குடும்பமாக வாழ வேண்டும் என வாழ்வியல் தத்துவத்தை விளக்கி கற்பிப்பதே திருக்கோவிலாகும்.மனிதன் வாழ முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுவதே இந்து கடவுள்களின் நோக்கமும் கூட…இந்துக் கோவில்களுக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு .சிவன்,பார்வதி,கணேசன்,முருகன் என குடும்பமாக கோவிலில் குடிகொண்டு அருள்வதாகும்.அருளும்,அறிவும்,அன்பும் நிறைந்த இடம்கோவில்.இந்த மூன்றையும் மனிதன் வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும் என உணர்த்துவதே,"கோவில்" நமக்கு கற்றுத்தரும் தத்துவம் ஆகும்.அருளும் குணமும் அன்பான நேயமும் ,அறிவான வாழ்வும் வாழ்ந்தால் இறையருள் உண்டாகி வீடு பேறு அடைய வழிவகுக்கும்,என்பதைநமக்குச் சொல்லிக் கொடுப்பது ஆலயமாகும்.மனிதன் தனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தாய்-தந்தையாக விளங்குகிறான்.இறைவன் எல்லோருக்கும் வெறுப்பு விருப்பு இன்றி தாய், தந்தையாக விளங்குகிறான்.தாழ்ந்தவன்,உயர்ந்தவன் என்ற பாகுபாடு எல்லாம் இறைவனுக்கு இல்லை.எந்த மனிதன் உடல் வருத்தி உள்ளம் வருத்தி தன்னை சரணாகதி அடைகிறானோ …. அவனுக்கு வரம் கொடுத்து அருளும் குணம் ஒன்றே அவனுடையது.உண்மையான பக்திக்கு மட்டுமே அடிபணிபவன் இறைவன். பத்தி மார்க்கத்தை அடைய என்ன செய்ய வேண்டும்…
Author: admin
அப்பளக்குடுமி தாத்தா அரசமரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அவரைச் சுற்றி சிறுவர்,சிறுமிகள் வட்டமாக அமர்ந்து இருக்கிறார்கள்.தாத்தா எல்லோருக்கும் தான் கொண்டு வந்த கடலையைக் கொடுத்தார். எல்லோரும் வாங்கிக்கொள்கிறார்கள் .ஒரு சிறுவன் மட்டும் ‘வேண்டாம்’ என்கிறான்.தாத்தாவும் விட்டு விட்டார்.தாத்தா கொடுக்கும்போது வேண்டாம் என்றவன்,சிந்திய ஒரு கடலையை எடுத்து சாப்பிட்டான்.இதைத் தாத்தா பார்த்தார்.”உடனே மருமகன் உரலை நக்கிய கதையாக இருக்கிறது “என்றார்.குழந்தைகள் எல்லாம் ‘அது என்ன தாத்தா’,’அந்தக் கதையை சொல்லுங்கள்’என்று எல்லோரும் கத்த ஆரம்பித்து விட்டார்கள்.“குழந்தைகளே! அமைதி…அமைதி… என் எல்லோரையும் அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டு தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.ஒரு ஊரில் கணவன்,மனைவி இருவரும் வாழ்ந்து வந்தார்கள்.அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது .அந்தக்குழந்தைக்கு அகிலா என பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர்.அவளும் பெரியவளாகி பருவ மங்கையாய் பூத்து நின்றாள்.அவளுக்கு நல்ல மாப்பிள்ளையாக பார்க்க வேண்டும் என்று எண்ணி பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தார்கள்.கடைசியாக ஒரு வரன் பொருத்தமாக அமையவும் அந்த இடத்திலேயே மகளைக் கொடுப்பது…
தண்ணிரில் முழ்கிய car start பண்ணுறதுக்கு முன்னாடி கவனிக்க வேண்டியவைcar start பண்ணிடதிங்ககார் என்ஜின் ஆயில் முழுவதுமாக வெளியற்றவும் முழுவதுமா என்ஜின் தண்ணீரை சுத்தம் செய்த உடன், புதிய air பில்ட்டர், ஆயில் பில்டரை மாற்றவும் இந்த வீடியோவில் எப்படி தண்ணிரில் முழ்கிய கார் ஸ்டார்ட் செய்வதை பற்றிய அறிஉரை உள்ளது.
இறைவனை ஏன் வழிபட வேண்டும்? அதனால் நமக்கு என்ன பயன் என சில சமயங்களில் மனம் நினைக்கலாம்.இரவும் பகலும் எப்படி மாறி வருகிறதோ…அதுபோல் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமும்,துன்மும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல் வரத்தான் செய்யும்.துன்பமே இல்லாத மனிதான் இவ்வகையத்தில் இல்லை. துன்பத்தை வெல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். மனதைக் கட்டுப்படுத்தி ஆள்வதே துன்பத்தை வெல்லும் தாரக மந்திரம்.எத்தனை தொல்லைகள் தொடர்ந்து வந்தாலும், கலங்காது எதிர்க்கும் ஆற்றல் உள்ள மனதை தருவதற்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.சுயகட்டுப்பாட்டையும் ,மனக்கட்டுப்பாட்டையும் அளிக்க வல்ல சிறந்த இடம் தான் கோவில். சாதாரணமாக தமக்காகவோ, பிறர்க்காகவோ வேண்டி வணங்கும் போது அதற்கான பலன் கிடைக்கத்தான் செய்கிறது.அப்படி இருக்க இறைவன் மேல் முழு அன்பும், பக்தியும் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தி வழிபாடும் போது, துன்பத்தை வெல்லும் ஆற்றல் பெற்று வாழ்க்கையை இனிமையாகவும்,இன்பமாகவும் நேசிக்கும் பக்குவத்தை பெறுவதுடன் இறைவனை வழிபட்ட திருப்தியும் கிடைக்கும்.இறைவனாவது, திருப்தியாவது என கேட்பவரும் உண்டு. பாற்கடலைக் கடைந்து…
வீட்டுக்கு அழகு தர தோட்டம் அமைக்கிறோம்.நாள்தோறும் நீர் ஊற்றி பராமரிக்கிறோம்.இல்லை துளிர் விடுவதை ரசிக்கிறோம்.அவை பெரிதாகி பூத்து மலரும் போது நமக்கும் அது தொற்றிக் கொண்டு மகிழ்ச்சியை தருகிறது.திடீர் என ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம், போய்விடுகிறோம். வர நான்கு நாட்கள் ஆகி விடுகிறது.வந்து பார்த்தால் செடி கொஞ்சம் வாடி இருக்கிறது.நீர் ஊற்றாமல் ……பார்த்த உடனே நமது மனமும் வாடிவிடும்.அச்செடியின் மேல் வைத்திருக்கும்நேசம் தான் நமது மன வாட்டத்திற்கு காரணம். ஒரு செடியைப் பார்த்தே வாடும் மனித நேயம் உள்ள மனிதன், ஒரு மனிதன் துன்பப் படுவதைப் பார்த்து உதவி செய்யாமல் இருக்கலாமா ?நம்மால் முடியும் என்ற போது செய்தால்…செய்வதால் நமக்கும் மகிழ்ச்சி, ஏற்றுக் கொள்வதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி.மனித நேயமே உதவ தூண்டு கோலாக இருந்த ஒரு சிறுமியைப் பற்றிப் பார்ப்போம்.எட்டு வயது மதிக்கத்தக்க சிறுமி, அவளுடன் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்.இருவரும் கோணிப்பையில் காகிதங்களைப் பொறுக்கி அதை விற்று வரும் வருமானத்தில்…
இன்றைய கவிஞர்கள்தான் நாளை நம் பெருமைக்குரிய வரலாற்றின் படைப்பாளர்கள் .நாம் நேற்றும்,இன்றும்,நாளையும் பெருமையுடன் போற்றிப் பாதுகாக்கும் இலக்கியங்கள் யாவும் செய்யுட்களாகவும், கவிதைகளாகவும் தான் அமைந்துள்ளன.இவைதான் நமது பாண்டிய வரலாறுகளாக அமைந்துள்ளன.வரலாற்றின் சொந்தக்காரர்கள் நாம்.கவிதை இலக்கியம் எல்லா மொழிகளிலும் உண்டு.ஆனால் மரபுக் கவிதை இலக்கியம் என்பது தமிழ் மொழியில்தான் உண்டு.கவிதைகளை இப்படித்தான் எழுத வேண்டும் என்று வரைமுறையாகச் செய்து கவிதைகளை யாத்த பெருமை நம் தமிழ்ப் புலவர்களுக்குத்தான் உண்டு.தமிழில் இருந்து யாப்பெருங் கலக் காரிகை என்ற நூல் முழுக்க முழுக்க கவிதை இலக்கணம் பற்றியது தான்.தமிழ்க் கவிதைகளில் விருத்தப்பா எழுதுவது மிகவும் சிரமம். இதை விட வெண்பா எழுதுவதும் மிகவும் சிரமம் தான். ஏனென்றால் வெண்பா இலக்கணத்தில் ஒவ்வொரு சொல்லையும் அடுத்து நெட்டெழுத்தில் தான் இந்த -இந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும், குற்றெழுத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் வரைமுறை உண்டு.கவிதை இலக்கியம் இதைவிடக் கஷ்டமானது கட்டளைக் கலித்துறையில் வெண்பா இலக்கணமும் இருக்கவேண்டும். நெட்டெழுத்தில்…
‘ஆ’என்றால் -பசு.பசு கொடுக்கும் பால் குழந்தை முதல் பெரியவர் வரை குடித்துஉடல் நலம் காக்கப்படுகிறது. பாலில் இருந்து வரும் தயிர், மோர்,வெண்ணெய்,நெய் போன்ற அனைத்தும் நமக்கு ஆகாரப் பொருளாக பயன்படுகிறது.பாலில் இருந்து பால்கோவா, பால் கேக், இனிப்பு வகைகள் ,பாயாசம் இப்படி பல வகையிலும் உணவு பண்டங்களையும் சாப்பிடுகிறோம்.தயிர் பச்சடி,அவியல், லெஸ்சி இப்படி பயன்படுத்தி சாப்பிடுகிறோம்.தயிரைக் கடைந்து மோர், வெண்ணெய் எடுக்கிறோம்.மோர்க் குழம்பு ,வற்றல் போட, நீர் மோர் குடிக்க இப்படி பல வகைகளிலும் பயன்படுத்திக் கொள்கிறோம்.வெண்ணெய் வாய்ப்புண்,வயிற்றுப்புண் போக பயன்படுகிறது.கேக்,பழகேக் ரொட்டியில் வைத்து சாப்பிட சப்பாத்தி மாவில் சேர்த்து அல்லது சப்பாத்தி சுடும்போது வெண்ணெய் சேர்த்து செய்து சாப்பிடும்போது சூட்டைக் குறைக்கப் பயன்படுகிறது.வெண்ணெய் கிருஷ்ணனுக்குப் பிடித்த உணவு, அஞ்சநேயருக்கும் பிடித்த உணவு.வெண்ணெய்க் காப்பு அவர்களுக்கு படைத்து மகிழும் போது மனம் அமைதி கிடைக்கும் நோய் பறந்து போகும்.நெய்விளக்கு ஏற்றுவதால் அதில் இருந்து வரும் வாசம் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும்…
ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ பூ பிரம்மகமலம். இந்த செடி வைத்து ஐந்து ஆண்டுகள் கழித்தே பூக்க தொடங்கும்.இலையின் நரம்பில் இருந்தே மொட்டு விட்டு பூவாக மலர் கிறது. இரவு 10 மணிக்கு மேல் விரியத் தொடங்கி பிரம்ம முகூர்த்தமான அதிகாலை நேரம் வரை மலர்ந்து இருந்து பின்னர் இதழ்களை மூடி மொட்டுப்போல் காட்சி தருகிறது. ஆண்டுக்கு ஒரு முறையே மலரும் பூ. நறு மனம் வீசும் வெண்கமலம் அதுவே பிரம்ம கமலம். கேரளாவில் இதை நிசா காந்தி என்ற பெயரில் அழைக்கிறார்கள்.எங்கள் வீட்டில் ஐந்து ஆண்டுகளாக வளர்த்து வந்த பிரம்ம கமலம் விஜய தசமி அன்று ஐந்து மலர்கள் மலர்ந்துநறுமணம் வீச இரண்டு மலர்கள் துளசியை பார்த்து வணங்குவது போல் மலர்ந்து இருக்க மற்ற மூன்று மலர்களும் முருகன்,பிரம்மா,சரஸ்வதிக்கு சூட்டி அழகுபார்த்த காட்சி உங்கள் கண்களுக்கும் விருந்தாக.
வீரமங்கை விளைஞ்ச நாடுஅம்மா என்று அழைத்த போதுஅன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள் சும்மா ஒருநாளும் இருந்தது இல்லைசுமை தாங்கும் கல்லாய் இருப்பாள்இம்மை பிறப்பை இயங்க வைப்பாள்இன்னல் தாங்கி மேன்மை தருவாள்தம்மை தரணியில் தாழ்த்திக் கொண்டுபிறர் உயர ஏணியாய் இருப்பாள்சிவகங்கை சீமையில் வேலு நாச்சியார்சுதந்திர நாட்டிற்காக சிலிர்த்து எழுந்தாள்சிவமுக்தி தல காசியில் ஜான்சி ராணியெனும்மணிகர்னிகா பிறந்தாள் வீர மங்கையாகதவப்புதல்வன் இறந்த பின்பு தத்துப்பிள்ளைநாடாள வேண்டி ஆண் வேடமிட்டுசவமாகும் வரை போரிட்ட வீரமங்கைசவத்தை எரிக்கும் பெண் வைரமணிகவிபாட கல்யாணம் துறந்த ஔவைகள்வன் அல்லவென போராடிய கண்ணகிகவிபாடி புனைந்த மங்கை பாஞ்சாலிஇசைபாடி புகழ்பெற்ற மங்கை சுப்புலெட்சுமிபுவியில் ரேடியம் கண்டுபிடித்த மேரிகியூரிவிளையாடி தங்கம் வென்ற மல்லேஸ்வரிபுவிபுகழும் விண்வெளி கல்பனா சாவ்லாஒருவழி செவ்வாய் செல்லும் சாரதாவீரமங்கைகள் விளைஞ்ச நம் நாடுவீறு நாட்டை போடும் நாடுதீர மங்கை ஔவை கொண்டுதீர்வு கண்ட நாடு நம்நாடுசீரம் கொண்டு பாடுபடும் உழவனுக்குபக்க பலமாய் இருப்பவள் பெண்நீரகம் சூழ்ந்த இப்புவியில் பெண்கள்இல்லாமல் ஏது சக்தி இப்புவியில்
விதைத்தால் தான் முளைப்பும், அறுவடையும்புகைக்குள்ளே தான் நெருப்பும், சாம்பலும்புதருக்குள்ளே தான் பாதையும், பயணமும்பாறைக்குள்ளே தான் சிற்பமும், சிலையும்கவிஞனுக்குள்ளே தான் சாகசமும், சாதனையும்முயற்சிக்குள்ளே தான் முதிர்ச்சியும் ,முன்னேற்றமும்ஊக்கத்திற்குள்ளே தான் செயலும், பயிற்சியும்செயலுக்குள்ளே தான் வளர்ச்சியும், தொடர்ச்சியும்உழைப்புக்குள்ளே தான் உயர்வும் ,வாழ்வும்தன்னம்பிக்கைக்குள்ளே தான் வைராக்கியமும், வெற்றியும்வெற்றிக்குள்ளே தான் மகிழ்ச்சியும் திருப்தியும்எண்ணங்களுக்குள்ளே தான் வெற்றி…..