Author: admin

“தாத்தா….தாத்தா இங்கே  பாருங்கள். இவன் கடைக்கு போகவில்லை என்று இவனது அம்மா எப்படி அடித்து இருக்கிறார்கள் பாருங்கள் தாத்தா’ என்றனர்.’பாவம் இவன் முதுகு எல்லாம் வீங்கி கிடக்கிறது”என்றான் ஒரு சிறுவன்.“அப்படியா…..நீ அம்மா சொன்னதை கேட்டிருக்கலாம்  இல்லையா? கேட்டிருந்தால் இந்த அடி விழுந்திருக்காது அல்லவா?” என்று அன்புடன் வினவினார் தாத்தா.“சரி உனக்கு ஒரு கொழுக்கட்டை கதை சொல்கிறேன் கேள்” என்றவர் சொல்ல ஆரம்பித்தார். ஒரு ஊரில் மைதிலி ,முரளி என்ற தம்பதிகள் இருந்தார்கள்.இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆனது.ஒருநாள் மைதிலி தன கணவனிடம்,”எங்க ஊருக்கு போய் அம்மா,அப்பாவை பார்த்து வரலாம்.எனக்கு அவர்கள் நினைவாகவே இருக்கிறது’ என்றாள்.புது மனைவி ஆசைப்பட்டு விட்டாளேஎன்று முரளியும் தன மனைவியை அழைத்துக்கொண்டு மாமனார் ஊருக்குச் சென்றான்.மகள்,மருமகனைப்  பார்த்த மாமனும்,மாமியும் ஆனந்தம் அடைந்தனர்.புது மருமகன் திடுதிப் என வந்து  நிற்பதைப் பார்த்து கையும் ஓடவில்லை ,காலும் ஓடவில்லை.என்ன சாப்பிட கொடுப்பது என யோசித்து மாமியார் அரிசியை ஊற…

Read More

மதுரைக்கு தென் மேற்கில் திருப்பரங்குன்றம் கி.பி.773 இல் பராந்த நெடுங்சடையன் கருவறை குகை கோயில்.765-815-ல் பாண்டிய மன்னர், நாயக்கர் கால குடைவரைக் கோயில்.முருகன்,தெய்வயானை திருமணத்தை பிரம்மா நடத்தி வைக்க இந்திரன் ,சிவன், பார்வதிக்கு தாரைவார்த்து கொடுத்த இடம். திருப்பரங்குன்றம் முருகன் என்றும் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.                              பல்லவிகுன்று தோரும் இருந்தாலும் முருகா திருப்பரங்குன்றம் போல் ஆகுமா முருகா  (கு)                        அனுபல்லவி யானை முகன் தம்பியே முருகா தெய்வானையை மணம் புரிந்தாய் முருகா    (கு)                         சரணம் சிவனின் மைந்தனே முருகாஇந்திரன் மருமகனே முருகா மயிலேறி  வந்தவனே முருகா மணக்கோலம் கொண்டாய் முருகா    …

Read More

வெள்ளி முளைத்தது !வானம் சிவந்தது !வெண்பனி மறைந்ததடா !-கதிரோன் வருகையும் தொடர்ந்ததடா !    மலர்கள் மலர்ந்தன     மனம் மிகப் பரப்பின     மாபெரும் இன்பமடா-இது ஓர்   மகிழ்ச்சியின் துவக்கமடா !துன்பம் மறைந்தது துயரம் தொலைந்தது இன்பங்கள் குவிந்ததடா -தைமகள் வந்த நல் வேளையடா!   பொங்கல் வழிந்தது    புது எழில் பூத்தது    தமிழர் தம் வீட்டிலடா-இது தான்    தமிழரின் விழா வெனடா!

Read More

செங்கதிரோன் செல்வனையே போற்றிப் பாடி    செழுமைக்கும் நன்றியினைச் சாற்றி யேதான் எங்கணுமே உழைக்கின்ற உழவர் இந்த    எழில்நாட்டில் பசுமையினை விளைத்தே டுத்து பொங்கிடவே செய்கின்ற பொங்கல்! மக்கள்    பூரிக்கப் புத்தாடை புனைந்து கொண்டு பொங்குகின்ற தைப்பொங்கல்! திருநா ளாகும்   புதுமைவிழா உலகத்தின் பொதுவி ழாவே!பண்பாட்டில் உயர்வினையே சேர்த்துக் கொண்டு    பழகுகின்ற நாகரிப் பண்பைப் போற்றி நண்பர்கள், சுற்றங்கள்,புடையே சூழ    நன்னாளில் மாந்தர்கள் மகிழ்ச்சி பொங்கமண்பானை  அடுப்பேற்றிப் பொங்கல் பொங்கி    மதிப்புடனே உழவர்களைப் போற்று கின்றார்!பண்பான இப்பொங்கல் திருநா  ளாகும்   பண்டிகைஇவ் வுலகத்தின் பொதுவி ழாவே!தங்கமென நெல்விளைத்துப் போர்க்கு வித்துத்    தரையினிலே உலர்த்தெடுத்தி அரிசி யாக்கி  மங்காத தைத் திருநாள் பொங்கல் பொங்கி    மகிழ்ச்சியுடன் பலருக்கும் வழங்கு கின்றார்பொங்கலென்று மகிழ்கின்ற மாந்தர் தாங்கள்    புரட்சிமனக் கொள்கையிலே ஓங்கி நின்று தங்குதடை இல்லாமல் தனித்தே ஓங்கும்    தமிழர்விழா  உலகத்தின்  பொதுவி ழாவே !

Read More

நெஞ்சத்தில்  அன்பு பொங்கநினைவெல்லாம் கருணை பொங்கவஞ்சகத்தை மாய்த்திடுவாய் பொங்கலேவாஞ்சையினை  ஏற்றிடுவாய் பொங்கலே!அறங்களிலே வாழ்வொளிரஅணைப்பதிலே கரமிணையமறங்களினை வீழ்த்திடுவாய் பொங்கலேமனந்தன்னை வீசிடுவாய்  பொங்கலே!வன்முறையின்  துயர்களைந்து வளர்பகையின் களைகளைந்துநன்முறைகள் வளர்த்திடுவாய் பொங்கலேநலிவுகளைச் சாய்த்திடுவாய் பொங்கலே!சாதிமதப் பிரிவுவீழசண்டையிடும் காழ்ப்பு வீழவீதியெல்லாம் பொதுமையாக்கு பொங்கலேவிளைச்சளிலே இன்பமாக்கு பொங்கலே!ஏழ்மையினை வீட்டிலோட்டி ஏய்ப்போரை  நாட்டிலோட்டி வாழ்வொளிர வளமைசெய்வாய் பொங்கலேவாழ்த்தொலித்து இனிமைசெய்வாய் பொங்கலே!செங்கரும்பின்  சுவைபொழிந்துசெந்நெல்லின் மணி குவித்து மங்கலத்தைத் தெளித்திடுவாய்  பொங்கலேமகிழ்வளித்துப் பொங்கிடுவாய் பொங்கலே!

Read More

தமிழ்த்தாயின் மூத்த மகள் தரணி போற்றும்    தண்டமிழர் உழவர்க்கு உகந்த சேயேஅமிழ்தமென அந்நாளில் மக்கள் எல்லாம்    ஆனந்தமாய் பொங்கலிட்டு மகிழும் நாளே !விளைகின்ற விளைச்சல்கள் அதிகமாகி    வினைசெய்ய செல்வம்தாம்சேமிக் கும்நாள் வளைகின்றசெங்  கரும்பும் மஞ்சள் உண்டு    வண்டமிழர் முக்கனியும் காய்கள் உண்டு கோதையர்தம்  குலம்விளங்க கொண்டா டும்நல்   கோமாதா வழிபாடும் உண்டே அன்று !பதை மாறா பைந்தமிழர் போற்றி நின்ற    பண்பாடு விளக்குகின்ற திருநாள் நன்று !தீதைவிலக்கி குப்பைகளைத் தீயில் இட்டு    தீவைத்துக் கொளுத்துகின்ற காப்புக் கட்டு !பேணுகின்ற உழவர்கள் இன்பங் கொண்டார் !பழையனவே கழித்துநல்ல புதிய வாழ்க்கை    பாங்காகத் தொடங்குவார்க்கு முதல் தலைப் பொங்கல்அழைக்கின்ற விருந்தினருக்கு அறுசுவை யோடு    அன்போடு அளிக்கின்ற திருநாள் பொங்கல்!மழைபொழிந்து வயல்வளமும் பெருக வேண்டி    மக்களெல்லாம் வான்பார்த்து வழிபடும் பொங்கல்தழைக்கவே தைமகளே வருக !வருக !   தாழ்ந்திருப்போர் யார்வாக வருக ! வாழ்க !

Read More

தமிழர்களின் அடையாளத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.அவற்றில் முதன்மையானது பொங்கல் திருநாள் என்றால் மிகையில்லை.சங்க காலங்களில் இருந்தே தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் நிகழ்வாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த விழா  அறுவடை ,பாவை நோன்பு,மஞ்சு விரட்டு திருவிழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழ்நாடு தவிர பல வெளிநாடுகளிலும் குறிப்பாக இலங்கை, மொரீசியசு,மலேயா,சிங்கப்பூர், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் தமிழர்கள் எங்கெல்லாம் வியாபித்து இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த விழா ஆரம்பத்தில் நாட்டில் மழைபொழியவும்,நாடு செழிக்கவும்,கால்நடைகள் சிறக்கவும் ஆயர்கள் இறைவனை குறிப்பாக கிருஷ்ண பகவானை நோக்கி வழிபாடு விழாவாக நடத்தி வந்தார்கள்.இதனால் கோபம் கொண்ட இந்திரன் சினமுற்று காற்று,மழை என வரவழைத்து மக்களை வதைக்க முயன்றதாகவும் அவர்களை காக்க பகவான் கிருஷ்ணன் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களைக் காத்ததார் .அந்த நாளையே சூரிய நாராயண பூஜை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.பொங்கல்திருநாளில் முதலில் தேவையானவற்றை கழித்து எரிப்பது போல்,நமது மனங்களில் உள்ள தீய குணங்களை யும் எரித்து…

Read More

தமிழர்களின் மகிழ்ச்சி கலந்த  வீர விளையாட்டாக ஆண்டாண்டு காலமாக  கொண்டாடப்பட்டு வந்த விளையாட்டு தான் மஞ்சு விரட்டு என்கிற ஜல்லிக்கட்டு.பல நூற்றாண்டு காலமாக இந்த விளையாட்டு குறிப்பாக மதுரை மாவட்டம் அதைச்சார்ந்த தற்போது சிவகங்கை,புதுக்கோட்டை,தேனி மாவட்டங்களில் பிரபலம்.பண்டைய காலங்களில் இருந்து பொங்கல் பண்டிகையின் போதும்,சில இடங்களில் கோவில் திருவிழாக்களிலும்  மஞ்சு விரட்டு விழா நடத்துவது வழக்கம். இந்த விழாவில் காளைகளை அடக்கி வெற்றி பெரும் வீரர்களுக்குத் தான் பெண் கொடுப்பவர்களும் உண்டு. இதற்காக வீர காளைகள் வளர்க்கப்பட்டு வந்தன.பெரும்பாலும் இந்த காளைகள் ஒரு கவுரவத்துக்காக வளர்க்கப்பட்டு ,குறிப்பிட்ட அந்த மஞ்சு விரட்டு விழாவில் மட்டுமே பயன்படுத்தப்படும்.இந்த காளை மாடுகளுக்கு ஆண்டு முழுக்க ராஜ உபகாரம் தான். இதில் கிராமம் முழுவதும் மஞ்சு விரட்டு விழா நடத்துவார்கள்.சமீப காலமாக அதை ஜல்லிக்கட்டு என்று அழைக்கிறார்கள்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு,அவனியாபுரம்  போன்ற இடங்களில் நடந்த  இந்த ஜல்லிக்கட்டு விழா அனைவரையும் கவர்ந்தது. விழாவில் காளைகளை…

Read More

மண்ணில் உதிரும் சருகுகள் எல்லாம்    மக்கி உரமாகி வீரியத்தைக் கொடுக்கும் மண்ணில் உறுஞ்சி எடுத்த நீரெல்லாம்    மீண்டும் மழையாய் பலன் கொடுக்கும் மண்ணில் சிந்திய இரத்தம் எல்லாம்   நெஞ்சு உரமாய் எழுச்சி கொடுக்கும் மண்ணில் விதைத்த விதை எல்லாம்    முளைத்து நல் விருட்சம் ஆவது போல…. விதைத்தது மனித இரத்தமும் சதையும்    சகோதர உணர்வும் தாய் பாசமும் புதைந்தது தமிழன் உடல் என்றாலும்    எழுவது அவனது உணர்வின் சக்தி சிதைத்தது தமிழர் இனம் என்றாலும்    முளைத்தது உலக நாட்டு மண்ணில் வதைத்தது வெறித்தனம் என்று உணர    தர்ம தேவதை வழி வகுப்பாள்புத்த தர்மம் உயிர்களைக் கொல்லாமை    தமிழின உயிர்களை கொன்று குவித்து பித்து பிடிக்க வைப்பது தர்மமா ?    அன்பால் அகிலம் காப்பதே ஞானம் சித்திர வதைதான் மனித நேயமா ?   சிந்திக்கும் தருணம் வந்து விட்டது புத்துயிர்  பெற்று தமிழ் இனம்    புதைந்த குழியில் இருந்தே எழுவான்.

Read More

ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக்  காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும்  அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.அந்த வீட்டில் வசிக்கும் அம்மா மரங்களிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்தியதே சந்தோசத்திற்கு காரணம்.இப்படி நாட்கள்  ஓடிக்கொண்டு இருக்கும் போது காக்கா சில முட்டைகளை இட்டது.அதை அடைகாத்து குஞ்சுகள் பொரித்தது.குஞ்சுகளுக்கு தேவையான உணவை தாய் காகமும், தந்தை காகமும் எடுத்து ஊட்டி வளர்த்தது.குஞ்சுகளும் உணவுகளை உண்டு வளர ஆரம்பித்தது.இறக்கைகள் வளரத் தொடங்கின.அப்போது  தாய் பறவை தன் குஞ்சுகளைப் பார்த்துக் கூறியது."உங்களுக்கு இறக்கைகள் வளர்ந்து விட்டது, என்று பறக்க முயற்சி செய்யாதீர்கள்.இன்னும் வளர்ந்தால் தான் பறப்பதற்கு வேண்டிய…

Read More