Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

8-முனிவரின் சாபம் மாலை நேரம் குழந்தைகள் எல்லாம் தாத்தாவிடம் கதை கேட்கும் ஆர்வத்தில் அமைதியாக இருந்தார்கள். அம்பிகா பக்கத்தில் அமர்ந்திருந்த ரமாவை பார்த்தாள். அவள் கண்கள் அழுததில் சிவந்து இருந்தது. கன்னம் வீங்கி இருந்தது. “ஏன், ரமா அழுதாயா” எனக்கேட்டவுடன் அவள் முகம் வாடிவிட்டது. வார்த்தைகள் வராமல் கண்ணீர் வடிந்தது. இந்த சம்பவத்தைப் பார்த்த தாத்தா ஊகித்துக் கொண்டார். ரமாவிற்கு அம்மா இல்லை. சித்தியிடம் வளர்கிறாள் சித்தி ரமாவை படுத்தும் பாடு ஊருக்கே தெரியும். ரமாவை சாந்தப்படுத்தும் வகையில் ஒரு கதை சொல்ல வேண்டும் என நினைத்த தாத்தா. ரமா இங்கே வாம்மா என அழைத்தார். ரமாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டு தாத்தாவின் அருகில் வந்தாள். தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்ட தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். ******ஒரு ஊரில் குப்புசாமி என்ற குடியானவன் வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருமணமாகி முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து போனாள்…

Read More

வாழ்க்கை அலை போல் மாறலாம் ஆனால்… நம்பிக்கை நிலையாக இருக்கட்டும்! கடவுள் உன் படகின் திசை காட்டி!அவரை நம்பிச் செல் கரை நிச்சயம் கிடைக்கும்! வெற்றி உன் துணையாகும்.இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.

Read More

7-சேற்றில் சிக்கிய காகம் தாத்தா மரத்தடியில் அமர்ந்து இருந்தார் கதை சொல்ல.அப்போது சோமு மிகுந்த கவலை கொண்ட முகத்துடன் மெதுவாக வந்து அமர்ந்தான். அவனைக் கண்ட தாத்தா “சோமு இங்கே வா” என அழைத்தார். “என்ன தாத்தா?” என அருகில் வந்தான் சோமு. ஏன் உனது முகம் வாடி இருக்கிறது? என நலம் விசாரித்தார் தாத்தா. தாத்தா கேட்ட உடன் சோமுவிற்கு கண்கலங்கி கண்ணில்… நீர் பெருகி கன்னத்தில் வடிந்தது. என்ன சோமு நடந்தது? என தாத்தா ஆதரவாக அவன் கரங்களைப் பற்றி தன் அருகில் அமரச் செய்து கண்ணீரைத் துடைத்து விட்டார். தாத்தாவின் ஆறுதல் சோமுவை அமைதி அடையச் செய்தது. தாத்தா!என பேச ஆரம்பித்தான் சோமு. சொல் சோமு,எனக் கேட்டார் தாத்தா. எங்க அப்பா அவர் நண்பரிடம் பணம் கொடுத்திருக்கிறார். அதை அவர் இப்போது ஏமாற்றிவிட்டு வெளியூருக்குச் சென்று விட்டார், என்றான் சோமு. “இப்படி சிலர் இருப்பதால் தான் நட்புக்கே…

Read More

உன் குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு நாளும்…!ஒரு பிரார்த்தனை போன்றது!கடவுள் அதை வீணாக்க மாட்டார் அன்புடன் செயல்படு!நம்பிக்கையுடன் வாழ்வளம் உன்னைத் தேடும்.இசை கலைமணிச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

நன்றி சொல்லும் மனம் துயரத்தையும் குறைக்கும்! கடவுள் கொடுத்ததை எண்ணி மகிழ்!இல்லாததை மட்டும் எண்ணாதே! மகிழ்ச்சியை கொண்டாடு! மனம் அமைதி அடையும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

78- பாம்பொடு பழகேல் கல்லூரி மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு வராமல் சினிமாவிற்கு போய் விடுவார்கள். பின் ஊர் சுற்றிவிட்டு கல்லூரி விடும் நேரம் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். இவர்களிடம் மது, போதை பழக்கம் போன்ற தீய பழக்கமும் இருக்கும். படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் இருப்பதால் அரியர் சேர்ந்து கொண்டு இருந்த நிலையில் கல்லூரி முடியும்போது சான்றிதழும் வாங்க முடியாமல் போகும். பாம்பு கடித்தால் கூட உடனே இறந்து விடுவோம்.இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆனவர்கள் தாங்களும் கெட்டு, இவர்களுடன் சேருபவர்களையும் கெடுத்து விடுவார்கள். நஞ்சுள்ள கொடிய பாம்பு போன்றவர்களுடன் பழக வேண்டாம் என்று புலவர் ஔவையார் “பாம்பொடு பழகேல்” என்று கூறியிருக்கிறார். எனவே, இந்த கொடிய பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல் வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.இதுவே, ஒவ்வொரு மாணவனும் பெற்றோருக்கு கொடுக்கும் பரிசாகும். என்று போதை விழிப்புணர்வை பேசிக் கொண்டிருந்தார் காவல்துறை அதிகாரி. மாணவர்களும் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

Read More

ஒவ்வொரு சோதனையும் உன்னை வலிமையாக்க வருகிறது! கடவுள் உன்னை கைவிடவில்லை! உன்னை உருவாக்குகிறார்! நம்பிக்கையை காப்பாற்று! வெற்றி நிச்சயம். இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.

Read More

பொறுமை என்பது பலவீனம் அல்ல! அது பெரிய வலிமை!கடவுள் பொறுமையாளரை உயர்த்துவார்! நேரம் வந்தால் பலன் தருவார்!நம்பிக்கையுடன் இரு நிம்மதி கிடைக்கும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

மறுநாள் கோவில் தர்மகர்த்த வீட்டிற்கு சென்றது. தனி அறையில் ஓய்வாக இருந்த தர்மகர்த்தா கனகலிங்கம் முன் தேங்காய் தோன்றியது. மெதுவாக காலின் மேல் உருண்டது. என்ன காலில் எனக் குனிந்து பார்த்த கனகலிங்கம். தேங்காய் இருப்பதைப் பார்த்து யார் தேங்காயை இங்கே வைத்தது என வேலையாட்களைத் திட்டிக் கொண்டே எடுத்து மேஜையின் மேல் வைத்தார். “கோயிலுக்கு நகை செய்யக் கொடுத்த தங்கத்தில் பாதியை எடுத்துக் கொண்டு, பாதியில் நகை செய்யச் சொல்லி நல்ல பெயருடன் நடமாடும் கனகலிங்கம் நீதானே” என்றது தேங்காய். பதறிய படி எழுந்த கனவலிங்கம் என்ன தேங்காய் பேசுகிறது! அதுவும் தான் மறைத்த தங்கத்தையும் பார்த்தது போல் கூறுகிறதே! என பயத்தில் நடுங்கி “நீ யார்?” என நடுங்கிய குரலில் தடுமாறிக் கேட்டார் கனகலிங்கம். எல்லாம் கோயில் தூதுவன் தான் நான் எடுத்த தங்கத்தை கந்தன் வீட்டில் ஒப்படைத்து விடு இல்லை, ஊரைக் கூட்டி உன் திருட்டை அம்பலப்படுத்தி…

Read More

தாத்தா சிறுவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து தானும் அமர்ந்து கொண்டார். குழந்தைகள் புத்தாடையில் மிகுந்த சந்தோசமாக அமர்ந்திருந்தனர். எல்லோரும் கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்தீர்களா? என கேட்டார். “ஆமாம் தாத்தா” என்றனர் ஒருமித்த குரலில். நல்லது, என்ற தாத்தா, குழந்தைகளே! மனிதர்களுக்கு மட்டும் அல்ல தெய்வத்திற்கும் வாக்கு கொடுத்தால் மாறக்கூடாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்றார் தாத்தா. ***** “சொல்லுங்க தாத்தா” என்றனர் குழந்தைகள். ஒரு ஊரில் கந்தனும் அவன் மனைவி விமலாவும் வயலில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. சொத்து சுகம் கொடுக்கவில்லை, அது கூடப் பரவாயில்லை. கொஞ்சி மகிழ ஒரு குழந்தைச் செல்வத்தைக் கொடுக்கவில்லையே! என இருவரும் கடவுளை நினைத்து நொந்து கொள்வார்கள். ஒரு நாள் இருவரும் கூலி வேலைக்கு செல்லும் வழியில் பிள்ளையார் கோயில் இருப்பதைப் பார்த்தனர். பிள்ளையாரைப் பார்த்த விமலா “பிள்ளையாரப்பா…

Read More