இருட்டில் தொலைத்து விட்டு வெளிச்சத்தில் எதை தேடுகிறாய்? இருட்டை வெளிச்சமாக்க ஏன் தயங்குகிறாய்?புறத்தை அழகு செய்து புதிது புதிதாய் காட்டுகிறாய் அகத்தில் நிறையும் அழுக்கை மட்டும் ஏன் அப்படியே விட்டு விட்டாய்? இருக்கும் அனைவருக்கும் குறையாமல் இருக்கிறது பிரச்சனைகள் இறந்த அனைவருக்கும் கூட நிறையாமலே இருக்கிறதே ஆசைகள். யாரிடமும் போய் கதை கேட்டாலும் கதை கதையாய் சொல்கிறார்கள் அவர் மட்டும் உத்தமராம்சத்யனாம் இலட்சியம் வெல்லும் போராளியாம்.எல்லோர் கதையும் இதுதான் என்றாலும் ஏன் சமுதாயத்தில் இத்தனை சரிவுகள் கதைகள் எல்லாம் கதைகள் தானோ? எல்லோர் கதையிலும் கதாநாயகன் இருப்பதால் வில்லன்கள் உருவாக்கப் படுகிறார்கள் காரணமே இல்லாமல் கூட சில சமயம் நிறைந்து போய்விட்ட சாக்கடையில் நீ மட்டும் நனையாமல் முத்தெடுக்கும் உன் இலட்சியத்தை எப்படி மெச்சுவது? உன் ஆசை மாற்றத்திற்கு சமுதாயத்தையே இழக்கிறாயே நீயும் நேர்மையும் பாதியில் வருவதல்ல உன் பாதைகள் மாறும்போது உனக்காக அது வளைந்தும் நெளிந்தும் போவதல்ல ஒழுங்காய் குற்றம்…
Author: கவிமணி பாலா கிருஷ்ணன்
ஏதோ ஒரு கூட்டத்திற்கு போக ஒரு பேருந்தில் ஏறினேன் பேருந்து புறப்படல ஏதோ அரசு ஊழியர்கள்சம்பள உயர்வு போராட்ட கூட்டமாம்.நல்ல வேளை ஒரு தனியார் வண்டி வந்தது அதில் இருந்த கூட்டத்தையும் மீறி வண்டி உலுங்கி உலுங்கி அதுல எங்களையும் ஏத்திட்டாங்கோ நல்ல மனசுக்காரங்க,.. வழக்கமான பாதையிலே போகாம மாறி மாறிப் போச்சு ஏதோ பக்தர் கூட்டம் கோயில் திருவிழாவாம்.போன பாதையிலாவது ஒழுங்கா போச்சா? பாதியிலேயே நிறுத்திட்டாங்க. ஏதோ வயித்து பிரச்சனை பசி தாங்காம மறியல் செஞ்சது ஒரு கூட்டம்….டிராபிக் ஓவரா இருந்ததாலே வண்டியில இருந்தவங்க எல்லாம் ஒதுங்கி நின்னு கூட்டத்தைப் பார்க்க… கூட்டம் கூட்டமா லாரியிலே எல்லோரும் போய்க்கிட்டு இருந்தாங்க கண்டிப்பா அரசியல் கூட்டமாகத் தான் இருக்கும்….கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி ஏறினா டவுன் வரைக்கும் போயிடலாம் இலவசமா சோறு போட்டாங்க அதுக்கு அடிச்சுகிட்ட கூட்டத்திற்கு பட்டினியாவே கிடந்திடலாம். அப்படியே டவுன் சுற்றிப் பார்க்க போன கூட்டத்திலே சாமியாரை பார்க்க ஒரு…
முடிந்த பின் விதி என்று பெருமூச்சு விடுபவர்கள் தான் இங்கு உண்டு.துவங்கும் முன்னே விதியை எண்ணி மார் உயர்த்தி நடப்பவர் யார்? முடிந்த பின் தொலைந்துவிட்ட கனவை எண்ணி பெருமூச்சு விடுபவரே! துவங்கும் முன்னே கனவு கண்டு சரியாய் பாதை அமைக்கவில்லையா?முடிந்த பின் ஏன்? இத்தனை விமர்சனம்.துவங்கும் போது என்ன செய்து கொண்டு இருந்தாய்? துவக்கங்கள் தான் முடிவுகளைத் தீர்மானிக்கும். ஏன் முடிந்த பிறகு துவங்கியதைப் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கிறாய்? துவங்கும் போது எதைப்பற்றியும் யோசிக்காத நீ முடிந்த பிறகு தான் எல்லாவற்றையும் செய்கிறாய். விடிந்த பிறகு தான் போனதைப் பற்றி யோசிக்கிறாய்! படிப்பு முடிந்தது பிறகுதான் வேலையைப் பற்றி சிந்திக்கிறாய்!ஓய்வூதியம் வரும்போதுதான் வங்கி கணக்கை பார்க்கிறாய்! வாழ்ந்து முடிந்த பின்பு தான் பகவத் கீதை கூட படிக்கிறாய். எல்லாம் முடிந்த பின்பு தான் செய்கிறாய்!இதெல்லாம் துவங்கும் முன்னே யோசிக்க வேண்டியவை..என்ன சிரிக்கிறாய்? எல்லோரும் செய்வதால் நீ செய்வதும் சரி…
இத்தனை நாள் இப்படி பழகிவிட்ட பிறகு நட்பென்று சொல்ல நாவரவில்லை.நாள் தோறும் கூடவே இருந்த போதும் காதல் என்று சொல்ல நாங்கள் காதலிக்கவில்லை.இணைந்து இருக்கிறோம் பிரிந்தால் அழுகிறோம் சண்டை இடுவோம்சமாதானம் ஆவோம். இப்படித்தான் பொது இடத்தில் இருக்க வேண்டும் என்றில்லை எப்படியும் இருப்போம். அடுத்தவர்களைப் பற்றி அணுவும் சிந்தித்ததில்லை இப்படி பெயர் சொல்ல முடியாத உறவில் நின்று பெரும் நாட்களை கழித்து விட்ட பிறகு….நாளும் மாறியது தவிர்க்க முடியாதபிரிவுக்கு நாங்களும் விதிவிலக்கல்ல! வாழ்க்கை மாறியது, நாட்கள் ஓடியது. அந்த உறவு அவளின் பிரிவு வருத்தத்தையோ! இன்பத்தையோ! தரவில்லை. நெருடல்களாக நெஞ்சில் உறுத்தியது நாங்கள் சுற்றிய அதே இடங்களில் இன்று வேறு யாரோ? மாணவர்களே! இன்று கண்ணை மறைக்கும் இன்பம் நாளை நெஞ்சு அடைக்கும் நெருடல்களாக… உருத்தும். ஊனமாக வாழ்வது கூட சுகம் உருத்தலோடு வாழ்வது ரணம் உடலோடு மனதார ஒருத்தியோடு வாழ்வதே சுகம். மதி மயக்கிப் போகாதே மனம் கசந்து வாழாதே…
யாரோ சொன்ன வார்த்தைகள் ஏன் வாக்குவாதம் ஆக்கிக் கொண்டாய்! யாரோ செய்த வாக்குவாதத்தை ஏன் விமர்சனம் ஆக்கிக் கொண்டாய்! யாரோ சொன்ன விமர்சனத்தை ஏன் முடிவுரையாக ஏற்றுக் கொண்டாய்? பேசுகிறவர்களின் வார்த்தைகளை எல்லாம் கேட்டு உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டே இருக்காதே!நீ இப்படித்தான் என்று கூறியதை எல்லாம் கேட்டுவிட்டு உன் குணத்தை அப்படியே வைத்துக் கொண்டு விடாதே! உன்னை உயர்த்துகின்ற உன்னத சிந்தனைகளை உனதாக்கி கொண்டே உன் எண்ணங்களை உயர்த்து உன் மனம் ஒன்றும் செய்து முடித்துவிட்ட சிற்பம் அல்ல செதுக்கப்பட்டு கொண்டு இருக்கும் சிற்பம் தான் என்பதை உணர்ந்து கொள். சிறந்த ஒழுக்கங்களை உன் குணங்களாய் சீர் படுத்திக் கொண்டே இரு. நம்பி விடாதே! ஒரு எல்லைக்குள் நிறுத்தி விடாதே? உன் பயணத்தை என்றும் முடித்து விடாதே! அவர்கள் எதையாவது கூறிக்கொண்டே தான் இருப்பார்கள் நீ எதையும் பொருட்படுத்தாது மேலே ஏறிக்கொண்டே இரு.
காலை பிறந்து விட்டது வேளை மலர்ந்து விட்டது நாளை என்று எதையும் ஒத்தி போடாமல் இன்றே விரைந்து முடி .எதையும் எதிர்பாத்திடாது யாரையும் எதிர் நோக்கிடாது உன் கடமை எது என்பதை உணர்ந்து பின் சரியாய் செய்து முடி. சரியாக் கற்று முடித்து முறையாகப் பயிற்சி எடுத்து நம்பிக்கையோடு உன் இலக்கை உறுதியாகத் தொட்டு விடு. வெற்றியை மட்டும் எண்ணிடாது தோல்வியை என்றும் எண்ணிடாது கடமையில் மட்டும் கவனமாக இருந்து வெற்றிக் கொடிகட்டி சிகரம் எட்டி முத்தமிடு.
மனம் எதைப் பற்றி இருக்கிறதோ! குணம் அதைப் பற்றியே சுழலுகிறது! தேவைகள் அங்கேயே நிறைகிறது! தேடல்கள் அங்கேயே முடிகிறது.பார்வை அதையே ரசிக்கிறது !கேட்பவைகளில் அதையே சுவைக்கிறது!சிந்தனை அதில் நனைந்தே எழுகிறது! செயல்கள் அதன் வழியே நடக்கிறது. எதுவாக நீ ஆசைப் படுகிறாய்! அதுவாகவே நீ மாறி விடுகிறாய்!அது மட்டும் எதுவென்று நீயே பூர்த்தி செய்! அது மட்டும் வாழ்க்கையில் சரியாய் பூர்த்தி செய்.
உன் தலை எழுத்தெல்லாம் வெறும் கோடுகளாய் உன் உள்ளங்கையில் தான் இருக்கிறது.கோடுகளின் ஓவியங்களைப் பார்த்து புரிந்து கொள்ளப் பழகு இல்லா விட்டால் ஓவியங்கள் கூட சில சமயம் வெறும் கோடுகளாய் தோன்றும்.அழகு ரசிக்க கற்றுக்கொள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் .அசிங்கத்தையும் ரசிக்க கற்றுக்கொள் வாழ்க்கையே சந்தோசமாக இருக்கும்.
திறக்க கண் திறக்க முன் உதித்த சூரியனே! ரசிக்க நான் ரசிக்க முன் மலர்ந்த பூவினமே! சுவைக்க நான் சுவைக்க உணவளித்த தாய்குணமே! மலைக்க நாள் மலைக்க வான் உயர்ந்த மலை அழகே குடிக்க நான் குடிக்க பாய்ந்து வந்த நீர் இனமே தவிக்க நான் தவிக்க ஆறுதல் தந்த பெண் இனமே வியக்க நான் வியக்க விந்தை செய்யும் என் வாழ்வே கசக்க நான் கசக்க என்னுள் இருக்கும் தீ குணமே! அழிக்க உனை அழிக்க இனித்திடும் என் வாழ்வே.
அவர்களது அரிச்சுவடியில் இருந்து அணு அணுவாய் என்னை செதுக்கும்உத்தியை அறிகிறேன்.அவர்கள் வாழ்க்கைவழி முறையில் இருந்து தொடர்கிறது…என் வாழ்வின் ஒளி! அவர்களது நம்பிக்கையின் மூலமே என் நம்பிக்கையை வளர்த்து வாழ்கிறேன். அவர்கள் யார் என்று கூறிவிட முடியாது நல்லோர்களை யாரும் மறைத்து விட முடியாது. எல்லோரும் ஒருநாள் இறந்துவிட்டாலும் கூட எப்போதும் நம்மிடம் வாழ்பவர்கள் நல்லோர்கள். என்னை மனிதனாக்கியது அவர்கள் விட்டுச் சென்ற வார்த்தைகள் தான்.நான் வீழ்ந்த போது என்னை தூக்கிவிட்டது! நான் துவண்ட போது என்னை தூசி தட்டியது! வெற்றி பெற்ற போது வாழ்த்து சொன்னது! தோல்வியுற்ற போது தட்டிக் கொடுத்தது! என்னை மனிதனாக்கியது! நான் எதுவாக ….ஆனாலும் என்றும் என்னோடு இருக்கிறது! அவர்களது வார்த்தைகள் பெற்றோரின் அடிச்சுவடிகள்.