திரை இசை பாடல்
கூட கேட்க முடியாமல் வெளியேறிய நான்
இன்று நீ பாடும்
கர்நாடக இசையை
ஏன் இப்படி
ரசித்து கொண்டு
இருக்கிறேன்.
உன் குரலா?
இல்லை அழகா?
ஈர்க்கும் விழியா ?
இல்லை இசையா?
நீ பாடும் ராகம் தெரியவில்லை நீ பாடும் பாசை புரியவில்லை ஆனாலும், உன் உதட்டு அசைவுகளுக்கு
தலை அசைத்துக் கொண்டிருக்கிறேன்.
இசையை நேசித்த நீ!
சபையில் பாடிக்
கொண்டு இருக்க…
நான் மட்டும் உன்னை நேசித்துக் கொண்டு
கதவு ஓரம் நின்று
கொண்டு இருக்கிறேன்.
நீ! பாடும் போது புன்னகையோடு
பார்க்கும்
அந்த ஒரு
பார்வைக்காக….!