தமிழ்த்தாயின் மூத்த மகள் தரணி போற்றும் 
   தண்டமிழர் உழவர்க்கு உகந்த சேயே
அமிழ்தமென அந்நாளில் மக்கள் எல்லாம் 
   ஆனந்தமாய் பொங்கலிட்டு மகிழும் நாளே !
விளைகின்ற விளைச்சல்கள் அதிகமாகி 
   வினைசெய்ய செல்வம்தாம்சேமிக் கும்நாள் 
வளைகின்றசெங்  கரும்பும் மஞ்சள் உண்டு 
   வண்டமிழர் முக்கனியும் காய்கள் உண்டு 



கோதையர்தம்  குலம்விளங்க கொண்டா டும்நல்
   கோமாதா வழிபாடும் உண்டே அன்று !
பதை மாறா பைந்தமிழர் போற்றி நின்ற 
   பண்பாடு விளக்குகின்ற திருநாள் நன்று !
தீதைவிலக்கி குப்பைகளைத் தீயில் இட்டு 
   தீவைத்துக் கொளுத்துகின்ற காப்புக் கட்டு !
பேணுகின்ற உழவர்கள் இன்பங் கொண்டார் !
பழையனவே கழித்துநல்ல புதிய வாழ்க்கை 
   பாங்காகத் தொடங்குவார்க்கு முதல் தலைப் பொங்கல்
அழைக்கின்ற விருந்தினருக்கு அறுசுவை யோடு 
   அன்போடு அளிக்கின்ற திருநாள் பொங்கல்!
மழைபொழிந்து வயல்வளமும் பெருக வேண்டி 
   மக்களெல்லாம் வான்பார்த்து வழிபடும் பொங்கல்
தழைக்கவே தைமகளே வருக !வருக !
   தாழ்ந்திருப்போர் யார்வாக வருக ! வாழ்க !
Share.

Leave A Reply