புதிதாக நிலங்களைனைப் பண்ப  டுத்தி
புரிந்திட்ட விவசாயத் தொழிலி  னாலே
நதியோரம்  நகரங்கள் தோன்றி  மாந்த
நாகரிகம்  வளர்ந்தென்றார்  வரலாற்  றாய்வர்
விதிமாற்றித்   தீகண்டு   குடிசை  வேய்ந்து
விளைந்தபயிர்   சுட்டகறி  உணவாய்   உண்டு
மதிவளர  இயற்கையினை  வணங்கிப்   போற்றி
மலைகாட்டை  அருவிகளை உயிராய்க் காத்தார்

கூட்டாக வாழ்ந்தவர்கள்  கிளைகள் தோன்றிக்
குடும்பங்கள் தனித்தனியாய்  வளர்ந்த  போது
போட்டியொடு   பொறாமைகளும் மனம்மு  ளைக்கப்
பொருதுத்தோள்  வலிமையுளோர்  குழுக்க  ளாகிக்
காட்டிற்குள்  மண்ணாசை   பிரிவு செய்யக்
கண்மயக்கும்  பொன்னாசை  கைக     லக்க
வேட்டுவைத்துப் பொன்னாசை  வேறு செய்ய
வேர்விட்ட    தன்னலத்தால்   மாறிற்  றெல்லாம் !

மலைகளினைத்   தகர்த்ததனை   வணிகம்   செய்தான்
மரங்களினை  வெட்டியதைப்   பணமாய்ச்  செய்தான்
அலைதவழ்ந்த  நதிமணலைக் கொள்ளை  யிட்டான்
ஆட்டமிட்டு   வாழ்வதற்கே அனைத்தும்  விற்றான் !
தலையான இயற்கையினை  வெட்டி விட்டுத்
தடுமாறி  வீழ்ந்துல்லான் மனித   னின்று
விலையான  இயற்கையினை   மீட்கா   விட்டால்
விடியலினைக்    காணாமல்  முடியும்  வாழ்வே !

Share.

Leave A Reply