பழமொழியில் அறிந்ததும் அறியாததும்
இன்றைய பழமொழி
“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது “
அறிந்தவை :-
ஒருவருக்கு எவ்வளவு செல்வங்கள் வேண்டுமானாலும் கிடைக்கப் பெறலாம். ஆனால் புதன்கிழமை அன்று வரும் சுபமுகூர்த்த தினம் கிடைப்பது மிகவும் கடினம். என்று இப் பழமொழிக்கு சொல்லப்பட்ட அர்த்தம்.
அறியாதவை :-
பொன் என்பது குரு என்னும் வியாழன் கிரகத்தை குறிக்கும். ஒரு ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருப்பது கூட அபூர்வமானது அல்ல. ஆனால் புதன் நல்ல நிலையில் இருப்பது மிகவும் அரிதான விஷயம் என்பதுதான் இந்த பழமொழியின் அர்த்தம். ஒருவருக்கு செல்வம் கிடைப்பது கூட அரிதல்ல ஆனால் கல்வி அறிவு கிடைப்பது மிகவும் சிரமம். என்று புரிந்து கொள்ள வேண்டும். குரு செல்வத்தையும், புதன் கல்வியையும் குறிக்கும் இந்தப் பழமொழியில் வரும் புதன் என்னும் சொல் புதன்கிழமையக் குறிப்பதல்ல.