

வெள்ளி முளைத்தது !
வானம் சிவந்தது !
வெண்பனி மறைந்ததடா !-கதிரோன்
வருகையும் தொடர்ந்ததடா !
மலர்கள் மலர்ந்தன
மனம் மிகப் பரப்பின
மாபெரும் இன்பமடா-இது ஓர்
மகிழ்ச்சியின் துவக்கமடா !
துன்பம் மறைந்தது
துயரம் தொலைந்தது
இன்பங்கள் குவிந்ததடா -தைமகள்
வந்த நல் வேளையடா!
பொங்கல் வழிந்தது
புது எழில் பூத்தது
தமிழர் தம் வீட்டிலடா-இது தான்
தமிழரின் விழா வெனடா!