இறந்தவர் கண்கள் எரிக்கப்பட்டது ஒருகாலம் இரண்டு விழிகள் இருவருக்கும் பொருத்தி இருவர் வெளியுலகை கண்டு மகிழ்வது இன்றைய பொது நலத் தொண்டு இரத்தம் இல்லாமல் இறந்தவர் ஒருகாலம் இருப்பில் இருக்கும் இரத்த வங்கி உடனே ஓடிவந்து உதவ வரும் இளைஞர் உறவினர் விழிப்புணர்வு வெளிப்பாடு கிட்னி முதல் இதயம் வரை மாற்று உறுப்புகள் மாற்றும் மருத்துவம் மூளைச் சாவு அடைந்த விபத்தினரை தானம் செய்ய முன்வரும் பெற்றோர் முதியோர் இல்லம் வருத்தம் தந்தாலும் பேணிக் காப்பது பொது நலம் பிறந்த குழந்தையை தூக்கி எறிந்தாலும் எடுத்து வளர்ப்பது பொது நலம் தொழு நோயாளிக்கு மருத்துவம் செய்த அன்னை தெரசா அன்பின் வடிவம் ஆதரவு கரம் கருணை இல்லம் வாடிய பயிரை கண்டுவாடிய வள்ளலார் நாட்டைக் காக்க பனிமலையில் காவல்புரியும் இராணுவ வீரர்கள் அவர்கள் குடும்பத்தினர் பொது நலத் தொண்டின் தியாகிகள் ஒவ்வொரு சுதந்திர போராட்டத்தின் பின்பும் சிந்திய இரத்தமும் சதையும் சாட்சியாய்…
Author: admin
ஒரு ஊரில் அடர்ந்த காடு. அந்த காட்டில் சிறந்த ஞானமும் தபோவலம் மிக்க ஒரு முனிவர் காட்டில் ஒருமரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்தார் . அந்த ஞானியானவர் எல்லா மிருகங்களிடமும் அன்போடு பழகுவார். மற்றும் உடல் நலம் இல்லாத மிருகங்களுக்கு தன் தவ வலிமையால் மூலிகைச் சாறு கொண்டு மருத்துவம் செய்வார் . இதனால் கொடிய குணம் கொண்ட புலி, சிறுத்தைப் போன்ற விலங்குகள் எல்லாம் அந்த ஞானியைத் தினந்தோறும் அங்கு வந்து அவரை வணங்கிச் செல்லுவதை வழக்கமாக கொண்டு இருந்தன . இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் பக்கத்து நாட்டு மன்னன் வேட்டை ஆடுவதற்காக காட்டிற்குள் புகுந்து காட்டில் வாழும் விலங்குகளை எல்லாம் கொன்றுகுவித்து வந்தார். இதனால் காட்டில் வாழும் விலங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின .மக்கள் காடுகளுக்குள் வரத் தொடங்கினர். இதனால் மக்கள் நடமாட்டம் காட்டில் அதிகரிக்கத் தொடங்கியது . காட்டை ஆக்கிரமித்த மனிதர்கள்…
உதடு வெடிப்பு தொல்லை தவிர்க்க சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும் இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து வெடிப்புகளும் ஏற்படும். இதற்கு * பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெறும் பாலாடையும் உதட்டில் தேய்க்கலாம். * வெண்ணையுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். * இரவு படுக்கும்போது தினமும் உதட்டின் மேல் தேங்காய்பால் அல்லது நெய் தடவி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சனை தடுக்கப்படும்.
பழமொழியில் அறிந்ததும் அறியாததும் இன்றைய பழமொழி “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ” அறிந்தவை :- ஒருவருக்கு எவ்வளவு செல்வங்கள் வேண்டுமானாலும் கிடைக்கப் பெறலாம். ஆனால் புதன்கிழமை அன்று வரும் சுபமுகூர்த்த தினம் கிடைப்பது மிகவும் கடினம். என்று இப் பழமொழிக்கு சொல்லப்பட்ட அர்த்தம். அறியாதவை :- பொன் என்பது குரு என்னும் வியாழன் கிரகத்தை குறிக்கும். ஒரு ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருப்பது கூட அபூர்வமானது அல்ல. ஆனால் புதன் நல்ல நிலையில் இருப்பது மிகவும் அரிதான விஷயம் என்பதுதான் இந்த பழமொழியின் அர்த்தம். ஒருவருக்கு செல்வம் கிடைப்பது கூட அரிதல்ல ஆனால் கல்வி அறிவு கிடைப்பது மிகவும் சிரமம். என்று புரிந்து கொள்ள வேண்டும். குரு செல்வத்தையும், புதன் கல்வியையும் குறிக்கும் இந்தப் பழமொழியில் வரும் புதன் என்னும் சொல் புதன்கிழமையக் குறிப்பதல்ல.
தேசியக்கொடி ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர்மூச்சு .பலவித உருவம், அளவு நிறங்களொடு பல ஆண்டுகாலமாகத் தயாரிக்கப்பட்டு மாறுதல் பெற்று வந்த நம் தேசியக்கொடி 1947-ல் தற்போதைய உருவத்தைப் பெற்றது . 1904-ல் முதன் முதலாக சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதையால் விடுதலைக்கான தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டது . இதில் உள்ள மஞ்சள் நிறம் வெற்றியையும் சிவப்பு விடுதலைப் போராட்டத்தையும் குறிக்கும் . அதன் மீது வங்க மொழியில் ”வந்தே மாதரம் ”என்றும், இந்திரனின் வஜ்ராயுதமும் (வலிமை ) வெள்ளைத் தாமரையும் (புனிதம்) வரையப்பட்டிருந்தன .நிவேதிதையின் கொடி என இது அழைக்கப்பட்டது. பின் 1906-ல் நீலம் , மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்ட சுதந்திர கொடி வடிவமைக்கப்பட்டது .நீல நிற பட்டையில் எட்டு நட்சத்திரங்கள் இருந்தன . சிவப்பில் சூரியனும், நட்சத்திரமும் வரையப்பட்டிருந்தன .மஞ்சளில் தேவநாகரி எழுத்தில் வந்தே மாதரம் எழுதப்பட்டிருந்தது . 1907- ஆகஸ்ட் 22-ல் மேடம் புகாஜிகாமா, வீரசாவர்க்கர் மற்றும் ஹியாம்…
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் . இணையதளத்தில் ஸ்ரீ ஐசுவரியம் இதழ் வெளிவருவது இதழின் வளர்ச்சியைக் காட்டுகிறது.உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கணினி , கைப்பேசி எல்லாவற்றிலும் எங்கிருந்தும் படிக்கும் வாய்ப்பு அமைகிறது . உலகம் முழுவதும் வாசகர்கள்; கிடைப்பார்கள் .நல்ல பயனுள்ள செயல் . ஸ்ரீ ஐசுவரியம்இதழையும் இணையதளத்தில் படித்து விட்டு என்னுடன் தொடர்பு கொள்வார்கள் என நினைக்கும் போது நெஞ்ச மெல்லாம் பூரிக்கின்றது . – கருமலைத் தமிழாழன், ஓசூர் , அன்புள்ள ஐயா தங்கள் டிசம்பர் ஸ்ரீ ஐசுவரியம் இதழில் கவிஞர் ச. மல்லிகா அவர்களின் கிருஷ்ணரின் கீதை ஞான கர்ம சன்யாச யோகம் படித்தேன் . பல கருத்துக்களை தெரிந்து கொண்டேன் . அத்துடன் மருத்துவ பகுதி, மற்றும் பல பயனுள்ள பகுதிகளை அறிந்து கொள்ள முடிந்தது . மிக்க மகிழ்ச்சி . ஆசிரியர் குழுவிற்கு என் இனிய பாராட்டுக்கள். .…
உலகத்தார் போற்றுகின்ற புலவர் தெய்வம் உயர் ஆசான் வள்ளுவர்தான் செந்நாப் போதார் ! பழமொழிகள் மொழிபெயர்த்த இவரின் பாக்கள் பாதைமாறா நன்னெறியைக் காட்டும் வேதம் சொலவொண்ணா கருத்துக்களைக் கொண்டநூலே சோதனைகள் கடக்கின்ற வழியைச் சொல்லும் அலர்கின்ற வாழ்வினுக்கு குறட்பா இன்பம் அறத்தோடு பொருளின்பம் காட்டும் முப்பால் ! ஆயிரத்து முன்னூற்று முப்பது பாக்கள் அதிகாரம் நூற்றுமுப்பத் திமூன்று ஆகும் ! சேயினுக்கு அதிகாரம் அவற்றுள் ஒன்று செங்கோன்மை பாக்களாகப் பத்து தந்தார் தீயினில் தான் சுட்டபுண்தான் ஆறும் ! ஆறா தீநாவில் சுட்டவடு ! என்று சொன்னார் ! பாயிரத்தில் தொடங்கியவர் முடிவில் இன்பம் படைத்ததெய்வப் புலவரென்று வாழ்த்தும் நாளே ! தோன்றினாலே புகழ் விளங்க தோன்ற வேண்டும் தொன்றுதொட்டு பொன்மொழிநாம் போற்று கின்றோம் ஆன்றவிந்து அடங்குபவர் செல்லும் பாதை அன்புகொண்டு நடந்துவந்தால் அவரே மேதை ஈன்றவனின் பசிபோக்க வேண்டாம் கள்ளம் இனியசொலில் ஈர்த்திடுவீர் மக்கள் தம்மை ! சான்றாண்மை உரைத்திட்டார்…
புதிதாக நிலங்களைனைப் பண்ப டுத்தி புரிந்திட்ட விவசாயத் தொழிலி னாலே நதியோரம் நகரங்கள் தோன்றி மாந்த நாகரிகம் வளர்ந்தென்றார் வரலாற் றாய்வர் விதிமாற்றித் தீகண்டு குடிசை வேய்ந்து விளைந்தபயிர் சுட்டகறி உணவாய் உண்டு மதிவளர இயற்கையினை வணங்கிப் போற்றி மலைகாட்டை அருவிகளை உயிராய்க் காத்தார் கூட்டாக வாழ்ந்தவர்கள் கிளைகள் தோன்றிக் குடும்பங்கள் தனித்தனியாய் வளர்ந்த போது போட்டியொடு பொறாமைகளும் மனம்மு ளைக்கப் பொருதுத்தோள் வலிமையுளோர் குழுக்க ளாகிக் காட்டிற்குள் மண்ணாசை பிரிவு செய்யக் கண்மயக்கும் பொன்னாசை கைக லக்க வேட்டுவைத்துப் பொன்னாசை வேறு செய்ய வேர்விட்ட தன்னலத்தால் மாறிற் றெல்லாம் ! மலைகளினைத் தகர்த்ததனை வணிகம் செய்தான் மரங்களினை வெட்டியதைப் பணமாய்ச் செய்தான் அலைதவழ்ந்த நதிமணலைக் கொள்ளை யிட்டான் ஆட்டமிட்டு வாழ்வதற்கே அனைத்தும் விற்றான் ! தலையான இயற்கையினை வெட்டி விட்டுத் தடுமாறி வீழ்ந்துல்லான் மனித னின்று விலையான இயற்கையினை மீட்கா விட்டால் விடியலினைக் காணாமல் முடியும் …
முன்கதை சுருக்கம் கோடை விடுமுறைக்கு நகரத்தில் வசிக்கும் மகன் , மனைவி ,தனது இரண்டு மகன்களுடன் கிராமத்திற்கு விடுமுறையை கழிக்க வருகிறார் . கிராமத்தில் தங்கி இருக்கும்போது அங்குள்ள பலவிதமான இடங்களைப் பார்த்து மனதை பறிகொடுக்கிறார்கள். அங்குள்ள இயற்கை எழில் , சூழ்நிலைகள் பற்றி கேள்விப்பட்டு அதிசயிக்கிறார்கள்.. அப்போது அங்குள்ள மலைக்கோவில் , அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பொக்கிஷ விவரங்களை தெரிந்து கொண்டு அங்கு செல்ல முயற்சிக்கிறார்கள். அங்குள்ள மலை பற்றிய விவரங்களை அவர்கள் வீட்டு விசுவாசியான வேலையாள் மாரியப்பன் சொல்லி விளக்கிக் கொண்டு இருக்கிறார். மறுநாள் காலையில் எழுந்ததுமே விரையில் கிளம்புவதற்கு இராஜாவும் ரகுவும் ரெடியாகி விட்டார்கள். ஊரைத்தாண்டி இருக்கும் முனியப்ப சாமி கோவிலுக்குச் செல்வதாகக் கூறி விட்டு மலை மீது ஏறிப் போக வேண்டும் என்பதே இராஜா, மாரியப்பன் இருவரின் திட்டமாக வைத்து இருந்தார்கள். ஆனால், அந்த திட்டத்திற்கு அவர்கள் சரியாகப் புறப்பட்டுச் செல்வதில் தடங்கலும்,தாமதமும் ஏற்பட்டது.…
321.அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் . தரும வழி எது என்றால் எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதாகும். கொள்ளுதல் மறந்து வாழ்ந்தாலும் பிற நற் செயல்களால் நன்மை தரும். 322,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை . பங்கிட்டு கொடுத்து உண்பது, பல உயிர்களுக்கும் கொடுத்து உபசரித்தல் அறிவு நூல் கூறும் அறங்களுக்கு எல்லாம் முதன்மையானது . 323.ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் மின்சாரப் பொய்யாமை நன்று . மதிப்புக்குரிய அறச்செயல்களில் முதன்மையானது எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பது .அதன்பின் அறமே, பொய் பேசாமல் இருப்பது நன்மை தரும் . 324.நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி . நல்லவழி வாழ்தல் என்பது எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே பிறவி அறுக்கும் நெறி வாழ்வாகும். 325.நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை . வாழ்வில் நிலையில்லா துன்பங்களுக்குப்…