9- புத்திமான் பகவான் சூரியன் மறையும் நேரம். மாலை வெயில் மங்கிக் கொண்டு வந்தது. குழந்தைகள் தாத்தாவிடம் கதை கேட்க வந்து கொண்டு இருந்தார்கள். தாத்தாவும் வந்துஅமர்ந்தார்.தாத்தா…தாத்தா நேற்று இரவு ஜெகன் வீட்டிற்கு ஒரு திருடன் வந்திருக்கிறான். அவனை ஜெகன் தந்தை சாமர்த்தியமாகப் பிடித்து கைகளைக் கட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். என்றனர் ஒரே குரலாக குழந்தைகள். “நானும் கேள்விப்பட்டேன் புத்தி கூர்மையை பயன்படுத்தினால் பூதத்தைக் கூட கொல்லலாம்” என தாத்தா கூறினார். “அது எப்படி தாத்தா பூதத்தைக் கொல்வது அதைச் சொல்லுங்கள்” என குழந்தைகள் குதூகளித்தனர். பூதக்கதை என்றாலே குழந்தைகள் முகத்தில் சந்தோசம்தான் தாண்டவம் ஆடும். குழந்தைகளின் சந்தோசத்தை ரசித்துக்கொண்டே தாத்தா “அமைதியாக இருங்கள் சொல்கிறேன்” என்றவர் சொல்ல ஆரம்பித்தார். ***** ஒரு ஊரில் கந்தசாமி, கமலா என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ராமு,சோமு என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். குடும்பத்தில் ஒரு சொந்தம் உருவானது. கமலா…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
ஒவ்வொரு மூச்சும் இறைவன் கொடுத்த பரிசு!நன்றியுடன் வாழ்!அன்புடன் பேசு! கருணையுடன் நட!மனநிறைவு கிடைக்கும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
உலகம் நிலை அற்றது இறைவன் மட்டும் நிலையானவர்! அவரைப் பற்றிக் கொள்! கவலைகள் கரையும்! அமைதி மலரும்! ஆன்மா நிறைவு பெறும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
இறைவன் நாமம் மனதின் மருந்து!அதை தினமும் உச்சரித்தால்! பயம் குறையும் நம்பிக்கை வளரும்! மனம் ஒளி பெறும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
79-பிழைபடச் சொல்லேல் வசந்தி பேச ஆரம்பித்தால் போதும், ‘அவள்’ அப்படி ‘இவள்’இப்படி என அடுத்தவர்கள் செய்யும் குற்றங்களைப் பேசுவது என்றால் ‘அல்வா’ சாப்பிடுவது போல் பேசுவாள். அவளுக்கு நேர்மறையானவள் கலா. யார் மனமும் வருத்தம் ஏற்படாதபடி முகம் மலர்ந்து இனிய வார்த்தைகளை மட்டும் பேசுவாள். மற்றவரை துன்புறுத்தாத இனிய சொற்கள் இந்த பிறவிக்கு மட்டும் இல்லாமல், அடுத்த பிறவி எடுத்தாலும் இன்பத்தைக் கொடுக்கும் என்பதை… புலவர் ஔவையார் பேசும் போது குற்றம் உண்டாகும் படி பேசாத என்பதை “பிழைபடச் சொல்லேல்” என்று கூறியிருக்கிறார்.
கோபத்தை விடு மன்னித்து பழகு! கடவுள் மன்னிக்கும் இதயத்தை நேசிக்கிறார்! மனம் இலகுவாகும் அமைதி பெருகும்! ஆன்மா உயர்வடையும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.
“அம்மா நான் தான் மீன் பேசுகிறேன் என்னை விட்டுவிடு அம்மா உனக்கு குழந்தையாக இருப்பேன்” எனப் பேசியது மீன்.“அம்மா எனக் கூப்பிட குழந்தை இல்லாத என்னை அம்மா என கூப்பிட ஒரு மீனாவது கிடைத்ததே” என மகிழ்ச்சியில் மகிழ்ந்த பூவாத்தாள் தன் கணவனிடம் எடுத்துச் சென்று காட்டினாள். பண்ணையார் பெரியசாமிக்கு ஒரே ஆச்சரியம், சரி நாம் வளர்ப்போம் என்பவர் ஒரு தொட்டி செய்ய ஏற்பாடு செய்தார். அதில் மீனைப் போட்டு வளர்த்து மகிழ்ந்தார்கள் இருவரும். மீனும் நாள் ஆக.. ஆக.. பெரியதாக வளர்ந்து கொண்டே வந்தது. பூவாத்தாளுக்கு ஒரு ஆசை தன் மீன் மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று. யார் பெண் கொடுப்பார்கள். எனக் கவலையாக உட்கார்ந்து இருந்தாள். கவலையாக இருக்கும் பூவாத்தாளிடம் வந்த பெரியசாமி என்ன கவலை என அன்புடன் விசாரித்தார். மீன் மகனுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும். எனத் தன் ஆசையை கூறினாள் பூவாத்தாள்.…
சேர்த்த செல்வம் இங்கேயே இருக்கும்! செய்த நன்மை மட்டும் தொடரும்! கடவுள் கருணையை மதிக்கிறார்! அன்பை பகிர்ந்து கொள்! அதுவே உன் உண்மையான சொத்து அதுவே உன்னை உயர்த்தும். இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.
வாழ்க்கை முழுவதும் ஓடிய பிறகு! இறைவனை நோக்கித் திரும்பு! அவரது நாமம் மனதிற்கு நிம்மதி தரும்! அந்த நிம்மதியே! முக்தியின் முதல் படி. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.
வயது அதிகரிப்பது உடலுக்கு! ஆன்மாவுக்கு இல்லை! கடவுளை நினைக்கும் மனம்! என்றும் இளமையாக இருக்கும்! அதில் அமைதி பிறக்கும். இசை கலைமணி ச. ம.பாலகிருஷ்ணன்.