78- பாம்பொடு பழகேல்

கல்லூரி மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு வராமல் சினிமாவிற்கு போய் விடுவார்கள்.

பின் ஊர் சுற்றிவிட்டு கல்லூரி விடும் நேரம் வீட்டிற்குச் சென்று விடுவார்கள்.

இவர்களிடம் மது, போதை பழக்கம் போன்ற தீய பழக்கமும் இருக்கும்.

படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் இருப்பதால் அரியர் சேர்ந்து கொண்டு இருந்த நிலையில் கல்லூரி முடியும்போது சான்றிதழும் வாங்க முடியாமல் போகும்.

பாம்பு கடித்தால் கூட உடனே இறந்து விடுவோம்.

இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆனவர்கள் தாங்களும் கெட்டு, இவர்களுடன் சேருபவர்களையும் கெடுத்து விடுவார்கள்.

நஞ்சுள்ள கொடிய பாம்பு போன்றவர்களுடன் பழக வேண்டாம் என்று புலவர் ஔவையார் “பாம்பொடு பழகேல்” என்று கூறியிருக்கிறார்.

எனவே, இந்த கொடிய பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல் வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

இதுவே, ஒவ்வொரு மாணவனும் பெற்றோருக்கு கொடுக்கும் பரிசாகும். என்று போதை விழிப்புணர்வை பேசிக் கொண்டிருந்தார் காவல்துறை அதிகாரி.

மாணவர்களும் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

Share.

Leave A Reply