தமிழர்களின் அடையாளத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.அவற்றில் முதன்மையானது பொங்கல் திருநாள் என்றால் மிகையில்லை.சங்க காலங்களில் இருந்தே தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் நிகழ்வாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.



இந்த விழா  அறுவடை ,பாவை நோன்பு,மஞ்சு விரட்டு திருவிழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழ்நாடு தவிர பல வெளிநாடுகளிலும் குறிப்பாக இலங்கை, மொரீசியசு,மலேயா,சிங்கப்பூர், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் தமிழர்கள் எங்கெல்லாம் வியாபித்து இருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா ஆரம்பத்தில் நாட்டில் மழைபொழியவும்,நாடு செழிக்கவும்,கால்நடைகள் சிறக்கவும் ஆயர்கள் இறைவனை குறிப்பாக கிருஷ்ண பகவானை நோக்கி வழிபாடு விழாவாக நடத்தி வந்தார்கள்.இதனால் கோபம் கொண்ட இந்திரன் சினமுற்று காற்று,மழை என வரவழைத்து மக்களை வதைக்க முயன்றதாகவும் அவர்களை காக்க பகவான் கிருஷ்ணன் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களைக் காத்ததார் .அந்த நாளையே சூரிய நாராயண பூஜை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல்திருநாளில் முதலில் தேவையானவற்றை கழித்து எரிப்பது போல்,நமது மனங்களில் உள்ள தீய குணங்களை யும் எரித்து  நல்ல எண்ணங்களையும்,செயல்களையும் செய்ய சபதம் ஏற்கவேண்டும். ஆங்கில புத்தாண்டின் தொடக்கத்தில் வரும் இந்த விழா  நமக்கு உணவளிக்கும் விவசாயம் சார்ந்த விழா என்பது உண்மை.

நாடு முழுக்க ஒவ்வொரு விவசாயிம் ஒவ்வொரு பொருள்களை விளைவித்து நமக்கு வாழ்வழிக்கிறார்கள். கிராமங்களில்,ஏன் இப்போது நகரங்களிலும் கூட பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இயற்கைக்கும்,நமக்கும் உற்ற துணையாக உள்ள உயிரினங்களுக்கும் இதை ஒரு நன்றி அறிவிப்பு விழாவாக  கொண்டாடி வருகின்றோம்.

இந்த விழாவை வடமாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.பண்டைய காலங்களில் இது இந்திர விழாவாக பல நாட்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.அப்போது வீர வெளிப்பாடு,சுத்தம் செய்தல் ,கன்னியர் -காளைகளின் (ஆண்கள்)வீரத்தை கண்டுணர்ந்து மணம் புரிதலுக்கு ஒரு ஆரம்ப நிலையாக இந்த விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தது. 

எப்படி இருந்தாலும் சரி இது ஒரு முதன்மையான,முக்கியமான விழா என்பதில் எந்த ஒருவருக்கும் ஐயமில்லை.இப்போது எங்கும் நல்ல மழை பெய்து கண்மாய் குளங்கள்,ஏரிகள் நிரம்பி வழிகின்றன.முதல் போகம் விளைவித்து அறுவடை செய்த  மகிழ்ச்சியில் அடுத்த  விளைச்சலுக்கும் நமது விவசாய பெருங்குடி மக்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த பொங்கல் விழாவை பல்வேறு நூல்கள் பலவிதமாக குறித்துள்ளன.’தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ ‘ என்று குறுந்தொகை கூறுகிறது.இதில் இருந்தே இதன் பெருமையை நாம் புரிந்து  கொள்ளலாம்.

நாடு நல்ல பாதையில் செல்ல வளமான வாழ்விற்கும்,வறுமைகள் நீங்குவதற்கும்,இந்த விழா சிறப்பு அடைய வாழ்த்துக்கள்.
Share.

Leave A Reply