91-வெற்றிப் படியை தொடும் நேரத்தில் தளராதீர் முயலுங்கள் இன்னும்.92- ஒருவர் தவறாய் பேசினால் பொறுத்துக்கொள் நட்புடன் உதவி செய். 93-ஒருவர் பார்வையில் அற்பமாய் தெரிவது மற்றொருவர் பார்வையில் அற்புதமாய். 94-வேப்பமரம் ஒன்று மருத்துவ குணம் பல பலசெயல் மனிதனின் சாதனை.95- உதவாது என்று எறிந்த பொருள் மற்றொரு இடத்தில் உதவியாய்.96- சிந்தையில் ஒன்றை ஆழமாய் நிறுத்தி சீராய் செய்தால் வெற்றி.
Author: admin
85-பிறரை நம்பினால் வறுமை நிழலாய் தன்னம்பிக்கை நிழல் சுடராய். 86-நட்பும் ஒருநாள் பகை கொள்ளும் பகையும் நட்பு கொள்ளும். 87-கவலையை தூக்கி கல்லாய் எறியுங்கள் முன்னேற்றம் முழுமனிதர் ஆக்கும். 88-உறவில் கடன் கொடுத்து திருப்பிக் கேட்டால் உடனே பகை. 89-தோல்வியும் துன்பமும் சோம்பேறியின் சொத்து உழைப்பாளியிடம் நெருங்குவது இல்லை. 90-புகழ்வதும் இகழ்வதும் மனித குணம் சமமாய் பாவிப்பது தெய்வீகம்.
73-உயிர் வாழ சுவாசம் முக்கியம் உயர முயற்சி அவசியம். 74-கவலை கொண்டு கலங்குவதை விட உறுதியுடன் வாழ்வது மேல்.75- திருப்தி என்பது மனதின் விளைச்சல் அதிருப்தி உயிர்கொல்லி நோய்.76- உதவி செய்பவன் சிகரம் தொடுபவன் உதவ மறுப்பவன் முடங்கி. 77-துன்பமும் நோயும் வராமல் இருந்தால் ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்கும்.78- பிறர் பேச்சுக்கு செவி கொடு பின் உன் பேச்சுக்கு செவிசாய்ப்பர்.
67-உண்மை வெளிப்படும் போது ஏற்றுக் கொள்ள மனம் தயங்கும். 68-உண்மையை உணர்ந்து உரைப்பவனை உலகம் பைத்திய மாகவே பார்க்கும்.69- உழைப்பவன் பழங்கஞ்சியை உண்டாலும் அமிர்தம் உண்டவனைப் போல் தூங்குவான்.70- மனதை பண் படுத்துவது ஆன்மீகம் வழி நடத்துவது பண்பாடு. 71-அறிவு என்பது அனைவருக்கும் பொது ஆற்றலுடன் செயல் நுண்ணறிவு.72- காலமாற்றம் இன்பமும் துன்பமும் உணர்ந்தால் வாழ்க்கை நம் வசம்.
31-உளிபடாத கல் சிலையாவது இல்லை. 32-உழைப்பில்லா கனவு நினைவாவதில்லை. 33-ஆசைக்கு முடிவில்லை கற்பதற்கு வயதில்லை. 34-தன்னலம் கருதாமல் தாய் நாட்டை காக்க வேண்டும்.35- தாயை மதியான் தாய் மொழியை மதியான். 36-அன்பே அனைவரையும் இணைக்கும் பாலம்.
தை மாதம் பூசம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படும் விழா தைப்பூச விழா. “தைப்பூசம்” என்ற உடனே ஞாபகம் வருவது பழனி ஆண்டவர் சன்னிதானம் தான். முருகன் குடி கொண்டு இருக்கும் மலைகளுக்கு எல்லாம் தைப்பூச விழா சிறப்புத்தான் என்றாலும் பழனி ஆண்டவர் கோவிலுக்கு நடை பயணம் வருவது தான் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது. விலைவாசி போலுயர்ந்த மலைகள் தோறும் வினைவாசி குறைந்தொழிய விளங்கும் வேலாஅலைவீசும் திருச்செந்தூர் கடலைப் போல ஆயிர நூறாயிரமாய் அன்பர் கூடி மலைவாழை உனைக்காண நடையைக் கொண்டோம் மனவாழை அன்பென்னும் கனியைச் சிந்தக் கலைவாழும் பழனிமலை ஆண்டியப்பா கதிகாட்டி மனங்களிலே கனிவாய் அப்பா “எனப் பாடிக்கொண்டு நடை பயணக் களைப்பு சிறிதும் இன்றி சிந்து பாடல்களையும் காவடி பாடல்களையும் பாடிக் கொண்டே வருவதே ஒரு அழகு தான் .”அழகு”என்றால் முருகன். “முருகன்” என்றால் தமிழ் கடவுள். தமிழ் வேறு! முருகன் வேறு !அல்ல முருகனுக்கு தோள்கள் 12 தமிழுக்கு…
மார்கழி மாதம் 27ஆம் நாள் பிரம்மா வேதம் நான்கு கற்றவனே பிரம்மா வேண்டும் வரம் யாவும் தருவாய் பதப் படுத்தும் பக்குவம் தருவாய் பரமனே உன் பாதம் தொழுகிறோம் புதர் மண்டாத மனதை தந்து புதுமை செய்ய புத்துணர்வு தருவாய் கூதல் நேர காலையில் வருகிறோம் பிரம்மா கல்வி கற்றுத் தருவாய் விஷ்ணு குறும்பு பொறுத்து அமுது ஊட்டி குழந்தைக் கண்ணனை கொஞ்சி மகிழுந்து அறும்பு காத்து அசுரரை வென்ற அற்புத கண்ணனை வளர்த்த யசோதா மறுமை இல்லா பேரு பெற்றாய் மனம் குளிர நெகிழ்வு பெற்றாய் துறுதல் பாக்கியம் பெற்ற யசோதா துன்பம் பறந்தது எங்களைக் காப்பதால் சிவன் இமைய மலை வாசனே சிவம் இதய ஒளி தீபம் சிவம் உமையவள் சக்தி தருவாள் சிவம் உன்னை சரண் புகுந்தோம் சிவம் சுமை தாங்கும் கல்லே சிவம் சுடர் தீபம் நீயே சிவம் இமை போல காப்பாய் சிவம் இருள்…
உயர்ந்த எண்ணங்களோடு மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு காத்திரு! வெண்மனத் தூய்மையோடு வேர்வை சிந்தும் தோளோடு காத்திரு! நேர்பட்ட பார்வையோடு மார் தட்டும் உறுதியோடு காத்திரு! தலைநிமிர்ந்த உணர்ச்சியோடுகொடுக்க துடிக்கும் கரங்களோடு காத்திரு !நடக்கத் துடிக்கும் கால்களோடு தீமை எரிக்கும் விழிகளோடு காத்திரு!எதிர்ப்பை தாங்கும் மார்போடு துரோகம் மிதிக்கும் வேகத்தோடு காத்திரு! சரியான நேரத்தோடு சமயம் பார்த்து வீரத்தோடு காத்திரு!உறுதியான உண்மையோடு உண்மையான நம்பிக்கையோடு காத்திரு!தசை இருகும் உழைப்போடு தளர்வடைய மனத்தோடு காத்திரு! துடிக்கின்ற இதயத்தோடு முகம் மலர்ந்து காத்திரு!நாளை கண்டிப்பாய்விடியும் என நம்பிக்கையுடன் காத்திரு.
இழந்து கொண்டு இருக்கிறோம்! எவ்வளவு இனிமைகளை இழந்து கொண்டு இருக்கிறோம்!எதிர்பாராத நட்பு குழந்தைச் சிரிப்பு பெண்ணின் வெட்கம் வெட்கம் மறைக்கும் திமிர் இயல்பான மொழி இயற்கை குணம் வெகுளித் தனம் காலை சூரியன் பனி விழும் முன் நுனி இலை ஆட்டு மந்தை குட்டிச் சந்தை பசு கூட்டம் கன்றின் குறும்பு குயிலின் பாட்டு முயலின் பதுங்கல்ஒற்றையடிப் பாதை சத்தம் இல்லாத தனிமை கூரை வீடு சாணித் தெளிப்பு மாக்கோலம் மண் அடுப்பு பானைச் சோறு வயல் வரப்பு விரிந்த திண்ணை வளர்ந்த தோப்பு கயிற்றுக் கட்டில் கலையாத உறக்கம்இன்னும்… இன்னும் எத்தனை.. எத்தனை எத்தனை… உண்டு. அத்தனையும் இழந்து விட்டு எதற்காக இப்படி நகர (நரக)வாழ்க்கை.சிரிப்பைத் தொலைத்து சிகரத்தைத் தொடவா? மனதைத் தொலைத்து மாளிகை கட்டவா? இதயத்தை இரும்பாக்கி கின்னசில் இடம் பிடிக்கவா? பெற்றோரை இழந்து முதியோர் இல்லம் கட்டவா? ஒரே குழந்தையை வெளிநாட்டிற்குவேலைக்கு அனுப்பத்தானே! ஓய்வு இல்லா உழைப்பில்…