கேசவா ,” அவையெல்லாம் நீ அறிய மாட்டாய், நான் அறிவேன் ” என்று கூறியதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் . அர்ஜுனா, நான் பரமாத்மா எல்லாம் அறிந்தவன். நீ ஜீவாத்மா சிற்றறிவு படைத்தவன் என்பதை கோடிட்டுக் காட்டவே அவ்வாறு கூறினேன் . நான் ஒவ்வொரு கால கட்டங்களிலும் என்னென்ன லீலைகள் புரிந்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். உனக்கு உன்னுடையவும், என்னுடையவுமான , முற்பிறவிகளின் நினைவு தெரியாது அதனால் தான் இப்படி கேள்வி கேட்கிறாய் . எனக்கு உலகில் நடப்பது எதுவும் தெரியாமல் போகாது .நடந்தது , நடப்பது, நடக்கப் போவது எல்லாமே எனக்குத் தற்போது நடப்பது போலக் கண்கூடு . நான் எல்லா ஜீவன்கள் பற்றியும் அவர்களுடைய எல்லாச் செய்திகளைப் பற்றியும் நன்றாக அறிவேன் . ஏனெனில் நான் எல்லாம் அறிந்தவன்.நான் கர்பத்தின் ஆரம்பத்தில் சூரியனுக்கு இந்த யோகத்தை உபதேசித்தேன் ,என்று கூறுவதில் நீ சிறிதும் சந்தேகப்பட வேண்டியதில்லை என்று…
Author: admin
மினசோட்டா மாகாணத்தில் மேப்பிள் குரோவ் என்ற பகுதியில் அந்தப்பகுதி மக்களுக்கு பெருமை தரும் வகையில் இந்து கோவில் ஒன்று உள்ளது. கோவிலின் பெயரே இந்துக்கோவில் என்பது தான் சிறப்பு . மிகச்சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக்கோவிலுக்கு இங்குள்ள இந்துக்கள் வருவது வழக்கம். எல்லா நாட்களும் கோவில் திறந்து இருந்தாலும் பெரும்பாலும் சனி, ஞாயிற்று கிழமைகளில் தான் இங்கு வருபர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கோவில் இந்தியாவிலும் அமெரிக்காவில் உள்ள அதிக வசதி படைத்தவர்கள்,தொழில் அதிபர்கள் இந்த இந்துகோவிலை உருவாக்கியவர்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். கோவில் கட்டுமானமும் ,உள்ளே விக்கிரகங்களும் மிகவும் அருமையாக வடிவமைத்து வைத்துள்ளனர்.கோவிலைச்சுற்றியும், கிழக்கு பகுதியிலும் ஏராளமான கார்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளன.கோவிலுக்கு நுழைந்ததும் தரை தளத்தில் வரவேற்பு, உடைகள் காலணிகள்வைக்கும் இடம் அமைப்பட்டு உள்ளது. எதிர்புறம் பெரிய அளவில் ஒரு அரங்கமும், உணவு அருந்தும் இடமும் உள்ளது. அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக மேலே சென்றால் முதலில் உள்ளது கொடிமரம்.அதைத் தொடர்ந்து…
சித்த வைத்தியம் சிக்கன மருத்துவம் ”சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள்”. சிவனே வைத்திய நாதன் .சித்தர்கள் காடுகளில் சிவலிங்கங்களை வைத்து மூலிகை செடிகளை மருந்தாகவும்,காய்,கனிகளை உணவாகவும் உண்டு பல நூறு காலம் உயிருடன் வாழ்ந்து சித்தி பெற்றவர்கள். அகத்தியர் எழுதிய சித்த வைத்திய நூல் சில கிடைக்கப் பெற்றன.உணவே மருந்தாக பயன்படுத்தி நோயின்றி நமது முன்னோர்கள் வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்.. ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” . ”உண்டி வெய்யோர்க்கு உறுபிணிஎளிது” -முதுமொழிக் காஞ்சியில் கூடலூர் கிழார் கூறுகிறார். ”மீ தூண் விரும்பேல் ” ”நுண்மை நுகரேல் ” ”நோய்க்கு இடம் கொடேல் ” -என்று ஆத்திச் சூடியில் ஔவையார் கூறியுள்ளார். நோயில்லாமல் வாழ உண்ணும் உணவே மருந்தாக்கி மூலிகை உள்ள மலைகள் ,குன்றுகள் எல்லாம் தெய்வம் வழிபடும் கோவில்கள் ஆகி தமிழ்க்கடவுள் முருகன் அமர்ந்த இடம் எல்லாம் மூலிகை மருத்துவ செடிகள் ,நோய் போக்கும் மூலிகை காற்று…
விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த மாதம் கோலாகலமாக நடந்தது.. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.. 17 நாட்கள் நடந்த இந்த ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க நாளிலும் நிறைவு நாளிலும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன . இந்த விளையாட்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர். போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பதக்கங்களை வெல்ல முயன்றனர்.ஆனாலும்பதக்கங்களை பெற்றவர்களும் , தொட்டுவிடும் தூரத்தில் பதக்கங்களை பெற தவற விட்டவர்களும் உண்டு. இந்தப் போட்டியில் இந்தியா 1 வெள்ளிப் பதக்கத்தையும், 1 வெண்கலப் பதக்கத்தையும் மட்டுமே பெற்றது. இந்தியா பதக்கம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, துப்பாக்கிசுடுதல், வில்வித்தை, குத்துசண்டை உள்ளிட்ட போட்டிகளில்…
சித்தவைத்தியம் சிக்கன மருத்துவம் எகரம் -எக்கியம் எக்கியம் என்றால் யாகம். யாக பூசைகளில் போடப்படும் யாகப் பொருட்கள் எரிந்து புகையாகி வரும்போது அதை சுவாசிக்கும் மக்களுக்கு மூலிகை பொருட்கள் சுவாசத்தின் வழியாக செல்வதால் உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது.எனவே, கோவில்களில் நடத்தப்படும் யாக பூசைகளில் கலந்து கொள்வதால் மனமும்,சுவாசமும் ஆரோக்கியம் அடைகிறது.எண்குணன்எண்குணன் என்றால் சிவன்,அஷ்ட லட்சுமி இவர்களுக்கும் சித்த மருத்துவத்திற்கும் தொடர்பு உண்டு.சிவன் கோவில்களில் தல விருட்சமாக இருக்கும் மரம் வில்வமரம்.வில்வம் பழம் விநாயகருக்கு உகந்தது.வில்வ இலை சிவனுக்கு உகந்தது.வில்வ இலையால் சிவ பூஜை செய்து நற்பலன் அடைந்தவர்கள் ஏராளம்.வில்வக் கொளுந்தை சாப்பிட்டால் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வில்வ இலையை பிரசாதமாக வழங்குவது இன்றும் நடைமுறையில் இருக்கிறது.சைவ கோவில்களில் வில்வமரம் வளர்த்து பாதுகாத்து வருவதன் பயன் மருத்துவக் குணம் உடையது என்பதை தெரிந்த பெரியோர்கள் வில்வ மரங்களை கோவில்களில் நட்டு தல விருட்சமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.அதன் பயனைப் பார்ப்போம்.வில்வம்…
பழமொழிக் கதைகள் ”திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ” ஒரு ஊரில் குப்புவும்,சுப்புவும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.குணங்கள் மாறுபட்டு இருந்தாலும் ,நட்புடன் இருந்தார்கள். குப்பு பூச்சி, பாம்பு, இவற்றை கண்டால் அடித்துக் கொன்று விடுவான்.அதில் அவனுக்கு அத்தனை சந்தோசம். சுப்பு உயிர்களைக் கொல்லக் கூடாது.உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கை உடையவன் சுப்பு. குப்புவிடம் எத்தனையோ முறை உயிர்களைக் கொல்லக் கூடாது என்று எடுத்துச் சொல்லியும் அவன் செவிகளில் இவை விழவில்லை. இருவரையும் சோதிக்கும் நாள் ஒன்று வந்தது. குளத்தில் இருவரும் குளித்துக் கொண்டு இருந்தார்கள். குளத்தில் தண்ணீர்ப் பாம்பு ஒன்று வருவதை கண்ட சுப்பு கரைக்கு வந்துவிட்டான். குப்புவோ..நீந்திப் போய் தண்ணீர்ப் பாம்பின் வாலைப் பிடித்து தலையைச் சுற்றி ..சுற்றி… அடித்தான்.இதை எதிர் பார்க்காத பாம்பு சீறியது.குப்பு விடவில்லை.நீந்தி கரைக்கு வந்து தரையில் சுழற்றி …சுழற்றி …அடித்துக் கொன்று விட்டான். இதைப் பார்த்த…
‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’————————-கூனியின் சூழ்ச்சியால் இராமாயணம் தோன்றியது .சகுனியின் சூழ்ச்சியால் மகாபாரதம் தோன்றியது.மங்குனியின் சூழ்ச்சியால் என்ன நேர்ந்தது என்பது தான் இக்கதை.பசுபதி என்ற செல்வந்தர் இருந்தார். அவர் சொத்தை அபகரிக்க எண்ணிய மங்குனி தனது மகளான மங்கையுடன் சூழ்ச்சி செய்தார்.பசுபதியின் ஒரே மகளான சங்கவி சகலகலைகளையும் கற்று தேர்ந்தவள்.தாய் இல்லாததால் தந்தைக்குப் பயந்து நடப்பவள்.இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் மங்கை.சங்கவி தந்தைக்கு தெரியாமல் செந்திலை காதலித்தாள்.மங்கை தோழி சங்கவிக்கு உதவுவது போல் நடித்தாள்.சங்கவி அவளது தந்தைக்குத் தெரியாமல் செந்திலுடன் ஓடிப்போக வைத்தாள் மங்கை.தனது செல்ல மகள் இவ்வாறு செய்தது அறிந்த பசுபதி துடித்துப் போனார், N’என்னிடம் சொல்லி இருந்தால் திருமணம் செய்து வைத்திருப்பேனே/……..ஓடிப்போய் என் மானத்தை ,கெளரவத்தை குலைத்து விட்டாளே ‘ என மனம் வேதனைப்பட்டார் பசுபதி. ‘இவ்விதம் செய்வாள் என நானும் எதிர்பார்க்கவில்லை.நடந்தவை எதுவும் எனக்குத் தெரியாது ‘என கண்ணீர் விட்டாள் மங்கை. ‘ஓடிப்போனவளை நினைத்து வருந்திக் கொண்டே…
குறள் சுவை அறிவோம் 4.அறன் வலியுறுத்தல் 31.சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூ உங்குஆக்கம் எவனோ உயிர்க்கு .தருமம் புகழையும் செல்வத்தையும் குலை விடுதல் போல் தரும்.தர்மம் செய்யவில்லை என்றால் புகழும் மங்கும்., செல்வமும் மெலியும் .எனவே தருமத்தை விட மேலான செல்வம் உயிர்களுக்கு என்ன இருக்கிறது.32. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.தருமம் செய்ய வில்லை என்றால் உயர்வு என்பது இல்லை .தருமத்தை மறப்பதை விட கேடு தருவது வேறு எதுவும் இல்லை.33.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்.தர்மம் ஆற்றும் குணம் நன்மை செய்யும் என்பதை அறிந்து தொடர்ந்து செல்லும் இடம் எல்லாம் உண்மையாக செய்ய வேண்டும்.34.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற .மனதாகிய தன் குற்றம் இல்லாமல் இருக்கவேண்டும்.அதுவே ,முழுமையான அறம்.பிற அரண்கள் அனைத்தும் கள்ளத்தனம் மண்டிக்கிடக்க , நீரின் மேல் போடும் உப்பு போல் கரைந்து விடும். 35.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்…
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டன.1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய இந்தியர்களில் பலர் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும்,விடுதலை போராட்ட வீரர்களுமே. இதற்கு வித்திட்டவர்களை,போராடியவர்களை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.ஏன் என்றால் நேற்று நடந்ததை இன்று மறந்துவிடும் நிலையில் வாழ்பவர்கள் மனிதர்கள். எனவே நமது மூதாதையர்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர்கள் போராடி பெற்றுத்தந்த சுதந்திரத்தை நமது இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பலர் இன்றும் பல இடங்களில் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்…