இசை என்ற ஒரு இன்பச் சொல் உண்டு. அது வெறும் சொல்லென்று சொல்லிவிட முடியாது. அது மிகவும் சிறப்புடைய வன்மை மிகுந்த சொல் ஆகும்.அது மனிதனை மட்டுமல்ல இறைவனையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. இயற்கையையும் உருக்கம் தன்மை கொன்டது.மகிழ்ச்சியில் நெய்யும் நூலாகவும், நெகிழ்ச்சியில் தாயாகவும் மருத்துவத்தில் மருந்தாய் இருந்தும் இன்னும் எத்தனையோ ஆற்றல்களை உள்ளடக்கியது இசை. இத்தகைய இசை இயல்புகளை சற்று ஆழ்ந்து பார்த்தால் தான் அதன் அற்புத சக்தி என்னவென்று புரியும்.இசை என்பது மிகுந்த சிறப்புடையது என்பது நமக்குத் தெரியும். இத்தகைய இசைக்கு அடிப்படையாக இருப்பது சப்தம். சப்தம் என்பதற்கு பொருள் என்ன தெரியுமா ? ஆற்றல், சக்தி என்றும் கூறலாம். அதை அனைவரும் அனுமதித்து இருக்கிறோம்.ஆனால் அதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா ? இதை படித்து விட்டு உணருங்கள்.எந்த ஒரு உயிருள்ள , உயிரற்ற அனைத்துக்கும் உள்ள ஒற்றுமை சப்தம் எழுப்புவதுதான் .எல்லாவற்றிலும் சப்தங்கள் நிறைந்து உள்ளன.சப்தம் எழுப்பும்…
Author: admin
"உணர்வற்ற உயிராகவும் ", உயிர் தரும் ஓர் உடலாகவும் இருப்பது பெண் இனம் "மது,மாது, சூது" என பெண்ணையும் ஓர் போதை பொருளாக்கி பார்ப்பது ஆண் இனம் அன்று பாண்டவர் சபையில் துச்சாதனன் கைகளால் துயில் உரிக்கப்பட்டாள் ஓர் பெண் இன்று பல துச்சாதனர்கள் பெண்களை தன் கண்களால் துயில் உரிக்கிறார்கள்இன்று எங்கே,அந்த கண்ணன் ?அடுப்பாங் கரையிலிருந்து போராடி முற்றத்துக்கு வந்தாள் ! முற்றத்திலிருந்து போராடி வாசலுக்கு வந்தாள் !! வாசலிலிருந்து போராடி இன்று வேலைக்கு வந்தாள் !!!இப்படி போராடி போராடி ஜெயித்த பெண்களைக் காட்டிலும் தோற்று அடுப்பாங் கரையிலே அஸ்தியான பெண்கள் அதிகம் சந்தேகம் என்னும் ஓர் உணர்வைக் கொண்டு இங்கு சில ஆண்கள் ராமராகின்றனர் சந்தேகத் தீயில் இருந்து மீண்டு எழமுடியாமல் பல சீதைகள் பலியாகின்றனர் !படுக்கையில் சமம் தரும் ஆண்கள் ஏனோ அவள் தம் வாழ்க்கையிலும் சமம் என நினைக்க மறந்து விடுகின்றனர் மண்ணுக்கும் கேடாய் மதிப்பிரோ பெண் இனத்தை !
அன்னை பால் கொடுத்த போது தமிழ் உணர்வு கலந்து விட்டதால்தென்னை மரம் பலன் தந்து தன்னை பிறருக்குக் கொடுத்து வாழ்ந்தது தன்னை உணர்ந்த தமிழன் எல்லாம் பிறருக்கு உதவும் நற் பண்பில் முன்னை பயன் மூத்த தமிழன் முத்தமிழ் உணர்வில் ஒன்று பட்டு உள்ளம் நிறைந்த தாய் மொழி ஊட்டச் சத்து நிறைந்த முப்பால் கள்ளம் இல்லா மனம் தரும் கபடம் சூது ஓடிப் போகும் பள்ளம் மேடு பார்த்து வழிவிடும் துள்ளும் மனம் தமிழ் சுவையில் துன்பம் கூட இன்பம் ஆகும்.ஒன்று படுத்தும் தமிழ் பணி ஓய்வு அறியா முழு மதி என்றும் இனிக்கும் இன்ப மொழி ஏற்றம் தரும் தமிழ் மொழி வென்று நிற்கும் செந்தமிழ் வாழ்வில் வாகை சூடும் முத்தமிழ் புத்துணர்வு இன்றும் என்றும் அமுத மொழி அழிவு இல்லா வாழும் மொழி.
உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது தண்ணீர்.காற்று.தண்ணீரை பாதுகாக்கவும், காற்றை மாசுஅடையாமல் பாதுகாப்பதும் நமது கடமை. குறிப்பாக தண்ணீரை நாம் நம் வருங்கால சந்ததிகளுக்காக சேமித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.நமது பாட்டனார் காலத்தில் இருந்த நீர் நிலைகளில் பத்தில் ஒன்று கூட இப்போது இல்லை. கண்மாய், நீரோடைகள்,ஆறுகள்,கிணறுகள் ,குட்டைகள் போன்றவற்றின் பெயர்கள் எல்லாம் எழுத்தளவில் தான் உள்ளது அதன் அடையாளங்கள். காணாமல் போய்விட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் தான் காட்சியளிக்கின்றன.தண்ணீரை சேமிப்பதும்,நீர்நிலைகளை பாதுகாப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. விஞ்ஞானிகள் உலகத்தில் தண்ணீர் தேவைக்காக ஒருவரை ஒருவர் தாக்கி போராடும் சூழல் உருவாகும் என்று அபாய மணிஅடித்துள்ளார்கள்.இப்போது இருந்து கூட நாம் தண்ணீரை சிக்கனமாகவும் -மாசுபடாமலும் பாதுகாக்கத்தொடங்கவேண்டும்.குழந்தைகளுக்கு தண்ணீரின் அருமையை எடுத்துச் சொல்வது நமது கடமையாகும். நம்மை சுற்றி நகரமாக,கிராமமாக எப்படி இருந்தாலும் இருக்கும் இடங்களில் உள்ள குளம், குட்டைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அற்ப சந்தோசங்களுக்காக…
வான் மதியும்,ரவியும் அண்ணன்,தங்கை, ரவி நான்காம் வகுப்பும் ,வான்மதி மூன்றாம் வகுப்பும் படித்துக்கொண்டு இருந்தார்கள்.இருவரும் சேர்ந்தே பள்ளிக்குச் செல்வார்கள். பள்ளி முடிந்த பின் தன தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருவான் ரவி.இருவரின் அன்பைப் பார்த்த எல்லோரும் பாசப்பறவைகள் வாராங்கடா என் கிண்டல் செய்தவர்களும் உண்டு.அன்பை புரிந்து கொண்டவர்களும் உண்டு.எதுவும் பாதிக்காத வயது.குழந்தைப் பருவம் என்பதால் இரண்டையும் ஏற்றுக்கொண்டனர் இருவரும்.வான்மதி படிப்பில் கெட்டிக்காரி எதையும் சோதித்து பார்க்க வேண்டும் என்ற செயல் திறனும் இருந்தது. வான்மதி அண்ணனிடம் எதற்கு? எப்படி என விளக்கமும் ஆக்க பூர்வமான கேள்விகளும் கேட்பாள். ரவி தனக்கு தெரிந்த முறையில் பதில் சொல்வான்.ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது…..சிறுவர்,சிறுமிகள் பேசிக்கொண்டு வந்தார்கள்.அதில் ஒரு சிறுவன் பாலு கூறினான்.’ஊமைக்கு மூக்கை சொரிந்தால் கோபம் வரும்’ என்று, உடனே ,வான்மதி கேட்டாள் ‘உண்மையாகவா/’ என….’ஆமாம் .எங்க வீட்டற்கு பக்கத்தில் ஒரு அண்ணன் இருக்கிறார்கள்.அவர்கள் முன் சென்று மூக்கை சொரிவேன்.என்னை அடிக்க…
அறிந்து கொள்ள ஆயிரம் உண்டு தெரிந்து கொண்டவறைப் போதும் என்றால் நீ அங்கேயே நின்று கொண்டு இருப்பாய் எதைத்தேடி எங்கு அலைந்தாலும் எடுத்துக்கொள்ள ஏராளமாய் உண்டு புதைந்திருக்கும் மண்ணில் இருந்து இல்லாத வானம் தாண்டி எல்லாமும் எதோ ஒன்றை தந்து கொண்டுதான் இருக்கிறது கொடுப்பது கடவுள் தான்பெறுபவன் மனிதன் தான் மனிதனாய் இருந்து நீ எவ்வளவும்பெற்றுக் கொள்ளலாம் கட்டி ஆளலாம்எடுத்துச் செல்வதற்கு இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது ஆனால் நீ ….கடவுளாய் மாறி கொடுத்துச் செல்வதற்கு உன் உடல்உறுப்புக்கள் உள்ளன மனிதனாய் இறந்து விடாதே கடவுளாய் வாழ்ந்திடு .
தாகம் தீர வாவென்று அழைத்தோம் உயிரை போக்கிட உருவெடுத்து வருகிறாயே தமிழகத்தில் உள்ள நதிகள் எல்லாம் நிறைந்து இருக்கலாம் ஆனால் நீ ….பறித்த உயிர்களுக்கு பதில் யார் சொல்வது ?தட்டு தடுமாறி முளைத்த பயிர்கள் எல்லாம் மூழ்கடித்து வீனடித்தாயே ஏன்?யாருக்கு யார் மீது கோபம் தண்ணீரே உனக்கு என்ன தாகம் ?நீ வராத வேளையில் உன் இடத்தில் வீடமைத்த பாவமோ ……….நீ செல்லுகிற பாதையை மறைத்து விட்ட கோபமோ …நீ வராமல் இருந்தது உன்குற்றம் நீ இல்லாமல் உயிர் இல்லை என்றிருந்தோம் …இன்று நீ வந்தாலும் உயிர் இல்லை என்றால் எப்படி ?கடன் வாங்கி கட்டிய வீட்டில் ஜலசமாதி ஆனவர்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம் கரைகள் தாண்டி வந்த மழைக்குகண்டனம் தெரிவிக்கிறோம் !!அனேகமாக ஓடுகிற அத்தனை கனரக வாகனங்களின் பின்னாலும் எழுதப்பட்டு இருப்பது தான் "மழை நீரை சேமிப்போம் "என்று வெறும் வாசகங்களாய் இன்னும் எத்தனை காலம் இருக்கப்போகிறதோ மழையே இங்கு யாரையும் குறை கூறி பயனில்லை உன்னை திட்டித் திட்டித் தான் ஆறுதல் அடைந்து கொள்ளுகிறோம் நம்மை சுற்றி நடப்பவைகளுக்கு நாம் தான் காரணம் நாங்கள் மாறப்போவதில்லை நீ மாறி விடு மழையே நீ !! மாறிவிடு தண்ணீர் வேண்டும்!! கண்ணீர் வேண்டாம் !!
மனதில் உறுதி வேண்டும்,வாக்கினிலே இனிமை வேண்டும்.நினைவு நல்லது வேண்டும் என்றார் பாரதி.மனதில் உறுதிவாக்கில் இனிமை நினைவு நல்லது இவை மூன்றும் ஒரு பெண்ணுக்கு அமைந்து விட்டால் அவள் பாரதி கண்ட புதுமை பெண்ணாக வெற்றி நடைபோடுவாள் என்பது உறுதி.படிக்காத பெண்களில் இருந்து படித்த பெண்கள் வரை துன்பமும்,துயரமும் வருவது இயற்கை.அதை நாம் எப்படி எதிர் கொள்வது.எப்படி முறியடிப்பது என்பது தான் நமது திறமை.துன்பம் வரும் போதுஎல்லாம் துவண்டு விடாமல் துணிந்து எதிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.பிறர் நம்மை துன்பப் படுத்தும் போதுபொறுமையாக ஏற்றுக்கொண்டு,அவர்களை தாமாகவே உணரச் செய்வது.வெளி இடங்களுக்கு நாம் தனியாக செல்லும் போது கண்டிப்பாக ,கண்டிப்புடன் நடந்து கொள்வது.நாம் ஆடவருடன் பழகும் போது ஒரு எல்லையை வரைமுறை படுத்திக் கொள்வது.தனது மன வலிமையை தானே வளப்படுத்திக் கொள்வது.இவை எல்லாம் நம்மை நாமே காத்துக் கொள்ள உதவும் , மனஉறுதியும்,கவசமும் ஆகும்.எல்லா பெண்களும் கராத்தே கற்றுக்கொள்ள முடியாது.ஆனால் எல்லோரும் மன வலிமையை கற்றுக் கொள்ள…
வான் தரும் கோடை மழை புவி உயிர் வாழத் தேவை தான் தனது எண்ணம் கொண்டு ஏரி குளம் மூடியதன் விளைவு ஏன் இந்த மழை என்று எண்ணித் தவித்த தவிப்பில் சென்னை ஆன்மா வாழ இயற்கை தேவை அழித்து வாழ்ந்ததால் இயற்கை சீற்றம் தண்ணீர் தண்ணீர் என்று தவித்தவர் தண்ணீர் வெள்ளத்தில் தவிக்கும் நிலை கண்ணீர் விட்டு கதறும் குழந்தைக்கு பால் கூட கிடைக்காத அவலம் மண் தெரியாத வெள்ளக் காடு படகு விட்டு காப்பாற்றும் நிலை விண் பொய்த்துப் போகும் என்ற அசட்டையால் வந்த அதிர்ச்சி வைத்தியம் சோதியாய் வந்த அண்ணாமலை அப்பன் நீராய் கொட்டி குளிர்ந்து போனான் சாதி மதம் பார்க்காத இறைவன் உயர்வு தாழ்வு பார்க்க மாட்டான் போதிமர புத்தர் போதனை போல் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மோதி முட்டி வரும் தண்ணீருக்கு எல்லோரும் சமம் தான் என்று !
தமிழ் நாட்டில் சமீபகாலமாக சரியாக மழை பெய்யவில்லையே என்ற கவலை உள்ளுக்குள் இருந்து வந்தது.இந்த ஆண்டுகூட தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு நிறைவு தரவில்லை.இந்த நிலையில் தான் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தனது மழைப்பொழிவை தொடங்கியது. தமிழகம் முழுவதும் இந்த மழைபரவலாக பெய்து வந்தது. சில இடங்களில் கன மழையும் பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ந்தனர். முழு கொள்ளளவை எட்டாத நிலையிலிருந்த நீர் நிலைகள்,குளம்,குட்டைகள்,ஏரிகள்,ஆறுகள் நிரம்பத் தொடங்கின.இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவானது.இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது.இந்த மழை சென்னை,காஞ்சீபுரம்,திருவள்ளுவர் கடலூர்,புதுச்சேரி, காரைக்கால்,மற்றும் கடலோர மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கை உண்டாக்கியது.ஒவ்வொரு காற்றழுத்த தாழ்வுநிலை அப்படியே இரண்டு மூன்று நாட்கள் நிலைகொண்டு இருந்ததால் மழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய ஆரம்பித்தது.வானத்தை பொத்து விட்டது போல் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது.ஒரு காற்றழுத்ததாழ்வு நிலை முடியும் போது அடுத்த காற்றழுத்த தாழ்வுநிலை…