தை முதல் நாள் அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா பொங்கல் விழாவாகும் .இது மகரத்திருநாளாக உலகில் உள்ள தமிழர்களால் சமயங்கள் கடந்து கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவும் இதை கொண்டாடுகிறார்கள்.மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா முன் காலங்களில் இந்திர விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் நன்கு விளைந்த நெல்லை வீட்டிற்குக்…
Author: admin
பொங்கும் பொங்கல் பொங்கட்டும் தங்கும் மங்களம் தங்கட்டும் செங்கரும்பாய் உள்ளம் இனிக்கட்டும் செங்கதிரை சூரியன் பரப்பட்டும் மங்காத வளங்கள் வழங்கட்டும் எங்கும் மகிழ்ச்சி நிரம்பட்டும் போகிப் பொங்கல் புலரட்டும் பழையான போகியில் எரியட்டும்புதியன புதிதாய் மலரட்டும் புதுப்பானையில் பச்சரிசி நிறையட்டும் புதுப்பொங்கல் போல்மனம் பொங்கட்டும் பல வளங்கள் பெற்றேஉளம் மகிழட்டும் மாட்டுப் பொங்கல் மண் மணக்கட்டும் ,மஞ்சு விரட்டும் நடை பெறட்டும் மக்கள் மனமும் குளிரட்டும் வள்ளுவர் தினத்தை வணங்கட்டும் வள்ளுவன் குரலாய் வாழட்டும் வள்ளுவம் உலகை ஆளட்டும் காணும் பொங்கல் களைக் கட்டட்டும் களிப்புடன் சுற்றம் இணையட்டும் கடற்கரையில் சொந்தங்கள் கூடட்டும் கதைகள் பேசிக் களிக்கட்டும் கற்கண்டாய் இதயம் இனிக்கட்டும் கவிதைபோல் வாழ்வு அழகுறட்டும் தைமாதம் முதல்நாள் பிறக்கட்டும் தைப் பொங்கல் பொங்கி வழியட்டும் தமிழ்த் திருநாள் சிறப்பைப் பெறட்டும் தமிழர் வாழ்வில் நலம் நிறையட்டும்.
செந்தமிழ் நாடு சிறந்த நாடு என்போம் உழவர் நலத்தில் கவனம் செலுத்துவீர் இன்னல்கள் எத்தனை வந்தாலும்,இழுபறியாக இருந்தாலும் அத்தனையும் கண்டு அமைதிகாக்க வேண்டும் உணவு பயிர் விளைத்தே உயிர் வாழும் உழவன் வானம் பொய்த்தால் வருந்தி மடிகிறான் கிழிந்த ஆடையும், மெலிந்த உடலும் நலிந்த வாழ்க்கையில் இழிந்தநிலை அடைகிறான் காவிரித்தாய் கண்ணீர் வடிக்கிறாள் வறட்சியைக் கண்டு வருந்தி நிற்கின்றான் வாடிய பயிரைக்கண்டு விவசாயி தினமும் மடிகிறான் தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுமா ?வீட்டுக்கு ஒரு விவசாயி இருந்தும் வீணாகிறது வாழ்க்கை வாழ்க்கை என்பது உலகில் துன்பமயமானது எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் அத்தனையும் சவாலாக ஏற்பதே மன உறுதி தற்கொலை என்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் அன்னையை இழந்தாலும் அநீதி நம் மீது வந்தாலும் நாட்டையும் வீட்டையும் இழந்தாலும் தற்கொலையே வேண்டாம் உழவர் நிலையை ஓங்கிடச் செய்வோம் உழவுத் தொழிலே மக்களின் உயிராம்/சுழலும் உலகில் உழவே தலையாகும் உழவால் உலகைக் காப்பவன் உழவன் உள்ளத்தில் வைத்து அவனைப் போற்றுவோம்-ஒளியை உழவன் வாழ்வில் ஏற்றுவோம்
தைத் திருநாள் தைத்திங்கள் முதல் நாள் தன்மானத் தமிழ் இனம் கொண்டாடும் திருநாள் தமிழ்நாடு போற்றி வணங்கும் நன்னாள் தலையாய் வரவேற்கும் உழவுத்திருநாள்.பண்பாட்டின் மரபாய் பழமையைக் களைந்து பேதமின்றி புன்னகைப் பொங்க மகிழ்ந்து புத்தரிசிப் பொங்கலிட்டு சுவைமணக்க இன்பமுடன் பகிர்ந்துண்டு ஒன்றேகுலமாய் பேணும் இந்நாள் செங்கரும்பின் சுவையாய் செந்தமிழ்ப் பால் பாடி செழுங்கிளைச் செல்வமாய் செம்மொழியின் வளமாய் புத்துலகைப் படைப்போம் நன்னெறி காப்போம் புத்தாண்டுப் பொங்கலை கொண்டாடிமகிழ்வோம்