Author: கவிமணி பாலா கிருஷ்ணன்

அணை தாண்டும் நீர் போல அலைபாயும் எந்தன் மனம் உனை நாடி வர வேண்டும் வழி காட்டி அழைத்துச் செல் திசை மாறி பறந்து செல்லும் பறவையாய் நான் இருக்க உன் மணியோசை கேட்டு உடன் வந்தேன் உன்னருகில் பொய் ஒன்றை எண்ணி எண்ணி பொய்த்து நான் போகிடாமல் மெய்யான உனை நாட கருணை செய் காத்திருப்பேன்.எதற்காக நான் சிரித்தேன் எதை எண்ணி நான் அழுதேன் எனக்காக எதற்காக இத்தனை இடர்பாடுகள் எல்லாமே நீதானே என்னிலும் நீதானே எனக்கென்ன ஏமாற்றம் எதற்கிந்த போராட்டம் நீ இட்ட பிச்சையிலே வாழ்ந்திருக்க ஆசை கொண்டேன்.ஏதேதோ என்னை வந்து சூழ்ந்திருக்க காரணம் ஏன்? எப்படி நான் வாழ்ந்தாலும் என்னோடு நீ இருந்தால் அப்படியே நான் இருக்க அருள் செய் என் இறைவா! தப்பேதும் செய்யாமல் தடுத்து எனை நிறுத்த உத்தமனாய் வாழ்ந்திருக்க எனக்குள்ளும் இருந்துட்டாய்…! .

Read More

இன்னும் நூறு வருடங்கள் கழிந்த பின்னும் என் செய்கையில் உங்கள் உணர்வுகள் ஏதேனும் வெளிப் பட்டுக் கொண்டே தான் இருக்கும். என் வாழ்வில் எல்லா தருணங்களும் உங்களால் உருவாக்கப் பட்டது தானே!நான் என்னையே உங்களிடம் தானே கற்றுக் கொண்டேன் ஆனாலும் நமக்குள் ஏதோ ஒரு…. இனம் புரியாத இடைவெளி,.. அடர்த்தியான மௌனம் சாதாரண எதிர்பார்ப்புகள் எல்லை மீறாத சண்டைகள் எல்லாவற்றையும் தாண்டி நிலைத்தது என்னிடம் உங்களை ரசிக்கும் உங்கள் பாசம். அன்புள்ள அப்பாவிற்கு அன்பு மகன்.

Read More

வேலைக்குத் தூங்கி எழு மூளைக்கு வேலை கொடு முயன்று நீ முன்னேறு இல்லையேல் நீ மண்ணோடு கண் இமைக்கும் நேரத்தில் உன்னை கடந்து போக கூட்டம் இருக்கும் போது எப்படி நீ கவலையின்றி தூங்கிக் கொண்டு இருக்கிறாய்? நீ! தூங்குவதற்கு அவசியம் என்ன?என்ன செய்து களைத்தாய்! நீ! விழித்து எழுதுவற்குள் எல்லாம் முடிந்து விடுமே! இரவில் உறங்குவதே இப்போதெல்லாம் அரிதாகிப் போய்விட்ட சமயத்தில் பகலிலேயே உறங்குகிறாயே! உழைப்பில் நேரம் முற்றி உதிரத்தில் வேர்வை சொட்டி களைப்பு கண்ணைக் கட்டி படுத்தால் தான் உறக்கம். வாய் வரை வயிறு முட்ட தின்று… தின்று படுத்துருண்டால் அதற்கு என்ன பெயர்? உறக்கத்தை தள்ளி வை சோம்பலை கொல்லி வை வெற்றியை சொல்லி வை.

Read More

மழை என் உயிர் நண்பன் ஆம்… ! மழை என் உயிர் நண்பன் எனக்கு சகுனம் பார்க்கும் பழக்கம் கிடையாது! ஆனாலும், நான் செய்யத் துவங்கி மழையால் அது பாதித்தாலும் அதை நான் நல்ல சகுனமாகத்தான் கருதுவேன். எப்படிப்பட்ட நாளாக இருந்தாலும்! சரி அன்று மழை வந்தால் அதுதான் எனக்கு நல்ல சகுனம். மழைக்காலங்களில் தான் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் இல்லை…!மழைக் காலத்தை நினைத்தே நான்….!எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.நான் நேற்று பிறந்த சிறுவன் என்றாலும் என்னைவிட எவ்வளவோ உயர்ந்த என் உயிர் நண்பன் என்னை தனித்துப்பார்த்ததே இல்லை. அவன் வரும்போது எனக்கு தாகம் கூட எடுப்பது இல்லை அவனுக்கு ஊர் முழக்க எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும்…!அவன் ஒவ்வொரு முறை வரும் போதும் என் வீட்டு வாசலிலும் வந்து என்னை நலம் விசாரித்துத்தான் செல்வான். நான் அவனிடம் என்னைப் பற்றி எத்தனை பெரிய ரகசியம் சொன்னாலும் அழுது புலம்பினாலும் கூட அதை அவன்…

Read More

நான்! செதுக்கப் பட்டுக் கொண்டு இருக்கும் சிலை!என்னில் உளி படுவதும் வலி படுவதும் பெரிதல்ல! என்னில் இருந்து உடைந்து சிதறுகிற எதுவும் எனக்குத் தேவைஇல்லாதவையே! என்னை கடவுளாக மாற்றத்தான் இந்தக் கல்லை கடவுளாக மாற்றிக் கொண்டு இருக்கிறது இந்த உளியும் வலியும் .நான் கடவுளாக மாறிக் கொண்டு இருக்கும் கல் என் மீது படுகிற ஆயுதம் கூட என்னை அழிக்க அல்ல !எனக்கு ஏற்படுகிற காயங்கள் கூட என்னை வருத்தப் படுத்த அல்ல!என்னை உயர்த்தி விட யாருக்கும் திறன் இல்லை!என் தூரம் எத்தனை? என் உயரம் அத்தனை!என்னால் மட்டும் தான் முடியும் என்று…எனக்குத் தெரிந்ததால் தான் நான்!ஓடிக்கொண்டு இருக்கிறேன் என் இலக்கை அடையும் வரை.

Read More

தமிழ் உணர்ச்சி அது தாய் உணர்ச்சி தடையின்றி பொங்கி வரும் தமிழரின் ஓர் உணர்ச்சி.ஆணி வேர் போல் அடிவரை சென்றே இருக்கும். நாடி நரம்பெல்லாம் இரத்தமாய் பாய்ந்திருக்கும். பேச்சின் பொருளாய் இருக்கும் செயலின் பயனாய் இருக்கும். ஆதியில் ஊற்றெடுத்த அற்புத அமுதூற்று அதை எத்தனை நிறம் மாற்றி யார் என்ன செய்தாலும் செம்மொழியாய் செழித்து நிற்கும் வற்றாத தேன் ஊற்று.அழித்துவிடும் ஆசையிலே ஆயிரம் பேர் வந்தாலும் புதைத்து விட்ட மாமதையிலே தொள்ளாயிரம் பேர் சென்றாலும் சிரித்துப் புன்னகையில் சிரித்துப் பூத்திருக்கும் கருத்துக் கவிதைகளும் பொருத்து தோள் கொடுக்கும். கவிதைகளில் காதல் சொல்ல நூறு மொழி பிறந்தாலும் கல்வியையும் கவிதையில் சொல்ல இந்த காந்த மொழி உண்டு. அறிவியல் கருத்தெல்லாம் அடுக்கடுக்காய் புத்தகம் செய்யும் அந்நிய மொழிக் கெல்லாம் நான் உரைப்பேன்! அத்தனை அறிவியலும் சூத்திரமாய் சுருக்கித் தந்த தமிழ் என்றும் நமக்குள்ளே நிறைந்து துடித்திருக்கும் தமிழ் என்றும் தழைத்து வாழும்.

Read More

எனக்கு பணம் கிடைத்திருந்தால் பணக்காரனாக மாறி இருப்பேன்.குரல் வளம் இருந்திருந்தால் பாடகன் ஆகி இருப்பேன். வாய்ப்பு கிடைத்திருந்தால் நடிகன் ஆகியிருப்பேன்.ஓட்டு கிடைத்திருந்தால் மந்திரி ஆகியிருப்பேன். நண்பர்கள் கிடைத்திருந்தால் நன்றாகச் சுற்றி இருப்பேன். விமானம் கிடைத்திருந்தால் விண்வெளிக்குப் போயிருப்பேன் காதலி கிடைத்திருந்தால் வாழ்வை தொலைத்திருப்பேன் உளி கிடைத்து இருந்தால் சிற்பி ஆகியிருப்பேன். தனிமை கிடைத்ததனால் நான் கவிஞன்ஆகியிருக்கிறேன்.

Read More

பறவைகள் கவிதை எழுதினால் தான் சுதந்திரத்தைப் பற்றி சரியாக எழுத முடியும். மரங்கள் கவிதை எழுதினால் தான் பொறுமையைப் பற்றி சரியாக எழுத முடியும்.மலர்கள் கவிதை எழுதினால் தான் உறுதியைப் பற்றிசரியாக எழுத முடியும்.வானம் கவிதை எழுதினால்தான் பூமியைப் பற்றி சரியாகஎழுத முடியும். மேகம் கவிதை எழுதினால் தான் ஓவியத்தைப் பற்றி சரியாக எழுத முடியும். மழை கவிதை எழுதினால்தான் தாகத்தை பற்றி சரியாக எழுத முடியும்.கடல் கவிதை எழுதினால்தான் ஆழத்தைப் பற்றி சரியாகஎழுத முடியும்.மலை கவிதை எழுதினால் தான் உயரத்தைப் பற்றி சரியாக எழுத முடியும். எறும்பு கவிதை எழுதினால் தான் சுறுசுறுப்பை பற்றி சரியாக எழுத முடியும்.நெருப்பு கவிதை எழுதினால் தான் வலிமையை பற்றி சரியாக எழுத முடியும்.காற்று கவிதை எழுதினால் தான் சுவாசத்தைப் பற்றி சரியாக எழுத முடியும்.இவர்கள் மொத்தமாய் படைத்த கவிதையின் தொகுப்பு தான் இயற்கை.இந்தத் தொகுப்பை புரட்டிப் பார்க்கிற ஒவ்வொரு வரும் கவிஞன் ஆகிறான்.

Read More

சிகரத்தை அடைவது தான் எந்தன் சிந்தனையும் இலட்சியமும்உயரத்தில் உச்சியினை நான் அடைய எவ்வளவு தூரம் உழைக்க வேண்டியிருக்கிறது? நான் மேகமாக பிறந்து இருக்கக் கூடாதா ?சிகரத்தின் உச்சியினை தொட்டுத் தொட்டு சென்றிருப்பேன். நான் மழையாக மாறி இருக்கக் கூடாதா சிகரத்தின் உச்சியில் பட்டுப் பட்டு விழுந்திருப்பேன்.நான் காற்றாய் பிறந்து இருக்கக் கூடாதா? சிகரத்தின் உச்சியில் முட்டி …முட்டி சென்றிருப்பேன். நான் கழுகாகப் பிறந்துஇருக்கக் கூடாதா? சிகரத்தில் உச்சியினை வட்டம் இட்டு பறந்து இருப்பேன். நான் வெயிலாகப் பிறந்திருக்கக் கூடாதா? சிகரத்தின் உச்சியில் பளிச் சென்று படித்திருப்பேன்.நான் பனியாகப் பிறந்திருக்கக் கூடாதா? சிகரத்தின் மேலே சிகரமாய் வீற்றி இருப்பேன். நான்! மனிதனாய் பிறந்ததால் சிகரத்தை அடைய முயன்று கொண்டு இருக்கிறேன்.

Read More

கடலைப் பார்க்காதவனுக்கு குட்டை கூட பெரியதாகத்தான் தெரியும். மலையைப் பார்க்காதவனுக்கு குன்று கூட பெரியதாகத்தான் தெரியும்.சிகரத்தை அடையாதவனுக்கு தென்னை மர உச்சி கூட உயரமாகத்தான் தெரியும். இவர்கள் எதையுமே அடைய விருப்பம் இல்லாமல் கண்மூடி கிடப்பதால் தான் சிறியது கூட இவர்களுக்குப் பெரியதாய் தெரிகிறது. பெரியதாய் தெரிவதனால் சிறியதைக்கூட இவர்களால் தேட முடியாமல் தவிக்கிறார்கள். பக்குவம் இல்லாமல் இவர்கள் ஏணியில் கூட ஏற முடியாது என்பதை ஏன் புரிந்து கொள்வதில்லை? கசப்பான பாகற் காயையும் உண்டு பழகிவிட்டால்! அது கூட…… ருசிக்கும் தானே!கடலையே நீந்திக் கடந்து விட்டால் ஏரி குளம் எல்லாம் எம்மாத்திரம்.கடினத்தை கடந்து விட்டால் எளிதெல்லாம் எம்மாத்திரம் கஷ்டத்தை கடந்து விட்டால் இஷ்டங்கள் உன்…. இரு கைகளில் இருக்கும் .

Read More