Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

மன அழுத்தம் அதிகரித்தால்! சில நிமிடம் அமைதியாக இரு! கடவுள் நாமத்தை நினை மனம் தெளியும்! நம்பிக்கை மீண்டும் மலரும்! வாழ்க்கை இலகுவாகும்.இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

5- புத்திசாலியின் வெற்றி குழந்தைகள் எல்லாம் தாத்தா வருகைக்காக காத்திருந்தார்கள்.பசியால் முகம் வாடி கண்கள் குழி விழுந்து மிகச் சோர்வுடன் அமர்ந்திருந்தான் விஜயன். தாத்தா குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே வந்தார். அவர் கண்களுக்கு விஜயனின் சோர்வு தான் தெரிந்தது. “விஜயா என்னப்பா? ஏன் இவ்வளவு சோர்வாக அமர்ந்திருக்கிறாய்” என தாத்தா கேட்டது தான் தாமதம். விஜயனின் கண்கள் துக்கத்தால் கண்ணீர் சிந்தியது. “ஏனப்பா! இங்கே வா… விஜயா” என அழைத்த தாத்தா, அருகில் உட்கார வைத்துக்கொண்டு கண்ணில் வடியும் நீரைத் துடைத்து விட்டார். “தாத்தா எனது தந்தை நல்லா வேலை செய்வார். ஆனா, அவருக்கு வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம் தாத்தா, காலையில் இருந்து சாப்பிடவில்லை தாத்தா” என்றான் விஜயன். தாத்தா நான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் எதுவும் சாப்பிடவில்லை என்று அம்மா பழம், ரொட்டி கொடுத்து அனுப்பினார்கள். இதை விஜயனுக்கு கொடுங்கள் எனக் கொடுத்தாள் சுமதி. தாத்தாவும் சுமதியின் நல்ல குணத்தை…

Read More

குடும்பத்தில் ஒற்றுமை இருந்தால்!கஷ்டம் குறைந்து வரும்! கடவுள் இணைந்த இதயங்களை நேசிக்கிறார்!மன்னிக்க கற்றுக்கொள்! அன்பே நிலைக்கும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

6-தேங்காய் குழந்தை தாத்தா சிறுவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து தானும் அமர்ந்து கொண்டார். குழந்தைகள் புத்தாடையில் மிகுந்த சந்தோசமாக அமர்ந்திருந்தனர். எல்லோரும் கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்தீர்களா? என கேட்டார். “ஆமாம் தாத்தா” என்றனர் ஒருமித்த குரலில். நல்லது, என்ற தாத்தா, குழந்தைகளே! மனிதர்களுக்கு மட்டும் அல்ல தெய்வத்திற்கும் வாக்கு கொடுத்தால் மாறக்கூடாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்றார் தாத்தா. ***** “சொல்லுங்க தாத்தா” என்றனர் குழந்தைகள். ஒரு ஊரில் கந்தனும் அவன் மனைவி விமலாவும் வயலில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. சொத்து சுகம் கொடுக்கவில்லை, அது கூடப் பரவாயில்லை. கொஞ்சி மகிழ ஒரு குழந்தைச் செல்வத்தைக் கொடுக்கவில்லையே! என இருவரும் கடவுளை நினைத்து நொந்து கொள்வார்கள். ஒரு நாள் இருவரும் கூலி வேலைக்கு செல்லும் வழியில் பிள்ளையார் கோயில் இருப்பதைப் பார்த்தனர். பிள்ளையாரைப் பார்த்த…

Read More

இழந்தவை வாழ்க்கையின் முடிவல்ல! புதிய தொடக்கத்தின் விதை! கடவுள் எடுத்ததை விட சிறந்ததை எப்போதும் தருகிறார்! நம்பிக்கையுடன் காத்திரு! நல்லதே நடக்கும். இசை கலைமணிச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

மதிவாணனின் கீழ் வேலை செய்த பணியாளர்களுக்கும் மன்னர் பரிசு கொடுத்து மகிழ வைத்தார்.ஊழல் செய்த அதிகாரிகளை அழைத்து கண்டித்தார் அரசர். சிலரை பதவி நீக்கம் செய்தார். சிலரை பதவி மாற்றம் செய்தார் சிலரை வேறு வேலை கொடுத்து மாற்றினார். மதிவாணன் போல் விழிப்போடு இருக்கும் அதிகாரிகளை நியமித்தார் அரசர். பிறகு மதிவாணனை அழைத்த அரசர். “உனக்கு வேறு வேலை தருகிறேன். இதில் எப்படி சம்பாதிக்கிறாய் எனப் பார்க்கிறேன் என்றார் அரசர். “என்ன வேலை அரசே” எனப் பணிவாகக் கேட்டான் மதிவாணன். “அரண்மனை வாயிலில் கட்டி இருக்கும் மணியை கால முறைப்படி அடித்து பேனாவால் காகிதத்தில் குறித்து வைக்க வேண்டும் என்றார் அரசர். இந்த வேலைக்கு சம்பளம் கிடையாது என்றார். கடிகாரம் கண்டு பிடிக்காத காலம் அது. வெயிலைக் கொண்டே மணியை கணக்கிட்டு மணி அடிக்க வேண்டும். எல்லோரும் பார்க்கும் வண்ணம் இப்போது மணிக்கூண்டு இருப்பது போல் மணி அடித்து நேரத்தை அரண்மனை…

Read More

நோய் வந்தால் மனம் தளராதே! உடலுக்கு மருந்து தேவை மனதுக்கு நம்பிக்கை தேவை! கடவுள் உனக்கு துணை நிற்பார்! தைரியமாக இரு! குணம் அடையும் நாள் வரும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

வறுமை இன்றைய நிலையாக இருக்கலாம் அது விதி அல்ல! கடவுள் உழைப்பை உயர்த்துவார்!நம்பிக்கையை கையில் பிடி!முயற்சியை தொடர் வாழ்க்கை மாறும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

பிள்ளைகளின் முன்னேற்றம்!பெற்றோரின் மகிழ்ச்சி! கடவுள் விதைத்த நன்மை! ஒரு நாள் பலன் ஆகும்! அன்போடு வழிநடத்து!நல்ல தலைமுறை உருவாகும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

77-பழிப்பன பகரேல் விளையாட்டு வகுப்பில் எல்லோரும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். பிந்துவும், நந்துவும் ஓடிப் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள். அப்போது நந்துவை பிந்து தள்ளிவிட்டு ஓடிவிட்டாள். நந்து கீழே விழுந்து கையில் உரசி ரத்தம் வந்தது. பிந்து எதையும் கண்டு கொள்ளாமல் ஓடிவிட்டாள். கீழே விழுந்த நந்துவுக்கு கோபம் வந்து ஏன் தள்ளிவிட்டு ஓடுகிறாய் என திட்டினாள் பிந்துவை. பிந்து தான் நந்துவை தள்ளிவிட்டு ரத்தம் வர வைத்தாள். ஆனால், தான் எதுவும் செய்யாதது போல்….நந்து என்னைத் திட்டுகிறாள் என பிறரிடம் கூறிக்கொண்டு இருந்தாள். ஓடிவந்த நந்துவை தள்ளிவிட்டு கீழே விழுந்து அடிபட்டதையும் கவனிக்காமல். பிறரிடம் தன்மேல் பழி போடுவதை நினைத்து நந்துவுக்கு காய வலியை விட பேசியது வலியைத் தந்தது. இதைத் தான் ஔவையார் “பழிப்பன பகரேல்” என்று பிந்துவைப் போல் உள்ளவர்களை நினைத்து கூறி இருக்கிறார் என நினைத்தாள் நந்து.தன் வலியை பொறுத்துக் கொண்டு.

Read More