உடல் சோர்ந்தால் ஓய்வு எடு! மனம் சோர்ந்தால் பிரார்த்தனை செய்! கடவுள் புதிய சக்தி தருவார்! நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்! நாளை சிறப்பாகும் வாழ்க்கை தொடரும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
நல்ல எண்ணங்கள் நிறைந்த வீட்டில் மகிழ்ச்சி தங்கும்! கடவுள் அன்பை அருள்வார்! கோபத்தை குறை பாசத்தை அதிகப்படுத்து! குடும்பம் வளம் பெறும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
கண்ணீர் வரலாம் ஆனால் நம்பிக்கை கரையக் கூடாது! கடவுள் உன் வலியை அறிவார்! உன்னை வலிமைப் படுத்துவார்! மனதை உறுதியாக வை! வாழ்க்கை மீண்டும் மலரும். இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.
ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு! கடவுள் கதவை மூடுவதில்லை! உனக்கான வழியை காட்டுவார்! அவசரப்படாதே அமைதியாக முன்னேறு. இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.
குழந்தைகள் எல்லோரும் கதை கேட்கும் ஆர்வத்தில் அமர்ந்திருந்தார்கள். தாத்தாவும் அமர்ந்து கொண்டு குழந்தைகளை ஆராய்ந்தார். இரண்டு சிறுவர்கள் அவர்களுக்குள்ளாக மெதுவாக பேசிக்கொண்டு மற்றொரு சிறுவனை சீண்டிக் கொண்டு இருப்பது அவர் கண்களில் பட்டது. அவர்களைப் பார்த்து “என்ன குழந்தைகளே” என்றார் தாத்தா. தாத்தா!இவனைப் பாருங்க தாத்தா என் பெயரைச் சொல்லிக் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறான் என்றான் மண்ணாங்கட்டி. “குழந்தைகளே! அவர்கள் வீட்டில் குழந்தை பிறந்து… பிறந்து இறந்து கொண்டே இருந்ததால் மண்ணாங்கட்டி என பெயர் வைத்தால் குழந்தை தங்கும் என்ற நம்பிக்கையில் பெயர் வைத்திருக்கிறார்கள். அதை கிண்டல் செய்யாதீர்கள்” என்ற தாத்தா. பெற்றோர் இப்படி ஏதாவது ஒரு பெயர் வைப்பதால் இளைஞர்கள் ஆகும்போது அப்பெயர் அவர்களுக்கு மனவேதனையை கொடுக்கிறது. இது மாதிரி நடந்த ஒரு கதையை உங்களுக்கு சொல்கிறேன் கேளுங்கள் என்றார் தாத்தா. ***** ஒரு ஊரில் ‘குப்பய்யா’ என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி பெயர் ‘விளக்குமாறு’…
குடும்ப சுமை அதிகமாக தோன்றினாலும்! அன்பு அதை இலகுவாக்கும்! கடவுள் உன் முயற்சியை பார்க்கிறார்! தளராமல் இரு நல்ல நாள் வரும்! நம்பிக்கை கைவிடாதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
தனது மனைவி நீலாவுடன் சில நாட்கள் தங்கி அங்கு உள்ள அனைவரையும் சந்தோசப் படுத்திவிட்டு தனது நாட்டிற்கு பயணப்பட்டான். மன்னரும் மனமகிழ்வுடன் இளவரசியுடன் பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தார். எல்லோரும் மரகத நாட்டிற்கு வந்தார்கள். அங்கு மங்காவை சந்தித்தார்கள். தம்பி முகுந்தனையும், அவன் நண்பர்களையும் நல்ல முறையில் கவனித்ததற்கு நன்றி கூறிய சங்குராஜா விடை பெற்றான். மங்காவும் இனி இவ்வாறு தவறு செய்யமாட்டேன். என உறுதி கூறி வழி அனுப்பி வைத்தாள். பல நாட்கள் பயணப்பட்டதால் எல்லோரும் களைத்து விட்டனர். எனவே, சிறிது நேரம் தங்கி மீண்டும் பயணப்படுவோம் என சங்குராஜா கூறினான். அருகில் ஒரு சத்திரம் இருப்பது கண்டு அங்கு எல்லோரும் தங்கினார்கள்.வந்த களைப்பு மிகுதியால் இரவு அங்கே தங்கிவிடலாம் என தங்கிவிட்டனர். இரவு நல்ல தூக்கத்தில் இருந்தனர் எல்லோரும். நடு இரவில் கண் விழித்த முகுந்தன். தனது தந்தையிடம் அவமானப் பட விரும்பவில்லை. எனவே, என்ன செய்யலாம்…
உடல் நலம் ஒரு செல்வம் அதை பாதுகாப்பது கடமை! கடவுள் கொடுத்த பொக்கிஷம் உடல்! நல்ல உணவு உண்நல்ல பழக்கங்கள் கற்றுக்கொள்! ஆரோக்கியம் நிலைக்கும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
குளிர்ந்த நீர் கண்ணில் பட்டு கண்விழித்தான் சங்குராஜா. தண்ணீர்…. தண்ணீர் என முனங்கினான் சங்கர் ராஜா. குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள்.தண்ணீர் குடித்தவுடன் தெளிவு பெற்றான் சங்குராஜா. என்ன நடந்தது என எல்லோரும் விசாரித்தார்கள். முதலையை கொன்றதை தெரிந்து கொள்ளும் ஆவலில். நடந்தவற்றை கூறினான் சங்குராஜா. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அரண்மனை காவலாளிகள் அங்கு வந்தார்கள். ராஜ மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். சங்குராஜா மன்னரை வணங்கினான். சிம்மாசனத்தில் இருந்து எழுந்து வந்த மன்னர் சங்குராஜாவை கட்டி அணைத்துக் கொண்டார். இதை சங்குராஜா சிறிதும் எதிர் பார்க்கவில்லை. மன்னர் வாழ்க! முதலையைக் கொன்ற வீரன் வாழ்க! என அரசவையில் இருந்த அனைவரும் வாழ்த்தினார்கள். “கண் முன் தண்ணீர் இருந்தும் எடுக்க முடியாமல் தண்ணீர் பஞ்சத்தால் வாடி இருந்தோம்” மக்கள் குறை போக்கிய உனக்கு இந்த ராஜ்ஜியத்தையும் எனது மகள் பத்மாவையும் திருமணம் செய்து வைக்கிறேன் என்றார் மன்னர்.“ மன்னிக்க வேண்டும் மன்னா! எனக்கு…
மங்களாபுரிக்கு வந்த சங்குராஜா மிகவும் களைத்துக் காணப்பட்டான். நாக்கு வறண்டது. தண்ணீர் தாகம் உயிர் போய்விடும் போல் இருந்தது.“ குடிக்கத் தண்ணீர் தாருங்கள்” எனக் கேட்டான் சங்குராஜா. தண்ணியா!இல்லை… இல்லை” எனக் கதவை மூடிக்கொண்டனர். மெதுவாக நடந்து வந்த சங்குராஜா ஒரு குளம் இருப்பதையும். அதன் அருகில் வீடு இருப்பதையும் கண்டு, இங்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கதவைத் தட்டினான். வெளியில் வந்த வீட்டின் சொந்தக்காரர், “என்ன வேண்டும்” எனக் கேட்டார். “குடிக்க தண்ணீர் வேண்டும்” எனக் கேட்டான் சங்குராஜா. தண்ணியா? என்றவர், “பொன் பொருள் கேட்டால் கூடக் கொடுத்து விடுவோம், தண்ணீர் மட்டும் கேட்காதீர்கள்” என்றவர் உள்ளே செல்லத் திரும்பினார். கொஞ்சம் நில்லுங்கள் ஐயா? என்ற சங்குராஜா வீட்டின் முன்பு இவ்வளவு பெரிய குளத்தை வைத்துக்கொண்டு தண்ணீர் தர மறுக்கிறீர்களே என ‘நா’ தடுமாறக் கேட்டான் சங்குராஜா. நீ வெளியூர் காரன் போல் தெரிகிறது. அதுதான் புரியாமல் பேசுகிறாய்.…