சித்தவைத்தியம் -சிக்கன மருத்துவம் ஊகாரம் -ஊதை குளிர்ந்த காற்று படும்போது உடலுக்கு குளுகுளுப்பு ஏற்படும்.குளிர்ந்த காற்று காது வழியாக செல்லும் போதே குளிர்ச்சி சளி பிடிக்க வைத்து விடுகிறது.சளி பிடித்தால் கபம் வந்துவிடும்.உழவுத் தொழில் செய்பவர்கள் அதிகாலையில் வயலுக்கு சென்று வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.அவர்களுக்கு சளி பிடிப்பது இல்லையே எப்படி? என்ற கேள்வி நமக்கு வரும்.ஒன்றை கவனித்தால் இதற்கு விடை கிடைத்து விடும்.உழவர்கள் காதைச் சேர்த்து தலையில் தலைப்பாகைகட்டிக் கொள்வதைப் பார்த்திருப்போம்.காதின் வழியாக குளிர்காற்று செல்வதை தடுக்கும் வகையில் தலைப்பாகை கட்டுவதன் பலன், பயன் அறிந்து நமது மூதாதையர்கள் செய்த ஏற்பாட்டை வியக்காமல் இருக்க முடியாது.வாதம் உடலின் ஒரு பகுதி இயங்காமல் செயலற்றுப் போவது வாதம் ஆகும். மூளையின் ஒரு பகுதி செயலற்றுப் போவதால்; இரத்த ஓட்டம் குறைந்து நோய் தாக்குகிறது.நரம்பு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது.வாத நோய் பரம்பரை நோயாக வருவதும் உண்டு. தனி நபருக்கு வருவதும் உண்டு.ஒருவருடவாதம்,ஐந்து வருட வாதம் என பல வகைகளிலும்…
Author: admin
கிருஷ்ணரின் கீதை – பகுதி -17இரண்டாம் அத்தியாயம் – ஞான யோகம் இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணரிடம் சரணடைந்த அர்ஜுனன் ,சோகம் தீர உபாயம் கூறுங்கள் என்கிறான்.‘அர்ஜுனா ஆத்ம தத்துவம் பற்றி கேட்பதும் ,சிந்திப்பதும் ,தியானம் செய்வதும் ஞானயோகமாகும் என்கிற கிருஷ்ணன்,உறவினர்களிடம் கொண்ட அன்பால் இரக்கப்பட்ட அர்ஜுனன் ,நீர் நிரம்பிய கலங்கிய கண்களுடன் உட்கார்ந்திருக்கும் நிலைகண்ட கிருஷ்ணன்,’’ அர்ஜுனா,தகாத சமயத்தில் உறவுமோகம் எந்த காரணத்தினால் உன்னை வந்தடைந்தது,இது கோழைத்தனமல்லவா , சான்றோர்களால் கடைப்பிடிக்கப்படாதது சொர்க்கத்தை அளிக்காது, புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடியதல்லவா ? ‘என்கிறார் கிருஷ்ணன். வீரத்தாயின் மகனல்லவா,என்ற கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறார்.‘’கவுரவ-பாண்டவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைப்பதற்காக தூதனாக அஸ்தினாபுரம் சென்றிருந்த போது அத்தை குந்தியைச் சந்திக்கிறார் கிருஷ்ணன்.‘’அப்போது கிருஷ்ணன் மூலமாக வீரமிக்க செய்தி சொல்லி அனுப்புகிறாள் குந்திதேவி.அப்படிப்பட்ட வீரமிக்க தாயின் மகனல்லவா நீ ….‘’ மாபெரும் மகாரதிகளின் உள்ளங்களை எல்லாம் நிலைகுலையச் செய்யும் உன்னுடைய ஒப்பற்ற வீரம் எங்கே ?‘’ உன்…
குறள் சுவை அறிவோம் —————————————3. நீத்தார் பெருமை ———————————–21.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு ஒழுக்கத்தில் உறுதியாக இருந்து,ஆசைகளை துறந்தவர் துணிவை அறிவு சார்ந்த நூலில் தெரிந்து கொள்ளலாம்.22.துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று .ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையை விவரித்துச் சொல்வது பூமியில் பிறந்து இறந்தவர்களைக் கணக்கிடுவதற்கு ஒப்பானது.23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு இம்மை மறுமைகளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்த பின் துறவறத்தை மேற்கொண்டவரின் பெருமை உலகத்தில் உயர்ந்ததாகும்..24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.மனம் என்னும் அங்குசத்தை அடக்கி காப்பவன் ,மனம் என்னும் சேமநிதியை விதைத்தவன் ஆவான்.25.ஐந்துவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.ஐம்புலன்களையும் அடக்கியவன் ஆற்றலுக்கு, விரிந்த வானத்தில் இருக்கும் தலைவன் இந்திரனே போதிய சான்றாகிறான்.26.செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்.செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்பவரே பெரியவர்.அப்படிச் செய்ய முடியாது…
இயற்கை தரும் செல்வம் மழை ————————————————மனித வாழ்விற்கு மிகவும் அவசியமானது சுத்தமான காற்று, சுத்தமான நீர்.இவை அடிப்படையிலே மற்றவைகள் உற்பத்தியாகின்றன .உலகில் மக்கள் உள்பட உயிரினங்கள் வாழ்வதற்கு நீர் அத்தியாவசிய தேவை.இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களாக இருப்பவை பருவ மழைதான். இதில் இந்தியாவில் முதன்மையானது வடகிழக்கு பருவமழையும், தென்மேற்கு பருவமழையும் தான். திடீர் ஜாக்பாட்டாக எப்போதாவது புயல் நிலவரங்களால் மழை பொழிவும், சேதமும் அதிகம் ஏற்படுவதும் உண்டு.இந்த ஆண்டு , தென் மேற்கு பருவமழை திருப்திகரமாக இருக்கும் என்றுதனியார் வானிலை மையமும், இந்திய வானிலை மையமும் அறிவிப்பு செய்துள்ளன. ஆனாலும் வழக்கத்தை விட சிறிது குறைவாக இந்த மழை இருக்கும் என்றும் இதனால் பாதிப்புகள் இருக்காது என்றும் அறிவித்துள்ளன.இந்த நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், நீர் ஆதாரங்களை காக்கவும் மாதிரி வரைவுச் சட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி, மக்களின் பார்வைக்கும் ஆலோசனைக்கும் வைத்திருக்கிறது..பாசன வாய்க்கால்கள், தடுப்பணைகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றுக்கு அரசுகள் அதிகம்…
குறள் சுவை அறிவோம் திருக்குறள் 18.சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.வானம் மழைபெய்யவில்லை என்றால் ,பூலோகத்தில் தேவர்களுக்கான திருவிழா பூசைகள் நடக்காது.19.தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.வான் உலகத்தில் இருந்து வானம் மழை பெய்யவில்லை என்றால் தானம் தவம் இரண்டு அறங்களும் புவி உலகில் தங்காது20.நீர் இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு .தண்ணீர் இல்லை என்றால் எந்த உயிரும் வாழமுடியாது.வானத்தில் இருந்து மழை பெய்யவில்லை என்றால் ஒழுக்கமும் சரியாக அமையாது.
ஆ+டி = ஆடி ஆடி..ஆடி. கமலபாதம் பற்றினேன் .ஐயனே அம்பலத்தில் ஆடுபவனே உன் திருபாதம் பற்றினேன்.ஆடி..ஆடி. கமலபாதம் பற்றினேன் அடியவரை காக்கும் சிவனே.பெண்ணுக்கு சரி பாதி கொடுத்து அம்மை அப்பனாக காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரா / அண்ணாமலையில் சோதி ரூபனாக காட்சி தந்த நீ உமையவளையும் அக்னியில் எரிய வைத்து, பிறக்க வைத்து சக்தி கொடுக்கும் சகலகலா வல்லியாக மீனாட்சி ,காமாட்சி, விசாலாட்சி,அபிராமி, அன்னபூரணி,பார்வதி, பர்வதவர்த்தினி ,மகேஸ்வரி, மல்லேஸ்வரி இப்படி பல பெயர்களில் பவனி வந்து மக்களுக்கு வேண்டும் நலன்கள் தருபவளுக்கு …… ஆடி மாதம் என்றால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சிறப்புடன் வெள்ளிக்கிழமை ஆடிக் கூழ் படைத்து ,மஞ்சள் கயிறு ,குங்குமம் ,வளையல் பிரசாதமாக பெண்களுக்கு வழங்கி….. நல்ல நேரத்தில் பருவ வயது அடையவும்,கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் நல்ல வாரிசுகளைப் பெற்று சுமங்கலியாக வாழவும் அம்மன் அருள் வேண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாள் பாதம் பற்ற…
ஆனி மாத சிறப்பு —————————ஆ +னி =ஆனி ‘ஆ’ தமிழ் எழுத்துக்களில் இரண்டாம் எழுத்து பசுவையும் குறிக்கும்.ஆகா..என இசையை ரசிக்கவும் பயன்படும். ஆ … என அச்சத்தை காட்டவும் ,மறுக்கவும் பயன்படும் சொல்லாக இருக்கிறது.னி …நி.. பூரணம் .முழுமை நிறைந்த பொருள்.பரம் பொருள் .பசுக் கூட்டத்தின் தலைவன்.புல்லாங்குழல் ஊதி ஆனிரைக் கூட்டத்தை மேய்த்தவன்,மாயக்கண்ணன். மது சூதனன்.சிந்தையை அவன்பால் ஈர்ப்பவன் பரந்தாமன்.பலராமன்,பரசுராமன் என எத்தனை பெயர்கலயுள் அழைத்தாலும் ‘நி’ ஒருவன் தான் எங்களைக் காப்பவன்.‘ஆனுருக்கு’ பசும்பாலில் இருந்து வரும் வெண்ணை ,நெய், தயிர், மோர் போன்று பல பெயர்களை தன்னகத்தே கொண்டவன்.‘நி’ பசுவையா மேய்த்தாய் கண்ணா / பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் தாய்மை குணத்துடன் பால் கொடுக்கும் பசுவிற்கும் உனக்கும் என்ன வேறுபாடு.எல்லோரையும் சமமாய் நேசித்து உன்னை பக்தி கொண்டவரை காப்பவன் அல்லவா கண்ணன்.‘ஆனி’ மாதத்தில் கேடு வந்தாலும் கேடத்தை கொடுக்கும் பரம்பொருளாகிய திருமாலை வணங்கினால் கெட்டவை விலகி நல்லவை நாளும் நடக்கும்.திருமாலை…
புதுச்சேரி கவர்னராக கிரண் பேடி பதவி ஏற்றார் புதுச்சேரியின் 24வது துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற நீபதிபதி ரமேஷ் அவருக்கு பதவிப் பிரமானம் மற்றும் ரகசியக்காப்பு பிரமாணம் செய்துவைத்தார். பஞ்சாபின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையுடையவர்கிரண்பேடி. அப்போது அவர் பேசும்போது,”புதுச்சேரியில் தொழில்வளர்ச்சியைப் பெருக்கவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், அனைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும், புதுச்சேரியில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறேன்.”என்று கூறினார். பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, கட்சித் தலைவர் நமச்சிவாயம், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கிரண்பேடிக்கு மலர்க்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி ======================புதுச்சேரி அரசியலில் எப்போதும் பரப்பரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த தேர்தலிலும் பரபரப்பு அடங்கி இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்குபலம் பெற்று உள்ளது.நடந்து முடிந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சிப்பொறுப்பில் இருந்த என்.ஆர். கட்சி (ரங்கசாமி கட்சி) 8 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.கட்சி தொடங்கி இரு மாதங்களில் ஆட்சியமைத்த புதுச்சேரி ரங்கசாமிக்கு மீண்டும் ஆட்சியைத் தர பொதுமக்கள் மறுத்து மவுனமாக தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய இரு மாதங்களிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் ரங்கசாமி.உள்ளூர் கட்சி என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லாத நிலைதான் உருவானது.. ஏடிஎம் இயந்திரத் தொழிற்சாலை, சாப்ட்வேர் நிறுவனங்கள் உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.உணவுப் பொருட்களின் விலை உயர்வு…
தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்தது ———————————————— பரபரப்பும்,சலசலப்பும் நிலவிய தமிழக சட்டசபை தேர்தல் முடிந்தது . ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான பெரும்பான்மை பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. வை ஆட்சி செய்ய மக்கள் அனுமதி அளித்து விட்டனர். கடந்த காலங்களில் ஜெயலலிதா அவர்கள் மக்கள் எண்ணங்களில் இழையோடிய உணர்வுகளுக்கு மதிப்பளித்ததற்காகவும் ,பண்பட்ட வாழ்க்கைக்கு மலர் தூவியதால் கிடைத்த வெற்றியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.அதோடு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகச்சிறந்த வலிமை மிகுந்த எதிர்க்கட்சியாக செயல்படும்படி தி.மு. கழகத்துக்கு நற்சான்றிதழ் வழங்கி மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சி என்பது எதிரிகட்சியாக இல்லாமல் இணைந்து செயல்படும் கட்சியாக இருந்து மக்களுக்கு தன் பணிகளை செவ்வனே செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எதிர்க் கட்சி என்பது மக்களுக்கான பணியை செவ்வனே செய்யாமல்பொறுப்புகளை த ட்டிக்கழிக்காமல் நல்ல செயல்களுக்கு ஆக்கமும்,தவறான செயல்களுக்கு வலிமையான முட்டுக்கட்டையாகவும் இருந்து செயல்படவேண்டும் என்றே மக்கள் எண்ணுகிறார்கள். அதை இரு கட்சிகளும் செவ்வனே செய்ய…