும் சென்று எதை மறந்தாலும் தானாய் வந்து ஒட்டிக்கொள்ளும் நான் கண்டிராத மகிழ்ச்சிகள் பெற்றிடாத வெற்றிகள் என நான் அறிந்திடாத பல என்னைவிட்டுத் தள்ளியே இருந்தன. இல்லாத ஒன்றின் மீது தான் காதல் வரும் எனக்கும் காதல் வந்தது என்னிடம் இல்லாதவைகளில் மீது காதலின் ஆற்றலை நான் உரைக்க தேவை இல்லை எனக்குள் பிறந்த உற்சாகம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றியது என்னோடு ஒட்டிப் பிறந்திருந்தவைகளை அது ஓட்டியது காதலிப் பவர்களுக்குத்தான் தெரியும் காதலில் வெற்றி அடைவது அவ்வளவு சுலபம் இல்லை என்று நான் வெற்றியையே காதலாய் அடையத் திரிகிறேன் என் நிலைமை கேட்கவா வேண்டும் உடன் பிறந்தவையோ பிரிந்து செல்ல மறுக்கிறது காதலிப்பவையோ கண்டு கொள்ள மறுக்கிறது நான் துண்டு துண்டாய் போயிருந்தால் கொஞ்சம் நிம்மதியாய் இருந்திருக்கும் நான் துவண்டு…

Read More

எப்படி நான் இடிந்துவிட முடியும் முழுமையாய் மூழ்கிய பின் ஒதுங்கி விட முடியுமா? மொழிக்கு இனிமையாய் உணர்விற்கு உணர்ச்சியாய் இன்பமழையில் நனையாதிருக்க விதிவிலக்கா இசையேசெவி போதுமென்று உரைத்ததே இல்லை இசை இல்லாத இடம் உண்டென்றால் அங்கு உயிர்கள் இருக்காது நீ இல்லாத இடத்தில் கடவுளும் இருக்காது அமைதி தவழும் அற்புத இடங்களில் நீயே நிறைந்து இருக்கிறாய் இசையே! எது உச்சம் எது மிச்சம் எது குற்றம் எது மோட்சம் நதிகளில் சுருதி அருவிகளில் லயம் குயில்களின் சுரம் அலைகளின் ஆலாபனை நொடிகளின் சங்கதி மனிதனின் நிரவள் உயிர்களின் தானம் இறைவனின் கற்பனை எறும்புகளின் ஸரளியும் காதலின் ஜண்டையும் மலைகளில் உச்சஸ்தாய் பாதாளத்தின் மந்திரஸ்தாய் கோலங்களின் தாட்டு விடியலின் அலங்காரம் குழந்தையின் கீதம் இளமையின் வர்ணம் உலகத்து கிருதி உயர்களின் கீர்த்தனை உளமார உணர்ந்தபின் எண்ணி எண்ணி மனதார மகிழ்கிறேன் இசையின்றி அசைவில்லை இசைவிற்குக் காரணம் இறையின்றி வேறில்லை அருள் ஒளியை இசையினில்…

Read More

அறிந்து கொள்ள ஆயிரம் உண்டு தெரிந்து கொண்டவரைப் போதும் என்றால் நீ அங்கேயே நின்று கொண்டு இருப்பாய் எதைத்தேடி எங்கு அலைந்தாலும் எடுத்துக் கொள்ள ஏராளமாய் உண்டு புதைந்திருக்கும் மண்ணில் இருந்து இல்லாத வானம் தாண்டி எல்லாமும் ஏதோ ஒன்றை தந்து கொண்டுதான் இருக்கிறது கொடுப்பது கடவுள் தான் பெறுபவன் மனிதன் தான் மனிதனாய் இருந்து நீ எவ்வளவும் பெற்றுக் கொள்ளலாம் கட்டி ஆளலாம் எடுத்துச் செல்வதற்கு இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது ஆனால் நீ கடவுளாய் மாறி கொடுத்துச் செல்வதற்கு உன் உடல் உறுப்புகள் உள்ளன.மனிதனாய் இறந்து விடாதே கடவுளாய் வாழ்ந்திடு.

Read More

வீசும் தென்றல் காற்றுக்குள் சூறாவளியும் சுழலும் உண்டு- நதி பாய்ந்து செல்லும் அழகிற்குள்ளும் ஊரைக் கொல்லும் வெள்ளம் உண்டு. மழை தூருரம் மென்மைக் குள்ளும் இடியும், புயலும் இருப்பதுண்டு -கடல் அலையின் சிரிப்பிற்குள்ளும் கூட பேரலையின் கோபம் உண்டு. சிகரம் தொட்ட மலைகள் கூட நெருப்பை வாரி இறைப்பதுண்டு- இருக்கும் சம நிலமும் கூட பிளந்து போகும் தன்மை உண்டு. இரக்கம் உள்ள உயிர்க்குள்ளும் கொலை செய்யும் சினம் உண்டு- மனிதனுக்கு சிரிக்க தெரிந்த போதும் கூட அரக்க குணம் அதிகம் உண்டு. இயற்கை தந்த அனைத்திலுமே இன்ப துன்பம் இரண்டும் உண்டு -அதை புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தால் பூவுலகில் புகழும் உண்டு.

Read More

என்ற துவங்கியது என்று யாரும் சொல்வதற்கில்லை எதற்கு துவங்கியது என்று கூறி முடிப்பதற்கு இல்லை துடித்துக் கொண்டே இருப்பது தான் இதன் இயல்பு இதயத் துடிப்பென்று யாரும் தவறாய் கருதாதீர் இது கடல் அலையின் துடிப்பு கரு விதையின் துடிப்பு எங்களுக்குள் பொதுவான தனித்துவம் நிறைந்ததாக துடிப்பது கடவுள் என்று பலர் சொல்வார்கள் முயற்சி என்று பலர் சொன்னார்கள் நம்பிக்கை என்று பலர் உரைத்தார்கள் உழைப்பு என்று பலர் வென்றார்கள் காதல் என்று பலர் எண்ணங்கள் நட்பு என்று பலர் உணர்ந்தார்கள் விடியல் என்று சிலர் நினைப்பார்கள் புரட்சி என்றம் உரைப்பார்கள்கவிதை என்றே எழுதுவார்கள் அறிவு என்று மட்டும் எண்ணுவார்கள் ஞானம் என்றும் கூறுவார்கள் எதுவா இருந்தாலும் முடிவில்லாமல் விழித்துக் கொண்டே ஒவ்வொரு வனுக்குள்ளும் தொடர்ந்து கொண்டு இருப்பது அந்த… உயிர் துடிப்பு.

Read More

இதற்கு யார் காரணம் எனக்குள் இருந்த கோபத் தீ எரிமலையாய் வெடிக்க…என் உள்ளத்தில் நெருப்பிட்டது யார்? அதை உள்ளுக்குள் உரம் இட்டது யார்? சமுதாயத்தைக்குப்பையாக்கிகுளிர் காய்வது யார்? கரியானது யார்?சரியாகப் பார் நீ சருகா !விறகா! சாம்பலா! என்று யோசிக்காதே! இதமாக இருக்கிறது என்று நெருப்புக்குள் அமர்ந்து கொண்டு இருக்கிறாயே!நீ குளிர் காய்பவன் என்றுதான் உன்னை எண்ணுகிறாய்! இல்லை என்பதை உணர்ந்து கொள் உற்றுப்பார்! நீ எரிந்து விட்டவனா? எரியப் போகிறவனா?என்று…. அணுவைப் பிளந்து வெளிவரும் ஆற்றல் எங்கே!இருளைக் கிழித்து ஒளியாய் வெளிவரும் என் ஆற்றல் எங்கே! வானந் தொட்டு முத்தம் இட்டு மேலும் தாண்டி நாளும் செல்ல என் ஆற்றல் எங்கே? என் விசித்திர ஆற்றல் எல்லாம் ஏன் வீணாய்இருக்கிறது என் எரித்திடும் கோபம் எல்லாம் ஏன் கொதிக்காமல் குளிர்கிறது எல்லா வெற்றிக்கும் யார் காரணம்?இதுதான் காரணம் என்று எதைச் சொல்வது இவன்தான் காரணம் என்று எப்படி சொல்வது நம்…

Read More

என்று துவங்கியது என்று முடிந்துவிடப் போகிறது. நேற்று அரிதெனத் தோன்றியது இன்று பெரிதெனத் தோன்றியது நாளை மறந்தே போகக்கூடும். அதுவரை அந்த ஆசை இருந்தது இதுவரை இந்த ஆசை இருக்கிறது எதுவரை எந்த ஆசை தொடரப் போகிறது. மனதின் மகிழ்சிக்காகத்தான் இத்தனை ஓட்டமும்இத்தனை சிரமப்பட்டு என்ன இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. மனதை மகிழ்விக்க இத்தனை சிரமமா? மகிழ்ச்சியின் அளவெல்லாம் மனதைப் பொருத்ததே! இன்று நீ இந்த ஆடை உடுத்த வேண்டும் என்று எண்ணிவிட்டால் வேறு எந்த ஆடையும் உன்னை மகிழ்விக்காது. இன்று நீ விரதம் இருப்பதாய் உறுதி கொண்டு விட்டால் எத்தனை பெரிய விருந்தும் உன்னை மயக்கி விடப் போவது இல்லை. உண்மை இதுதான் மகிழ்ச்சியின் அளவுகோள் மனதைப் பொருத்ததே! மனதை எளிமைப் படுத்து எல்லா வற்றையும் சமப்படுத்து சாதாரணமாகப் பார்.சிரித்துக் கொண்டே இரு மன மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மட்டும் அதற்கு கட்டளை…

Read More

மாணவர்களே நீங்கள் ஒரு பானை,குடம், ஒரு காலி பாத்திரம்.உங்களைச் சுற்றிலும் எல்லாமும் சிதறி கிடைக்கிறது. எது தேவையோ நிரப்பிக் கொள்ளுங்கள். நீங்கள் நிரப்பப் பட்டால் உங்களை அள்ளி எடுக்க ஆயிரம் கரங்கள் ஓடிவரும். நீங்கள் உயரமான இடத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட போட்டி போடுவார்கள் உங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். காலி பாத்திரம் மூலையில் கவிழ்ந்து கிடக்கும் நிரம்பிய பானையோ ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும். நீங்கள் உங்களை நிரப்பிக் கொள்ளுங்கள்உங்களை இந்த உலகம் உயரத்தில் உட்கார வைக்கும். உள்ளதும் இல்லாததுமான உணர்வுகளை விட்டுவிட்டு உண்மைகள் இல்லாத உறவுகளை விட்டுவிட்டு நிலையில்லாத நட்பைதள்ளி வைத்துவிட்டு உங்களை நீங்களே உற்றுப் பாருங்கள். உங்களுக்கு எவ்வளவு இடம் இருக்கிறது உங்களைச் சுற்றி எவ்வளவு இடம் இருக்கிறது. உங்களைச் சுற்றி எவ்வளவு சிதறி கிடைக்கிறது தாமதிக்காதீர்கள் உங்களை நீங்களே நிரப்ப ஆரம்பிங்கள். நீங்கள் நிறைய நிறைய நிறைகுடமாக தழும்பாமல் இன்னும் தேடுவீர்கள்.

Read More

உறைந்து போய் நிற்கிறேன் உருகி ஓட வேண்டும். துவண்டு போய் கிடக்கிறேன் துள்ளிப் பாய வேண்டும். சிதைந்து போய் விடாமல் சிற்பம் ஆக வேண்டும். மறைந்து போய் விடாமல் மண்ணில் நிலைக்க வேண்டும் என்னை யாரும் தடுக்கவில்லை என்னை யாரும் இழக்கவில்லை என் வெற்றி பயணம் தொடங்கி விட்டது. நான் ஒற்றைப் புள்ளியைச் சுற்றி சுற்றி வட்டமிட்டு வலை பின்னிக் குறுகினேன். உடைந்து எறித்துவிட்டு உலகத்திற்கே வழிகாட்டி நடப்பேன் என்று யாரோ சொல்லக் கேட்டேன். அண்ணாந்து பார்த்தேன் சிகரத்தின் உச்சிகள் எனக்குத் தெரியவில்லை தெரியாமல் போனதாலேயே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஆசை பிறந்தது. அதற்கான வழித் தடங்களை நோக்கியே மனம் ஓடியது. மனம் ஒரு மெய் சொன்னது அது தூரத்தில் இருப்பதாக அதன் பாதை கடினம் என்று அதற்குத் தடைகள் அதிகம் என்று மனம் கேள்வி கேட்டதுஉனக்கு அது அவசியமா? என்று… உன்னால் அது முடியுமா? என்று முயலத்தான் போகிறாயா?…

Read More