உணர்வாலே
பெருமிதம் கொள்கிறேன்
என் கரம் கூப்பி
உனை வணங்குகிறேன்.

தமிழாலே
தழைத்த என்
குலத்தின் நன்றியினை நீத்தமும் நான் நினைக்கின்றேன்.

தமிழாலே
உன்னைப் பாடி தலைமுறைகள்
பாடட்டும்….
தமிழ் பண்பாடு
மாறாது
என்னாலும் ஓங்கட்டும்.

தமிழ் பேசும்
புண்ணியத்தை
தரணியில்
எனக்களித்த
தமிழ்த்தாயே
உன்னை நினைத்து
என்றும்….
பெருமிதம் கொள்வேன்.

Share.

Leave A Reply