பல நோய்களை குணப்படுத்தக்கூடிய மகத்துவம் நிறைந்த கற்றாழை தாவரத்தை நமது வீட்டில் வளர்க்க வேண்டும். கற்றாழை சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகையான கற்றாழைகள் உள்ளன. கற்றாழை பயன்படுத்தும் பொழுது எப்பொழுதும் முதிர்ந்த கற்றாழைகளை பயன்படுத்த வேண்டும். முதிர்ந்த கற்றாழையில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதோடு கசப்புத் தன்மையும் அதிகம் இருக்காது. கற்றாழையை தினமும் காலையில் நாம் எடுத்து கொண்டுவரும்பொழுது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் தேவையில்லாத வாய்வுகளை வெளியேற்றப்படுகிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து நமது உடலில் எடையை குறைக்க அதிகம் உதவுகிறது. மலச்சிக்கல் மாதவிடாய் பிரச்சனைகள் உடலில் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் கற்றாழையை தினந்தோறும் காலையில் எடுத்துக் கொள்ளவேண்டும் கண்பார்வை அதிகரித்து கண் பார்வையை கூர்மையாக்கும் தெளிவாக தெரிய வைக்கிறது.சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது. கொழுப்புக்கள் உடலில் அதிகம் தங்குவதால் இதய கோளாறு மாரடைப்பு ஆகிய பிரச்சனைகள்…
Author: கவிமணி பாலா கிருஷ்ணன்
காலை பிறந்து விட்டது வேளை மலர்ந்து விட்டது நாளை என்று எதையும் ஒத்திப் போடாமல் இன்றே விரைந்து முடி . எதையும் எதிர்பார்த்திடாது யாரையும் எதிர் நோக்கிடாது உன்கடமை எது என்பதை உணர்ந்து பின் சரியாப் செய்து முடி சரியாகக் கற்று முடித்து முறையாகப் பயிற்சி எடுத்து நம்பிக்கையோடு உன் இலக்கை உறுதியாகத் தொட்டு விடு வெற்றியை மட்டும் எண்ணிடாது தோல்வியை என்றும் எண்ணிடாது கடமையில் மட்டும் கவனமாக இருந்து வெற்றிக் கொடிகட்டு சிகரம் எட்டி முத்தம் இடு .
நாம் எதையும் சரியாக புரிந்து கொள்வது இல்லை அப்படி புரிந்து கொள்ள தொடங்கினால் புரியாத விசயங்களும் புரியத் தொடங்கும் அர்த்தம் புரியும் சில விசயங்களுக்குள் பல அர்த்தங்கள் புதைந்து கிடக்கும் ஒரு மண்ணிற்குள் ஒரு கடலுக்குள் இருக்கும் புதையலைப் போல … ஒரு பகவத்கீதை புத்தகம் இதை ஒரு பத்து வயது பையன் படிக்கிறான் அதே புத்தகத்தை இருபது வயது இளைஞன் படிக்கிறான் அதே புத்தகத்தை எண்பது வயது முதியவரும் படிக்கிறார் ஆனால் மூவருக்கும் சரியாக அந்த கருத்துக்கள் சென்றுவிடுமா? சிறுவனுக்குப் புரியாமலே இருக்கலாம் இளைஞனுக்குப் புரியலாம் ஆனால்… அனுபவம் இல்லாததால் அதை உணர மறுக்கலாம் முதியவருக்கோ புரிந்து அனுபவித்து அதை ஏற்றுக் கொள்கிறார் புத்தகம் ஒன்று தான் ஆனால் அதைப் புரிந்து கொள்ள நமக்கு பக்குவம் வேண்டும் அந்த பக்குவத்தை எது தருகிறது என்றால் இதை நான் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமக்கு எப்போது வருகிறதோ…
திருநீற்றுப்பச்சிலை என்கிற இந்த மூலிகை கரந்தை, தூன்னுத்துப்பச்சிலை, உறுத்திரச்சடை , பச்சை சப்ஜா, விபூதி பச்சை , பச்சபத்திரி, திருநீற்றுப் பத்திரி, என்கிற வேறு பெயர்களும் உண்டு பழங்காலங்களில் திருநீர் தயாரிக்க இந்த இலையின் சாம்பல் பயன்பட்டு வந்ததால் இதற்கு திருநீற்றுப் பச்சிலை என்று பெயர் வந்திருக்கலாம். இதை வீட்டில் வைத்து வளர்க்கலாம் இது குரு பகவானின் மூலிகை தனது ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர்கள். இந்த மூலிகையை தங்களது வீட்டில் வைத்து வளர்த்திட குரு தோஷம் நீங்கும். மேலும் வாஸ்து படி இதை வீட்டில் வைத்து வளர்க்கும் போது இதன் வாசனை நுகரும் பொழுது பலவிதமான நோய்கள் குணமடைகின்றன. நீண்ட பயணம் சென்று வரும் பொழுது ஏற்படும் தலைவலி உடல் உபாதை உடல் சோர்வு மன அழுத்தம் போன்றவைகள் இலிருந்து இந்த இலையின்…
அடிமையாய் இருந்தோம் அல்லல் பட்டோம் அமைதியாய் இருந்து சுதந்திரம் பெற்றோம் குற்றங்கள் குறைப்போம் குன்றென வளர்வோம் ஒற்றுமை வளர்த்து ஓங்கி நிற்போம் திட்டங்கள் போடுவோம் திறமை வளர்க்கும் சட்டங்கள் போடுவோம் சரித்திரம் படைப்போம் அறிவியல் ஆய்வு செய்து அகிலத்தை வெல்வோம் கணிப்பொறி இயக்கி காலத்தை வெல்வோம் ஏவுகணை படைத்து எங்கும் செல்வோம் பாரதப் பெருமையை அங்கும் காப்போம் இந்திய நதிகளை இணைத்து மகிழ்வோம் இருக்கும் சாதிகளை ஒழித்து மகிழ்வோம் பிறக்கும் குழந்தைகளை படிக்கச் செய்வோம் படித்த இளைஞர்கள் வழியில் இந்தியாவின் பெருமையை போற்றுவோம் புதிதாய் பிறந்த மனிதராய் புதுமைகள் செய்திட புதியதாய் பூத்த மலராய் மலரட்டும் புதிய பாரதம்
முழுமுதல் கடவுள் விநாயகர் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி உலகத்து உச்சியில் அமர்ந்து இருப்பார் அவர் தன்னோடு அருகம்புல்லைத் தான் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால். அந்த அருகம் புல்லின் பெருமையை நாம் அறியத்தான் வேண்டும். ” ஆல்போல் தழைத்து… அருகுபோல் வேரூன்றி” என்று வாய்மொழி வழக்கைப் போல்… ” பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகை(அருகம்)” என்று அகநானூறு கூறுவது போலவும்… ” ஆபத்துக்கு உதவும் அருகம்புல்” எனும் பழமொழி போலவும் “கண்ணோ யோடு தலைநோய் கண்புகை இரத்த பித்தம்” என்ற சித்த மருத்துவ பாடல் அருகம்புல்லின் நோய் போக்கும் தன்மை குறித்து தெளிவு படுத்துகிறது. இந்த அருகம்புல் அருகு, மூதண்டம், தூர்வை, மேகாதி, பதம், அருகு, போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. உணவாக, மருந்தாக, குடிநீர், அருகன் தைலம், என பல வகையில் நமக்கு பயனளிக்கிறது. அருகம்புல் வாதம்-பித்தம்-கபம்(சளி) ஆகிய நோய்களையும் ,அருகம்புல் ஆனது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை…
இன்னும் ஒரு வழி பிறக்கும் அது சொல்லும் படி இருக்கும் உலகை வெல்லும் உளி கிடைக்கும் தடை உடைப்போம் வா எண்ணம் வழி நடத்தும் நம்மை திண்ணம் செயல் படுத்தும் நம்மை விண்ணும் தலை இடிக்கும் வரை வீறு கொண்டு எழுவோம் வா உப்பு நம்மை உருக்கும் என்றும் நட்பு நம்மை இணைக்கும் நம் மொத்த கை இணைந்து ஒன்றாய் உச்சி வான் அடைவோம் வா பிரிவினை உடைத்திருவோம் நாம் ஒற்றுமை நிலைத்திடுவோம் நாம் நிச்சயம் ஒன்று பட்டால் நம் இலட்சியம் ஜெயித்திடுவோம் வா சூழ்ச்சிகள் நம்மை சூழும் என்றும் சூழ்நிலை தினம் மாறும் அன்றும் பிரியாது இணைந்திருந்தால் நாம் இமயத்தை வென்றிடுவோம் வா தினம் தினம் கூட்டம் எழும் நம்மை வெல்ல போட்டி இடும் ஒற்றுமையாய் எதிர்கொண்டு நம் வெற்றியை உறுதி செய்வோம் வா!!
உலகை மாற்றும் வல்லமை உன் கையில் பொக்கிசமாய் இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறது அற்புதமான அதை அலைக்கழித்து விடாதே சிற்பமாய் மாற்றும் நுட்பம் அறிந்து கொள் கடந்து வந்தவைகளை எண்ணிப்பார் அன்பினால் புயலை எதிர்கொண்டோம் பொறுமையால் பண மாற்றத்தை ஏற்றுக் கொண்டோம் ஒற்றுமையால் ஜல்லிக்கட்டை வென்றெடுத்தோம் இன்ப துன்பம் எத்தனை நிகழ்ந்தாலும் வரலாறை மிஞ்சுவதெல்லாம் அன்பும் ,பொறுமையும், ஒற்றுமையும்தான் முழுமையாய் இன்னும் ஒரு வருடம் அழகாய் பூத்திருக்கிறது உன் கையில் அன்பு காட்ட , ஒற்றுமை விதைக்க பொறுமை கொள்ள வெற்றிபெற காலம் என்னும் தீ எரிந்து கொண்டே இருக்கிறது அதில் வெறும் கனவுகள் \ஆவியாகிவிடும் உன் இலட்சியங்கள் வெற்றிகளாய் மாற வருத்தி எடுத்தாலும் முயற்சியால் உன்னை தயார் படுத்திக் கொள் வெற்றி கனிந்து வரும் அமிர்தமாய் உன் கையில் நிறையும் மகிழ்ச்சியோடு முயற்சி செய் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அடித்துக் கொண்டே இருக்கிற அலையும் ஆசைகளும் இடித்துக் கொண்டே இருக்கிற இடியும் இறைச்சலும் பூத்துக் கொண்டே இருக்கிற பூவும் மகிழ்ச்சிகளும் உயர்ந்து கொண்டே இருக்கிற சிகரமும் இலட்சியங்களும் உதிர்த்து கொண்டே இருக்கிற சருகுகளும் சங்கடங்களும் ஊறிக் கொண்டே இருக்கிற ஊற்றும் தாகமும் கரைந்து கொண்டே இருக்கிற வளமும் காலமும் இனிவரும் சந்ததியருக்கும் மிச்சம்வைக்க நம்மை நாமே நெறிப்படுத்துவோம் சரியாய் அனைத்தையும் பயன்படுத்துவோம்.
அழகு சிலையாய் இருக்க தேவையில்லை உடைந்த கற்களாய் இருந்தாலும் போதும் நட்பிற்ககு முன்னுரை அறிமுகம் எதிர்பார்ப்பு எதுவும் தேவையில்லை ஒரு புன்னகை போதும் நட்பிற்க்கு பணம், காசு சாதி , மதம் வயது, உறவு தேவையில்லை அன்பு மட்டும் போதும் நட்பிற்க்கு பேஸ்புக் , வாட்சாப் சினிமா , பார்க் பீஸ், பேங்கு பேலன்ஸ் எதுவும் தேவையில்லை எச்சில் டீ கூட போதும் நட்பிற்க்கு கடன் அடைக்க தேவையில்லை காணிக்கை தேவையில்லை உயிர் கொடுக்க தேவையில்லை கடமையும் செய்ய தேவையில்லை கலங்கள் கடந்தாலும் முடியாது நட்பு