நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கான அந்த செயலுக்கான முன்னேற்பாடுகளை நாம் முதலில் தயார் படுத்திக் கொண்டு பின் அந்த காரியத்தை செய்யத் துவங்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அந்த செயல் பாதியில் நிற்ககூடும் அல்லது அரைகுறையாகச் செய்ய நேரிடும். Preparation மிக மிக அவசியமான ஒன்று நாம் அன்றாட வாழ்க்கையில் சமைப்பது, தூங்குவது, போன்ற சிறிய செயல்களும் இந்த preparation அவசியமானதாக உள்ள போதுவாழ்க்கையின் பெரிய முக்கியமான விஷயங்களுக்கு அது எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும்.வறண்டு கிடக்கும் கரடுமுரடான பூமியில்அப்படியே பயிரிட முடியாது. முதலில் நிலத்தை சமன்படுத்தி பண்படுத்தப் பட வேண்டும் .அவ்வாறு செய்தால் தான் நல்ல விளைச்சலைப் பெற முடியும்.அதைப் போலத்தான் நம் மனமும் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்களின் கூட்டு கலவையாக பார்ப்பவை, கேட்பவை நிகளுகிற செயல்களுக்கு ஏற்ப மாறி… மாறி அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.இது நம் பல்திரன் பேசியை கையில் வைத்து கொண்டு…
Author: கவிமணி பாலா கிருஷ்ணன்
உன்னால் முடியும்உன்னால் முடியும்.. உன்னால் முடியும்..உன்னால் முடியும்…என்று உன் ஆழ்மனதின் செவிகள் நிறையும் வரை இதை நீ உச்சரித்துஇரு..உன்னால் முடியாத செயல்களே இந்த உலகில் இல்லை. ஆம் ! நீ நம்ப மறுத்தாலும் அதுவே உண்மை உன்னால் முடியும்.யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு உயிரினத்திர்க்கும் ஒரு கட்டமைப்பு இருக்கும். ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கும். ஆனால் மனிதன் மட்டும் அதில் விதி விளக்கானவன்.ஒருவன் கூர்முனை கத்தியின் மேல் குதித்து சாகசம் செய்வார். ஒருவர் கண்ணாடியையும் கடித்து விலுங்குவார்.ஒருவர் கடலையே நீந்தி செல்லுவார்.இரும்பையும் உடைப்பவர். இமையத்தையும் தொடுபவர் என்று நாம் எண்ணி பார்க்க முடியாத அளவு அற்புதங்களை நிகழ்த்துபர்கள் நம் கண்முன்னே இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் விதி விலக்கானவர்கள் நாம் அப்படி இல்லையே சராசரி மனிதன் தானே என்று எண்ணுகிறீர்களா அந்த எண்ணத்தை உங்கள் அடி ஆழ்மனதில் இருந்து இப்போதே தூக்கி எறிந்து விடுங்கள்.இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு அற்புதமானவர்கள்…
நீர்அசுத்தக் காற்றைச் சுவாசித்த இலைசுத்தக் காற்றைத் தருவது போல்உப்பு நீரை மேகம் உறிஞ்சிஉமிழும் போது உமிழ்நீர் மழைநீராகும் நதிநீர் ,குளநீர், ஏரிநீர் வாய்க்கால்நீராய் பெயர் பலபெற்று செல்கையில்அணைநீராய் தேங்கிஆகூல் உய்த்துக் கொடுக்கும்அன்னை போல அன்னம்தரும் உலகிற்கு நிலத்தடி நீரை மேலே உறிஞ்சிவளங்கள் சேர்ப்பது புதிய உத்திகழிவு நீரை நிலத்தில் விட்டு நிலநடுக்கம்வராமல் தடுப்பதை ஏன் மறந்தோம் ? அறிவுள்ள இடத்தில் அகங்காரம் இருக்கும்கங்கைக்கும் பெருமிதம் தலைக்கனமாய் மாறியதால்குறுமுனி அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்டாள்காகம் வடிவெடுத்த விநாயகர் ஓடவிட்டார் சாந்த வடிவம் அழகின் சிகரம்கோபச் சீற்றம் புயலும் அழிவும்பொறுப்பது பெண்ணின் குணம்பங்கினால் சுனாமி எச்சரிக்கை அறிகுறி வளையும் நதி வாழ்விற்கு வழிகாட்டிவிதியைப் பழிப்பவன் நீந்த மாட்டான்வாழ்க்கை நதியில் எதிர்நீச்சல் போட்டுநீந்தத் தெரிந்தவன் கரை சேருவான் -செந்தமிழ்வாணி ச. மல்லிகா சிறந்தது எது நடக்கக் கூடாதோஅது நன்றாகவே நடக்கிறதுஎது நடக்க வேண்டுமோஅது நடப்பதே கிடையாது எதை தேடிச் சென்றேனோஅது கிடைக்கவே இல்லை எது கிடைக்க வில்லையோஅதை…
நட்பின் ஆழம்ஆசையின் ஆழத்தைதேடுதலின்போது அறிந்து கொள்ளலாம் காதலின் ஆழத்தைபிரிவின் போது அறிந்து கொள்ளலாம் நட்பின் ஆழத்தைதுயரின் போது அறிந்து கொள்ளலாம் நேர்மையின் ஆழத்தைநெருக்கடியின் போது அறிந்து கொள்ளலாம் நம்பிக்கையின் ஆழத்தைதளர்வடையும் போது அறிந்து கொள்ளலாம் ஒழுக்கத்தின் ஆழத்தைகட்டுப்பாட்டின் போது அறிந்து கொள்ளலாம் இப்படி எல்லா ஆழத்தையும்அறிந்து கொள்பவன் தான் உயரத்தில் பயமின்றிபக்குவமாய் பதட்டமின்றி பயணம் செய்துநிலைத்து நிற்க முடியும் . -ச. ம.பாலகிருஷ்ணன் ,சென்னை சிறுவர் பாடல்நாடு புகழணும் அன்னை தந்தையை வணங்கணும்அவர்கள் பேச்சைக் கேட்கணும்அன்பாய் இருக்கப் பழகணும்அகிலம் போற்ற உழைக்கணும் கல்வி நீயும் கற்கணும்கலைகள் யாவும் வளர்க்கணும்கருணை பொங்கும் இதயத்தில்கலைமகள் அருள் கிடைக்கணும் உண்மை பேசி உயரணும்உன்னை நாடு புகழணும்உதவும் குணம் இருக்கணும்உறுதி கொண்டு வாழணும் சுறு சுறுப்பாய் இருக்கணும்சுற்றுச் சூழல் காக்கணும்சுருங்கச் சொல்லி விளக்கணும்சுகமாய் வாழக் கற்கணும் . -கவிஞர் ச. மல்லிகா .
கோபப்படுவதற்கு முன்பாக…..கேலி செய்வதற்கு முன்பாக….நடப்பவைகளை உற்றுநோக்குவோம்… நாம் அனைவரும் தனிமைப்பட்டு போனோம்இந்த உலகில் நாம் ஆரோக்கியமாக வாழஎந்த கூட்டமும் தேவையில்லை …என்று கற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா … எல்லா கோவில்களும் மூடப்பட்டுவிட்டனகடவுள்கள் கோவில்களில் இல்லை என்றுகற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா….. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதுமாணவர்களுக்கு பரீட்சைகள் தேவையில்லைஎன்று கற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா…. எந்த கூட்டமும் இல்லை !எந்த கூட்டத்தினாலும் எதுவும் நிகழப் போவதில்லைஎன்று தெளிவு படுத்தி இருக்கிறது கொரோனா…. குழந்தையோடு விளையாடும்சந்தோஷமான நாட்களைபெற்றுக் கொடுத்திருக்கிறது கொரோனா…. தன் மனைவியோடு பேசசந்தர்ப்பம் வழங்கி இருக்கிறது கொரோனா…. தன் வீட்டை சுற்றும் பறவைகளின் சப்தங்களைகேட்க வைத்திருக்கிறது கொரோனா…. பயந்து ஓடிய விலங்குகளை எல்லாம்வீதியில் உல்லாசமாகஉலாவ விட்டிருக்கிறது கொரோனா,…. கூட்டுக் குடும்பத்தை விட்டு விலகிய மனிதர்களைவீட்டுக்குள் வைத்திருக்கிறது கொரோனா பழமையான விளையாட்டு எல்லாம்விளையாட வைத்திருக்கிறது கொரோனா நிசப்தத்தின் அமைதியை உணரவைத்திருக்கிறது கொரோனா…. அடுப்பாங்கரை செல்லாதவர்களையும்சமைக்க வைத்திருக்கிறது கொரோனா…. உறங்கிக்கிடந்த புத்தகங்களைப்படிக்க வைத்திருக்கிறது கொரோனா…. வேலைப்பளு ஏதுமின்றி வெறும்மனிதனாய்…
கோவைக்காய், பழம் சாதாரணமாக வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய கொடி வகைகள் தான் இந்த கோவை. இது மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. மேலும் வழவழப்புத் தன்மை உடையது. இந்த குளிர்ச்சி மற்றும் வழவழப்புத் தன்மை நமக்குப் பல நன்மைகள் புரிகிறது. இந்தக் கோவை இலை மற்றும் வேப்ப இலைகளை சம அளவு எடுத்துக்கொண்டு அரைத்து வெயில் காலங்களில் முகத்தில் தடவி கழுவி வந்தால் முகப்பருக்கள் வேர்க்குரு போன்ற பிரச்சினைகள் எதுவும் வராது. வெகுநாட்களாக ஆறாத புண்கள் நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் நிலையில் இந்த கோவைஇலையுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து அதில் தடவிவர எத்தகைய புண்ணாக இருந்தாலும் அதை ஆற்றிவிடும். சிலருக்கு உஷ்ணம் காரணமாக நாக்கில் புண் சிறு கொப்பளங்கள் ஏற்படுவது உண்டு அவர்கள் இந்த கோவை இலையை வெறும் வாயில் போட்டு மென்றாலே போதும். அதை ஆற்றக் கூடிய தன்மை உள்ளது. இந்த கோவை இலையை எடுத்து அதை தண்ணீரில்…
தமிழ் உணர்ச்சி அது தாய் உணர்ச்சி தடையின்றி பொங்கி வரும் தமிழரின் ஓர் உணர்ச்சி ஆணி வேர் போல் அடிவரை சென்றே இருக்கும் நாடி நரம்பெல்லாம் இரத்தமாய் பாய்ந்திருக்கும் பேச்சின் பொருளாய் இருக்கும் செயலின் பயனாய் இருக்கும் ஆதியில் ஊற்றெடுத்த அற்புத அமுதூற்று அதை எத்தனை நிறம் மாற்றி யார் என்ன செய்தாலும் செம்மொழியாய் செழித்து நிற்கும் வற்றாத தேன் ஊற்று அழித்து விடும் ஆசையிலே ஆயிரம்பேர் வந்தாலும் புதைத்து விட மமதையிலே தொள்ளாயிரம் பேர் சென்றாலும் சிரித்த புன்னகையில் சிரித்துப் பூத்திருக்கும் கருத்துக் கவிதைகளும் பொறுத்துத் தோள்கொடுக்கும் கவிதையினில் காதல் சொல்ல நூறு மொழி பிறந்தாலும் கல்வியையும் கவிதையில் சொல்ல இந்த காந்த மொழி உண்டு அறிவியல் கருத்தெல்லாம் அடுக்கடுக்காய் புத்தகம் செய்யும் அன்னிய மொழிக் கெலாம் நான் உழைப்பேன் அத்தனை அறிவியலும் சூத்திரமாய் சுருக்கித் தந்த தமிழ் என்றும் நமக்குள்ளே நிறைந்து துடித்திருக்கும் தமிழ் என்றும் தழைத்து வாழும்…
கருவறை இருட்டு கண்ணுக்கு இருட்டாக கொடி உணர்வில் உறவு புரிந்தது ஆயிரம் பேர் நின்றால் கூட அன்னை முகம் தனியாய் ஈர்க்கும் நான் குப்புற விழுந்த போதும் நடக்க விழுந்து எழுந்த போதும் வாழ்க்கை தத்துவம் புரிய வைத்தாள் விழுந்தால் தானே எழ முடியும் திக்கி…திக்கி பேசும் மழலைமொழி தந்தைக்கு மொழிபெயர்ப்பு அம்மா செய்தாள் அப்படியா என அணைத்தார் தந்தை அப்போது புரிந்தது பாச உணர்வு தளர்ந்த தாத்தா முதிர்ந்த பாட்டி தந்தையின் பரிவு தாயின் அன்பு தங்கையின் குறும்பு தாளாத மகிழ்வு குடும்பம் இதுவென்று அப்போது புரிந்தது கல்விச் சாலையில் கால் பதித்து கல்விக் கண்ணைத் திறந்த போது உலகம் எல்லாம் புத்தக வடிவில் உயர்ந்த நெறியை உண\ர வைத்தது தீயவர் நட்பு கிடைத்து விட்டால் காட்….டாற்றில் சிக்கிய மரமாவோம் நல்ல நட்பு நாளும் வளர்க்க நல்ல பண்பு நாளும் வளரும் அன்னை சொல்ல மறந்த…
சாயம் போவதில்லை என்றும் சாயங்கள் சாயம் போவது என்றும் சலவைத் துணிகள் தான் இருக்கின்ற வண்ணம் போதாமல் இன்னமும் வேண்டும் என்று ஒட்டாத வண்ணத்தை ஒட்டவைத்து விற்றதனால் ஒரே சலைவையில் ஒட்டாமல் சாயம் போனது சலவைத் துணிகள்… சாயம் போனவை துணிகள் மட்டும் அல்ல நாமும் தான் சாயம் போனவர்களாய் வெளுத்துப் போனவர்களாய் மாறிக்கொண்டு இருக்கிறோம் கலாசார மாற்றத்தில் வெளிநாட்டு மோகத்தில் பண்பாட்டு மாற்றத்தில் இனம் மறந்து மொழி மறந்து பண்பாட்டை இழந்து கட்டுப்பாடு இல்லாமல் தனிமனித ஒழுக்கம் தெரியாமல் மனிதத்தையே இழந்து சாயம் போய் கொண்டு இருக்கிறோம் நாம்/ தனித்தனியாக இருக்கும் வரைதான் வண்ணங்கள் அவை அனைத்தும் ஒன்றாய் இணைந்துவிட்டால் கருப்புதான் கடைசியில் மிஞ்சும் அதைப் போலத்தான் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கலாசாரம் உண்டு அவை தனித்து நிற்கும் போது தான் ஜொலித்து நிற்கும் அத்தனையும் ஒன்றிணைத்தால் மொத்தமும் கலந்து தன்மையை இழந்து…
இது ஒரு பூக்கும் தாவரம். இது ஆமணக்கு குடும்பத்தைச் சார்ந்தது. இது பொதுவாக எல்லா இடங்களிலும் வளரக்கூடிய செடி. காடு, மேடு, குப்பை, கூடம் என எல்லா இடங்களிலும் வளரும். மழைக்காலங்களில் அதிகமாக காணப்படும் இது அனைவருக்கும் பயன்படும் மூலிகை தாவரம் தோல் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் இதனை பழமொழியாக ” மேனி துலங்க குப்பைமேனி” என்பது வாய்மொழி வழக்கில் உண்டு. இந்த குப்பைமேனியை நன்றாக தண்ணீரில் போட்டு காய்ச்சி கசாயம் போல எடுத்துக் கொண்டால். சளி, இருமல், ஆஸ்துமா சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். குப்பை மேனியை கொழுந்தோடு சேர்த்து கிள்ளி எடுத்து வந்து. அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து அதை உடலில் அரிப்பு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ள இடங்களில் தேய்த்து விட வேண்டும். இல்லை எனில் இந்த பூச்சை உடல் முழுவதும் பூசிக்கொண்டு அரை மணி நேரம் கழித்து குளித்து வர உடலில் உள்ள…