Author: admin

59-பக்தி தரும் மாலை நீயே !       பக்தரை காப்பவன் நீயே ! முக்தி தரும் மாலை நீயே!         முழு மதியும் நீயே! சக்தி தரும் மாலை நீயே!         சங்கடம் தீர்ப்பவன் நீயே !யுக்தி தரும் மாலை நீயே!        யுகமாய் நிலைப்பவன் நீயே !

Read More

பல்லி காவல் தெய்வம் நீயே !     பார்வையில் சித்தன் நீயே !சொல்லிக் கொடுக்கும் தெய்வம் நீயே!       சொல் உறுதியும் நீயே! மல்லி தரும் மருந்தும் நீயே!      மன நெகிழ்வும் நீயே துல்லிய கணக்கு அறிவும் நீயே!      தூய்மை இடமும் நீயே!

Read More

சோம.சந்திரன்,எம்.ஏ,தினத்தந்தி ஆசிரியர்,ஸ்ரீ ஐஸ்வரியம் ஆசிரியர், சக்திநகர் சங்கம்தோற்று       வித்த தலைவருக்கு,     நினைவு அஞ்சலி !               உழைப்பவர் மதிக்கும் தினம் மே      படைக்கும் இறைவனுக்கு ஐந்து தொழில் கழை  துளைபோட இசை வரும்     காற்றில் இசை பரவுவது போல் உழைத்து உயர்ந்த உத்தமர் நீங்கள்      உமது புகழ் மறைந்தும் வாழ்கிறது தோழமை மனங்களில் சிம்மாசனம் இட்டு       ராஜாவாக வாழ்கிறீர் தனியிடம் பிடித்து. இல்லம் நிறைந்து எங்கும் நீங்கள்     என்ன செய்தாலும் அதில் நினைவு நல்ல செயல்கள் என்றும் நிலைக்கும்        விதைத்த விதைகள் வளர்ந்து கொண்டு பல்லாண்டு வாழ்ந்த பேரு பெற்றீர்         பரமன் பாத அடி அடைந்து அல்லல் படும் பிறவி இல்லாமல்       நல்லவை செய்து பெயர் பெற்றீர் வாழ்க்கை என்னும் சக்கரத்தில் வாழ்வது        சுற்றும் பூமியின் சுழற்சியில் சுழன்று காழ்த்தல் அன்பு மறக்கா மனம்       கடத்தும் ஒவ்வொரு…

Read More

45-உளி கொண்டு செதுக்குபவன்  நீயே!          உண்மை பொருள் நீயே !எளிமை கொண்டு நிற்பவன் நீயே!         எரியும் தீபம் நீயே! தளிர் தழைக்க வைப்பவன் நீயே!           தரணி காப்பவன் நீயே !வெளி உறவை அகற்றுபவன் நீயே!          அக அழகு நீயே!

Read More

38-தண்டை அணிந்த முருகன் நீயே!        தடை அகற்றுபவன் நீயே !மண்டையில் எழுதிய எழுத்தும் நீயே!        மனம் நிறைந்தவன் நீயே! உண்டை உடைய பக்தன் நீயே !      உயிர் எழுத்தும் நீயே! பண்டைப் பழம் தெய்வம் நீயே !       பகுத் தறிவும் நீயே!

Read More

491- செய்யும் முன் பலமுறை யோசி தொடங்கியபின் பின் வாங்காதே!492- அடைக்கலம் கொடுத்த பிராணிக்கு எதிர்ப்பு வந்தாலும் அனாதை ஆக்காதே! 493-வலிய மிருகமும் அன்புக்கு அடிமை மனிதப் பண்பு ஆதரவு கொடுப்பது. 494-உயிர் என்பது எல்லோருக்கும் பொது வெளிப்படுத்தும் உணர்வு வேறு.495- தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது உலக இன்பமும் ஒட்டாது. 496-ஏணியாய் உயர்த்தியவரை எட்டி உதைக்காதே ஏழ்மைக்கு வித்தாய் மாறும்.

Read More

திணை வீட்டு முருகன் நீயே!       திறமை தருபவன் நீயே! சாணை தீட்டும் கருவி நீயே!      சாதிக்க வைப்பவன் நீயே!இணை இல்லா முருகன் நீயே !       இன்னல் துரத்துபவன் நீயே! பிணைத்து எம்மை கட்டியவன் நீயே!        பிறவி அறுப்பவன் நீயே!

Read More

35-தேன் உண்ணும் முருகன் நீயே !          இனிக்கும் தமிழும் நீயே !வான் புகழும் முருகன் நீயே !        வழிகாட்டும் துணை நீயே !மான் மயில் காடு நீயே!         மலர் செடியும் நீயே! நான் மாடக் கூடல் நீயே!             நாழி கிணறும் நீயே!

Read More

473- நாவில் தேன் பழம் மணம் சேர்ந்தால் இனிது நாக விஷம் கொடிது.474- நட்பு கொண்டு சந்தன மணமானால் நாளும் நட்பு வளரும். 475-இசை ஓசை எழுந்து தலைவி இயக்கம் கலைமகள் தானே! 476-ஈக்கு இடம் கொடுத்த போது நோய்க்கும் இடம் கிடைத்தது.477- ஐயம் நம்மை அரவணைத்த போது நம்பிக்கை விலகிப் போனது.478- முயற்சி உறுதி அணிகலன் ஆனால் தளர்ச்சி தானாக மறையும்.

Read More

33-துறவு பூண்டு சென்றவன் நீயே.      துதித்து போற்றுபவன் நீயே!உறவு துறந்து தனித்தவன் நீயே!       தனித்து சாதித்தவன் நீயே !மறம் விளைந்த மண் நீயே !        மனித பண்பும் நீயே! வறம் போக்கி காப்பவன் நீயே !        வாழ வைப்பவன் நீயே!

Read More