Author: admin

வாழை மரம் தன்னையே பிறர்க்காக கொடுத்து பிறருக்காக வாழ்வதுடன் தன் பக்க கன்றுகளைப் பக்கத்தில் பரவவிட்டு வாழ்ந்து கொண்டே இருக்கும். தானும் வாழ்ந்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என வாழை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.இனி எவ்வாறு நமக்குப் பயன்படுகிறது என ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.”வாழைப்பூ” துவர்ப்பு சத்து உடையது , துவண்டல், வடை செய்து உண்ணலாம். ”வாழைப்பூ மூலரத்தம் மாபிரமி வெட்டை பித்தம் கோழை, வயிற்றுக் – கடுப்பு கெல்லாம்- ஆழியனல் என்ன எரிகைகால் எரிவந்தொலைத் துடலில் மன்ன வளர்க குந்தாதுவை ” — எனப் பாடியிருக்கிறார்கள்.வாழைப்பூ வாழைப்பூ சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நோயில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். சக்கரை நோய் வராமல் தடுக்கும். இரத்த மூலம், சீதபேதி குணமாகும். தயிருடன் வாழைப்பூ சேர்த்து உண்ணும் போது பெண்கள் கருப்பை பலப்படும். கருப்பை நோய்களில் இருந்து தடுக்கப்படும். வாழைப்பூ சாற்றுடன் கடுக்காயை பொடி செய்து சாப்பிட்டு வர மூல நோய் நலமாகும். ஆண்மை பெருகும், புத்தி…

Read More

அம்மா அப்படிச் சொன்னது எனக்குள் ஏகக் கோபத்தை உண்டாக்கியது. ”ச்சை…. என்ன மனுஷி இவள் ?” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு கடுமையான முகத்தோடு சுடிதார் துப்பட்டாவை கோபமாய்த் திருகியபடி ,அண்ணன் திவாகரைப் பார்த்தேன். அவன் முகமும் கிட்டத்தட்ட அதே போல் தான் இருந்தது. பின்னே… இருக்காதா ? ‘ஒரு தனியார் கம்பெனியில் முப்பத்தியேழு வருடம் மாடாய் உடைத்து ஓடாய்த் தேய்ந்து …. இறுதியில் ஹெட் கிளார்க் என்கிற அந்தஸ்தை எட்டிப் பிடித்த கையோடு அப்பாவுக்கு இன்று பணி நிறைவு பிரிவுபசார விழாவைஎல்லாம் முடித்துக் கொண்டு கையில் பூமாலை.. சந்தன மாலை… இதர பரிசுப் பொருட்களோடு வந்திறங்கிய அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் அம்மா அப்படிச் சொன்னது யாருக்குமே கோபத்தைத்தான் ஏற்படுத்தும்.”த பாருங்க .. என்னோட பெரிய அண்ணன் மகன் கே.பி.எஸ்.காலேஜ்ல அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜராயிருக்கான் .. அவன் கிட்ட சொல்லி வெச்சிருக்கேன்… அவங்க அலுவலகத்தில் கணக்கு வழக்குப் பார்க்கறதுக்கு உங்க மாதிரி பணி நிறைவு…

Read More

மணி சீருடையை தேடினான் காணவில்லை."அம்மா பள்ளி சீருடை எங்கே காணோம்.எடுத்துக் கொடுங்கள் " எனக் கத்தினான் மணி.அடுப்படியில் பரபரப்பாக சமையல் செய்து கொண்டு இருந்த சீதா, மகன் கூப்பிட்ட சத்தம் கேட்டு சாம்பார் பாத்திரத்தை  இறக்க முற்பட்டதால் கைதடுமாறி சாம்பார் சிறிது கையில் கொட்டிவிட்டது."அம்மா" என அலறியவள் ,தண்ணீரில் கையைக் கழுவிவிட்டு மகன் இருந்த இடத்திற்கு வலியைப்  பொறுத்துக் கொண்டு வந்தவள்….’என்ன, மணி ”என்றாள்.’அம்மா சீருடையை எடுத்துத் தாருங்கள் ‘ என்றான் மணி.நான்கு நாட்கள் உடுத்திய துணிகள் அழுக்காக இருந்தது.அழுக்கு கூடையில் போட்டு இருந்த சீருடையில் கொஞ்சம் வெள்ளையாக இருந்ததை எடுத்து கைகளால் அழுத்தி உதறி தன் மகனிடம் நீட்டினாள் சீதா. ”என்னம்மா , அழுக்குத் துணியை எடுத்துக் கொடுக்குறீர்கள் ” என்றான் மணி.”நாலு நாட்களாய் இந்த வேலைக்காரி கோமதி வராமல் துணி துவைக்கவில்லைடா ,என் செல்லமில்ல…  இன்னைக்கு மட்டும் இதை போட்டுக்க ” என்றாள் கெஞ்சலாக சீதா.”சரி கொடுங்க நீங்களாவது துவைத்து…

Read More

தீபாவின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. மகிழ்வோடு புகுந்த வீட்டினுள்  அடியெடுத்து வைத்தாள். அனைத்தும் புதிதாகப்பட்டது. இரு வீட்டாரிடமும் சம்மதம், சந்தோசம் என்பது ஒருமனதாகவே இருந்தது.கல்யாணம் முடிந்த கையோடு தன் அப்பாவும் அம்மாவும் தன்னை விட்டு விட்டு அவர்கள் சென்று விட்டனர். இனி இங்கே எப்படி நான் இருக்கப் போகிறேன். யாருடன் பேசுவது ? என்ன பேசுவது ? எங்கே உட்காருவது , எப்படி பழக வேண்டும் என பல கேள்விகள் அவளுள் எழுந்தது.அப்போது  கையிலிருக்கும் போன்  ஒரு வித உற்சாக ஒலி எழுப்பியவுடன் பேச வெளியே சென்றான் தீபாவின் கணவன் ராகவன். இவள் மட்டும் தனித்தீவில் மாட்டிக்கொண்டது போல் அச்சத்தில் உறைந்திருந்தாள்.நிச்சயத்திற்குப் பின் ராகவன் மட்டும் தான் தெரிந்தான். அவருடன் மட்டும் தான்  பழகியுள்ளேன். இப்போது அவருடைய குடும்பத்தினருடன் எப்படி பழகுவது. எனது பழக்கங்கள்  அவர்களுக்கு பிடிக்குமா ? ராகவன் எனக்கு மட்டும் தான் சொந்தம்  என நினைத்திருந்தேன். இப்போது அந்த…

Read More

ஒரு பெண் தாய்மை அடையும் போது முழுமை  பெறுகிறாள். அந்த பத்து மாதமும்  அவள் சாப்பிடமுடியாமல் வாந்தி எடுத்து கருவை சுமந்து உட்கார முடியாமல் நடக்க முடியாமல் ,தூங்க முடியாமல் அவள் படும் வேதனைகளை சுகமாய் ஏற்று ..கருவாகி  உருவாகி   சிசுவாகப்  பிறந்தாள்    இருள்   கண்டு  ஒளி கண்டாள்குருவான  தாயின்  தாலாட்டுக்  கேட்டாள்   இசையோடு  குரலோசை இனிமையை உணர்ந்தாள்இருகரம்  தூக்கி   உச்சி  முகர்ந்த    தந்தை  முகம்பார்த்து  கை-கால் உதைத்தாள்உருக்கமான   நிலைகண்டு  தாயின்  சுமை    சுகமாகி  நெகிழ்ந்து  அன்பில்  கரைந்தாள்உச்ச கட்டமாகப் பிரச வ வலி தாங்கி குழந்தை பிறந்ததும் உடல் அளவில் பாதித்தாலும்.குழந்தை முகம் கண்டு இன்புற்று தன் சுகம் மறந்து குழந்தையின் நலன் கருதி குழந்தையின் நலனே தன் நலனாக எண்ணி சுகம் அடைபவளே பெண்.வளர்க்கும் பருவம் பெற்ற குழந்தையை பேணி வளர்க்கும் போது ”கண்ணும் கருத்துமாக  இரவு குழந்தை அழும் போது எழுந்து கண்விழித்து…

Read More

மகத்துவம் வாய்ந்த மனிதப்பிறவியில் முதன்மை பெறுகிறவர்கள் பெண்கள் தான்.இந்த உலக இயக்கத்தில் பலவகையில் ஆதாரா சிருஷ்டியாக பெண்கள் தான் உள்ளனர். அவர்கள் பலவிதமான அவதாரங்களில் உலாவருகின்றனர். தாயாக இருந்து இந்த உலகம் உயிர்ப்பெற உதவுகின்றனர்.மனைவியாக இருந்து சுக துக்கங்களில் பங்கு கொள்கின்றனர் .மகளாக இருந்து பலவித ரூபங்களில் உறுதுணையாக விளங்குகிறார்கள்.பெண்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தி வருகிறார்கள்.பண்டைய காலங்களில் இலக்கியத்திற்கும்,வீரத்திற்கும் அரசியல் விவேகத்திற்கும் உதாரணமாக,முன்னோடியாக பலர் திகழ்ந்து உள்ளனர்.ஔவையார்,காரைக்கால் அம்மையார் ,ஜான்சி ராணி,மங்கம்மாள்,வேலுநாச்சியார் போன்றவர்கள் இன்றும் போற்றுதலுக்குரியவர்களாகவே உள்ளனர்.இன்றைய நவீன காலத்தில் பெண்கள் அரசியல்,கலை, இலக்கியம் போன்ற  பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி தங்களது வெற்றியை நிலை நிறுத்தி வருகின்றனர்.அதே போல் பல ஆண்களின் செயல்பாட்டுக்கு இன்றும் உறுதுணையாக இருந்து அவர்களை இயக்கச் செய்து வெற்றிகளை குவிக்கச் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட சூழ் நிலையில் கடந்த சில மாதங்களாக இளம் பெண்கள் பல்வேறுபிரச்சினைகளுக்கு ஆட்பட்டு இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பல…

Read More

ஆரோக்கியமான குழந்தையாக உருவாவதற்கு உங்கள் குழந்தைகளை நன்றாக விளையாடவிடுங்கள்.வியர்த்து விறுவிறுத்து களைத்துப் போகும் வரை விளையாட அனுமதியுங்கள்.குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு,சத்தான உணவுகளும்,விறுவிறுப்பு ,வீரம் மிகுந்த விளையாட்டுகளும் மிகவும் முக்கியம்.சத்தான உணவு ஒகே.வீரம் மிகுந்த விளையாட்டை விளையாடுவதற்கு எங்கே போவது ? இன்றைய சூழ் நிலையில் நகரத்தில் வாழும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் சுற்றிச் சுற்றி வரவேண்டும்.வாழவேண்டும் என்பது நியதி ஆகிவிட்டது.கிராமங்களில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்கு திறந்த வெளி இடங்கள் ஏராளம்.மண்ணில் உருள்வது,மரத்தில் ஏறுவது,நீரில் நீந்துவது என்று இருக்கும். இப்போது அங்கெல்லாம் கூட இவற்றுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்து விட்டனர்.நகர்ப்புற குழந்தைகள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடுவதுடன் சரி.அதுவும் கட்டாயத்தின் பேரில்.பாதி குழந்தைகளுக்கு விளையாடும் ஆர்வமே போய்விடுகிறது.அந்த நேரத்தில் எங்காவது மரத்தடியில் அமர்ந்து கதை பேசுவது சகசமாகிவிட்டது.இப்போது உள்ள பெற்றோர்கள் உலகத்தின் தரத்திற்கு ஏற்ப தமது குழந்தை உருவாக்க வேண்டும் என்ற பேராவலில் உள்ளனர். அதற்கு படிப்பு…

Read More

தமிழ் மாதங்களில் மாசி மாதம் வருகின்ற மகா சிவராத்திரி  சிறப்பு பெற்றது. இதை விளக்குவதற்கு ஒரு சிவபுராணக்கதை சொல்வார்கள்.  ஒரு மகா சிவராத்திரி நாளில் மான்களை வேட்டையாட வேடன் ஒருவன் காட்டிற்கு புறப்பட்டான். ஒரு பெரிய வில்வ மரத்தின் மீது ஏறி மறைந்திருந்தான்.தண்ணீர் குடிக்க வரும் மான்களை வேட்டையாட  எண்ணி காத்திருந்தான்.அப்போது ஒரு பெண் மான்  அந்தப் பக்கம் வந்தது.வேடன் வில்லில் அம்பைப் பூட்டினான் .அந்த நேரத்தில் மரத்தின் கிளைகளில் அவன் தலை பட்டு வில்வ இலைகள் உதிர்ந்தது. உதிர்ந்த இலைகள் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.வேடன் குறி பார்ப்பதை அறிந்த மான்,அவனிடம் சென்று ,"நான் இறந்தால் எனது குட்டிகள் வேதனை அடையும்.அவற்றைப் பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்து விட்டு மீண்டும் இங்கு வருகிறேன்.அதற்கு அனுமதிக்க வேண்டும் "என்று கேட்டது மான்.வேடனும் சம்மதித்தான். சிறிது நேரத்தில் அந்த மானைத் தேடி மற்றொரு பெண் மான் வந்தது.அதை வேட்டையாட வேடன் முற்பட்டான்.அப்போது ஏற்பட்ட…

Read More

ஒருநாள் வெளியூரில் உள்ள நண்பர்  தொலை பேசியில் தொடர்பு கொண்டு தன் மகளுக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை நல்லவரா?அவர்கள் குடும்ப விவரங்களை   விசாரித்து தெரிந்து சொல்லும்படி கூறினார்.இனிப்பு, பழம், பூ எல்லாம் வாங்கிக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்குச் நண்பரும் அவரது மனைவியும் சென்றார்கள்.மாப்பிள்ளை வீட்டினரும் நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்.மன திருப்தியுடன் அவர்களும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர்.வரும் வழியில் ஒரு நண்பரை சந்தித்தார். எதிர்பாரதவிதமாக."என்ன இந்தப் பக்கம் " என நண்பர் நலம் விசாரித்தார்.மாப்பிள்ளை இருக்கும் வீதியில் இருப்பது  அப்போது தான் நினைவிற்கு வந்தது. நண்பரின் மகளுக்கு அந்த வீட்டுப் பயனைப் பார்த்து இருக்கிறார்கள்.என வீட்டைக் காட்டியவர்,அங்கு சென்று வந்த விவரத்தையும் கூறினார்.’அவர்கள் வீட்டுப் பையனா என்றவர்,’அவன் வெளி மாநிலத்தில் வேலை பார்க்கும் இடத்தில் திருமணம் செய்து குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறான்.அதை மறைத்து பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்"என்றார் நண்பர்.மேலும் ," அவர்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்ய…

Read More

தாத்தாவைச் சுற்றி  குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள்.அதில் ஒரு சிறுவன் மற்றொருவனைப் பார்த்து,"போடா தண்டச் சோறு ""ஊரு சுத்தி " என்று திட்டிக்கொண்டு இருந்தான்.இதைக் கேட்டா தாத்தா,"என்ன குழந்தை இப்படி எல்லாம் பேசுகிறாய் ?”.’யாரிடம் இருந்து கற்றுக்கொண்டாய் "என்று மெதுவாக கேட்டார்."தாத்தா,இவன் அம்மா வீட்டு வேலை செய்கிறார்கள்.இவன் ஊர்சுத்திக்கிட்டு இருக்கிறான்.இவனை எல்லோரும் இப்படித்தான் தண்டச் சோறு,ஊரு சுத்தி என்று அழைக்கிறார்கள் அது தான் "நானும் என்று இழுத்தான் …."அவன் தன் பொறுப்பை உணரும் வயது வரவில்லை,விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கிறான்.இதற்குள் இவ்வாறு திட்டுவதால் அவன் மனம் எவ்வளவு கஷ்டப்படும்.யாரையும் திட்டக்கூடாது",அதற்கு தான் ஒரு கதை சொல்கிறேன் கவனமாகக் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார்.ஒரு ஊரில் கண்ணம்மா என்றொரு பெண் இருந்தாள்,அவளுக்கு பக்கிரி என்றொரு மகன் இருந்தான்.அவளது கணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான்.தன் மகன் பக்கிரியை கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தாள். அவனும் எந்த வருத்தமும் இல்லாமல் வளர்ந்து வந்தான்.ஒரு நாள்…

Read More