Author: admin

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை.உணவு உற்பத்தி செய்யும் புவியில் வானத்தைப் பார்த்து இருப்பவர்க்கு நிலுவையில் பரவலாக வெண்மையாக அசைந்து பெய்யும் மழை

Read More

வான்நின்று உலகம் வழங்கி வருவதால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்றுவானத்தில் இருந்து மழை பெய்து வருவதால் உலகத்து உயிர்களுக்கு வான் தரும் அமிர்தமாக மழை உணரப்படுகிறது.

Read More

அப்பளக்குடுமி தாத்தா உட்கார்ந்திருந்தார்.அவரைச் சுற்றி சிறுவரும் ,சிறுமிகளும் கூடியிருந்தார்கள்.ராமு கையில் கெடிகாரம் கட்டியிருந்தான்.அதை கவனித்த கோபு,’ஏய் ராமு கெடிகாரம் நல்லா இருக்குடா எப்ப வாங்கினாய்’ என்றான்?"தீபாவளிக்கு எங்க அப்பா வாங்கித் தந்தார்கள் "என்றான் ராமு.’டேய், கொஞ்ச நேரம் கொடுடா கட்டி பார்த்து விட்டு தருகிறேன் ‘ என்றான் கோபு.’கொடுப்பதா ?வேண்டாமா ?’ என யோசித்துக் கொண்டிருந்தான் ராமு. இதை கவனித்த தாத்தா ‘கோபு இங்கே வா’ என்றார்.’அடுத்தவர் பொருளை கேட்பதே தவறு.அதற்கு ஒரு கதை சொல்லப் போகிறேன்’என்றார் தாத்தா.ஹாய்…தாத்தா கதை சொல்லப் போகிறார் என குழந்தைகள் எல்லோரும் அமைதியாக கேட்க ஆரம்பித்தார்கள்.’ஒரு ஊரில் மாலாவும்,விமலாவும் பக்கத்து ,பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்கள். இருவரும் நல்ல தோழிகளாக இருந்தார்கள்.ஒருவர் செய்வதை மற்றவளுக்கு கொடுத்து உண்பது முதல் ஒருவருக்கு இல்லாததை மற்றவளுக்கு கொடுத்து உதவுவது வரை அவ்வளவு நட்பு.  இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் இரவு மாலா வீட்டிற்கு விமலா வந்தாள். ‘வா….விமலா ‘ என…

Read More

தமிழ் நாட்டில் கடந்தமே  மாதம் 2016 இல் நடந்த பொதுத் தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு  பல புதிய பரிமாணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.பொதுவாக ஒன்றைத் தெரிந்து கொள்ள முடியும் .வெற்றிபெற்றுள்ள அ.தி.மு. க.வும், தி.மு.க.வும்  சம பலம்மிகுந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். பல சிறிய கட்சித் தலைவர்கள் தங்கள் நிலை என்ன என்பதை  உணர்ந்து கொண்டுள்ளார்கள்.ஒவ்வொரு தேர்தலிளும் பல சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு  வெற்றி பெற்றதுடன், பெரிய கட்சிகள் தங்களது ஆதரவினால் தான் வெற்றிபெற்றன என்ற மாயத்தோற்றம் ஏற்படும்படி பேசியும், அதன் பின்னர் தாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வென்றிருக்க முடியுமா ?என்ற கேள்வியையும்  எழுப்பி வந்தார்கள் .வெற்றி பெற வைத்த பெரிய கட்சியை துச்சமென நினைத்ததும், அவர்களை அலட்சியப்படுத்தியதும் மக்களுக்கு என்ன காரியங்கள் செய்யவேண்டுமோ அதை செய்யாமல்இருந்ததும் இன்றைய தோல்விக்கு ஒரு ஆணித்தரமான காரணம் ஆகும். திரைப்படங்களில் வேகமும் விவேகமும்,வெற்றியும்…

Read More

ஒற்றையடிப் பாதையிலே நடந்து வரும் அந்த சுகம் நூறடி சாலையின் நெரிசலில் கிடைத்திடுமோ ?பச்சை மரத்தடியில் படுத்துறங்கும் அந்த சுகம் மின் விளக்கு கம்பத்தடியில்எங்கேனும் கிடைத்திடுமோ  ?மண்வாசனை மழையோடுநனைந்து வரும் அந்த சுகம் நகரத்து வீதியினில் கிடைத்திடுமோ ?சுத்தமான சுகக் காற்று சுவாசிக்கும் அந்த சுகம் வாகனப் புகை தாண்டி நமக்கென்று கிடைத்திடுமோ ?              ஊரே உறவென்று வாழுகின்ற அந்த சுகம் உறவே பகைபோல இங்கிருக்க கிடைத்திடுமோ ?மண்ணோடு விளையாடி உறவாடும் அந்த சுகம் பணம் கொண்ட நகரத்தில் கிடைத்திடுமோ ?  குளத்தில் கூட்டாக குளிக்கும் அந்த சுகம் நகரத்து  நீச்சல் குளம்  எந்நாளும் தந்திடுமோ ?அரட்டை அடிக்கின்ற இரவுநேரத் திண்ணை  சுகம் அடுக்குமாடிக் குடியிருப்பின் இறுக்கத்தில் கிடைத்திடுமோ ?பெளர்ணமி முழுநிலவின் வெளிச்சத்தைக் கண்ட சுகம் கண்பறிக்கும் மின் விளக்கின் வெளிச்சத்தில் கிடைத்திடுமோ ?தாவணிப் பெண் சிணுங்கி வெட்கப்படும் அந்த சுகம் சுடிதார்  உடையணியும் பெண்ணிடம் கிடைத்திடுமோ ?வயது போனபின் கூட…

Read More

கடல் சூழ்ந்த இராமேசுவரத்தில் இராமநாதசுவாமி கோபுரம் கம்பீரமாக அருள் புரிந்து கொண்டிருந்தது. கோவிலைச் சுற்றி கடைகள் ,வீடுகள் நாள்தோறும் வரும் பக்தர்கள் கூட்டம் .தங்கள் பாவங்களை அக்னி தீர்த்தமாடி ,பர்வதவர்த்தினி அருளால் வேண்டும் வரம் பெற்றுஇன்புற்று திரும்பும் பக்தர்கள் நாள் தோறும் அலைபோல் வந்து கொண்டே இருந்தனர்.இக்கோவில் பலருக்கு வேலை கொடுக்கும்,வாழ்வு ஆதாரம் .இக்கோவிலை நம்பியே ஊர் மக்களும் வாழ்ந்தார்கள்.இங்கு மத வேறுபாடு எல்லாம் இல்லை.எல்லோரும் உறவினராய் பழகி பல மொழிபேசி பக்தர்களுக்கு உதவியும், தொழில் செய்தும் வாழ்ந்து வந்தார்கள்.எல்லோருக்கும் படி அளக்கும் இராமநாதசுவாமி ராக்கு பாட்டிக்கும் அளந்தார். ராக்கு பாட்டிக்கு யாரும் இல்லை. இராமநாதசுவாமி தான்  தனக்கு சொந்தம் என தேங்காய் பழ கொட்டான் முடைந்து  கடையில் கொடுத்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் கோவில் கட்டி (யானைக்காக அச்சாக அடித்தது.வசதி இல்லாதவர்களுக்கு குறைந்த  விலையில் கொடுக்கும் உணவு ) வாங்கி சாப்பிட்டு காலத்தை கடத்திக் கொண்டு வந்தாள் ராக்கு.ஒரு…

Read More

வேகமாய் பறக்கும் புறா அம்மாவை வந்தடையும் வௌவால்கள்திசையெங்கும் புறப்படும் பறவைகள்இறக்கை முறிந்த  வண்ணத்துப்பூச்சிபல வண்ண மலர்களின் தேன்கூடுஅதைமெல்ல ருசிக்க வந்த எறும்புகள்கருவறையில்உணர்ந்த என்னை குடும்பத்துடன் கருவருத்தாயே…நீங்கள் வாழஎங்களை வாழ விடுங்கள். ..!!!

Read More

மகாபாரத போர்க்களத்தில் போருக்கு ஆயத்த நிலையில் இருந்த சிகண்டியின் பிறப்பைப் பற்றிய விவரங்களையும்,சங்கின் கீர்த்திகள் பற்றியும்  மன்னர் திருதிராஷ்டிரரிடம் விளக்கிக்கொண்டிருந்தான் சஞ்ஜயன்  .”ஆமாம் ” என்ற சஞ்ஜயன்  பாண்டவர் படையினர் ஒவ்வொருவரும் முழங்கிய சங்கின் ஒலி ஆகாயத்தையும் பூமியையும் எதிரொலிக்கச் செய்து, கவுரவப்  படையினர் இதயங்களை பிளக்கச் செய்தது என்றான். பிறகு நடப்பதைக் கூறு என கேட்கிறார் திருதராஷ்டிரர்.  அரசே அதன்ன பின் ஹனுமத் கொடியை உடைய  அர்ஜுனன் அணிவகுத்துப் போர் புரியத் தயாராய் நிற்கின்ற தங்கள் புதல்வர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் பார்த்து , ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது வில்லை நிமிர்த்திக் கொண்டு கிருஷ்ணனை நோக்கி அச்யுதா ,என்னுடைய ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்துங்கள் என்கின்றான் அர்ஜுனன்.அர்ஜுனனை ‘சுபித்வஜன் ‘ என்று ஏன் குறிப்பிடுகிறாய் ? மஹா வீரனான ஹனுமான் பீமசேனனுக்கு வாக்கு கொடுத்திருந்தான். அதனால் அர்ஜுனனின் கொடியில் இருந்து அவ்வப்போது கர்ஜனை புரிகிறார். அதை தங்களுக்கு நினைவூட்டுவதற்காகவே ‘கபித்வஜன்’ என்ற அடைமொழி கொடுத்தேன்…

Read More

அதிகாலை நேரம் சரியாக விடிந்தும் விடியாத பொழுது.ஜில் என்று குளிர்ந்த காற்று .காலை 6.05 மணி இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கிறது, ரெயில்கிளம்புவதற்கு.. வேகவேகமாக பஸ்சில் இருந்து இறங்கிய ரமேஷ் ,கோவை எக்ஸ்பிரசை பிடிக்க ஓடி வந்தான். பிளாட்பார்ம் 2 ஆ…. இ ல்லை !!! 3 ஆ… என்பதில் குழப்பம்.படிக்கட்டுகளின் அருகில் நின்று கொண்டிருந்த ஊழியர் ஒருவரிடம் ‘சார் , சென்னை டிரெயின் எந்த பிளாட்பார்ம்’ என கேட்க, N’3 ம் நம்பர்’ என தகவல் வந்தது தான் பாக்கி. படிக்கட்டுகளில் இரண்டுகால் பாய்ச்சலில் ஓடினான். டிரையினை பார்த்தாச்சு.அப்பாடா என்ற ஒரு பெரு மூச்சு. எந்த பெட்டியில் ஏறினாலும் நம் பெட்டிக்கு நடந்து சென்று விடலாம் என்று எண்ணிக்கொண்டான்.ஏனென்றால்…. அப்போதே மணி 6.15யை தொட்டு விட்டது.ரெயிலில் இடம் பிடிக்க நடை பாதையில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.ரெயிலில் ஏறுபவர்களை விட வழியனுப்ப வந்தவர்கள் வழிமறித்தல் மே அதிகம் இருந்தது. ஒருவழியாக ரெயிலில் ஏறிய, ரமேஷ் தனது இடத்தில் சென்று அமர்ந்தான்.பெட்டியை…

Read More

என் பாதை சரிதானோ? இருட்டு குகைக்குள் இருக்கிறேனோ?வெளிச்சம் தெரியவில்லை..அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை…பயமும்மில்லை.. துணிவும்மில்லை…ஒளி ஒன்று தெரிந்தால் வெளிவந்து விடுவேன்.ஆனால் விதி வந்து மறைத்து விளையாடுகிறதே..!விரல் நுணிதொட்டுத் தடவிஅடி அடியாய் நகருகிறேன் எரிமலையாய் வெடித்து இமயம் தொட முயலுகிறேன். அலச்சியம் இல்லாது இலச்சியம் ஒன்று வைத்துசிந்தை செயல் அத்தனையும் ஒன்றிணைத்து நம்பிக்கை நழுவாது நல்லசெயல் செய்திட செய்திட எண்ணிய யாவும் நடக்கும்வெற்றியின் வாசல் திறக்கும்.

Read More