40-கைவினை கரவேல் மாலை நேரம் சிறுவர்கள் எல்லோரும் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். விளையாண்டு கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எதிர் பாராத விதமாக பந்தை பிடிக்கப் போகும்போது கால் தடுக்கி விமல் கீழே விழுந்துவிட்டான். அடுத்த நெடியே கால் ஒடிந்து விட்டது போன்ற வலியுடன் உட்கார்ந்து விட்டான் விமல். சந்தோசமாக விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள் சோகமாக அவனை சூழ்ந்து கொண்டார்கள். கண்ணன் மட்டும் விமலுக்கு ஒன்னும் ஆகாது,மெதுவாக எழுந்து வா! என் அம்மா சரி செய்து விடுவார்கள்… என்று கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்தான். விமலும் கால் வலியுடன் நொண்டிக் கொண்டு வலியால் அழுது கொண்டு வந்தான். என்ன என்று விசாரித்த கண்ணன் அம்மாவும், பயப்பட வேண்டாம் சரியாகிவிடும் என நாட்காலியில் அமர வைத்தாள்.உள்ளே சென்று விளக்கெண்ணெயுடன் வந்தவள் விமல் காலில் தடவி நீவி விட்டாள். விமல் வலியால் அழுதான் சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டே…
Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா
10-சந்திரசேகர மூர்த்தி கந்தபுராணம் கீர்த்தன அன்றியே திங்கள் தன்னிடை ஆர்த்திடு கலையினை அங்கே யிற்கொளா வார்த்திடு சடைமிசை வயங்கச் சேர்த்தினான் சார்ந்திலது அவ்வழித் தக்கன் சாபமே.எந்தை யவ்வழி மதியினை நோக்கிநீ யாதும் சிந்தை செய்திடேல் எம்முடிச் சேர்த்திய சிறப்பால் அந்தம் இல்லைஇக் கலையிவண் இருந்திடும் அதனால் வந்து தோன்றுநின் கலையிலா நாடொறும் மரபால். நின்ன தொல்கலைஐந்துமுப் பகலிடை நிரம்பிப் பின்ன ரவ்வழி தேய்ந்துவந் தோர்கலை பிரியாது இன்ன பான்மையே நிகழுமெக் காலமும் எந்தன் முன்னே யாவிதோறு இருந்ததெலாம் இயற்றிய முதல்வன். பிரம்மதேவருடைய மகன்களில் ஒருவர் தட்சன். தட்சன் அசுவினி முதலிய நட்சத்திரங்கள் ஆகிய இருபத்தேழு பெண்களின் தந்தை. அத்திரி முனிவர் மனைவியாகிய அனுசியை ஈன்ற சந்திரன் அழகானவனாக இருந்ததால் தட்சன் அவரது இருபத்தேழு பெண்களை சந்திரனுக்கு மணமுடித்து கொடுத்தார். பின்பு சந்திரனை நோக்கி இப்பெண்கள் யாவர் இடத்தும் பாராபட்சமின்றிச் சமமாக அன்பு கொண்டிருக்க வேண்டும் என்று கூறி புதல்வியரைச் சந்திரனோடு…
பிள்ளை வரம் வேண்டுகிறாய் இருதயமாய் கேட்டேன் நீயும் ஒரு தாயாக ஆசைப்படுவது தவம் தான் நாளும் கருணை வழி பாயும் பொறுமை நிலைத்திடு நான் உனது கண்ணீரில் தான் குழந்தையை சுமப்பேன். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.
எனக்கும் ஒரு வீடு வேண்டும் என்ற உன் சாமானிய ஆசை அது பஞ்சம் அல்ல- பாதுகாப்பின் தேடல் நீ உழைத்தால் நிச்சயம் கிடைக்கும் காலம் தான் தாமதம் அருளால் அடைந்த வீடு கோயிலாய் மாறும். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
என் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை என்று எண்ணாதே என்னை நோக்கி அடி…. எடுத்து வை உன் பயணம் யாரும் அறிவதில்லை என்று எண்ணாதே நீ வாழ்வது காரணமின்றி இல்லை இதுவே என் அருள். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
தேவசந்திரன் எழுதும் தொடர் கதை பார்சல்கள் உடைக்கப் பட்டன! மேலும், இந்த கரடி பொம்மைகளையும் உடைத்துப் பார்க்க வேண்டும்!… அழகான கரடி பொம்மைகள் சில நொறுக்கப்பட்டன!ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் இல்லை! தவறான தகவலா? இன்ஸ்பெக்டர் யோசித்தார். சாரி! தொந்தரவுக்கு மன்னியுங்கள் என்றார் இன்ஸ்பெக்டர். பரவாயில்லை சார்! நல்லதுக்குத் தான் காலமே இல்லையே! அவன் அவ்வளவு தெளிவாக சொன்னானேஇடையில் என்ன ஆயிற்று!…ஏமாந்து விட்டோமா? நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெரிய கட்டிடம். அழகான பொம்மைகள் ஆயிரக்கணக்கில் உருவாகிக் கொண்டிருந்தன. விரைந்து வந்த அந்த கார் உள்ளே நுழைந்தது. உள்ளே சென்று நின்றது கார். காரில் இருந்து திமு திமு என்று இறங்கினார்கள்! ஒரு அறைக்குள் நுழைந்தனர். கதவுகள் மூடிக் கொண்டன! உடனே…. இருள் சூழ்ந்த அந்த அறை மெல்ல கீழே இறங்கியது. சிறிது நேரத்தில் அப்படியே நின்றது. கதவு திறந்தது! அனைவரும் ஒரு மிகப்பெரிய ஹாலில் நுழைந்தனர். சுற்றிலும் எலக்ட்ரானிக் கருவிகள். ஒரு…
உணர்வுகள் காயப்பட்டால் துயரமாக இருக்கலாம் ஆனால் காயங்களை மெல்ல பரிசுத்தம் செய்வேன் நீ ஒவ்வொரு இரவும் என்னை நினைத்தால் போதும் அந்த நீரூற்றில் உன் இதயம் மீண்டும் மலரும். எழுத்து இசைகலை மணி சி.எம்.பாலகிருஷ்ணன்.
நேசித்தவன் விலகினான் என்றால் சோர்ந்திடாதே அன்பு என்ற ஒன்று தவிர்த்தான் வலிக்கத்தான் செய்கிறது ஆனால் அதனை எல்லாம் உணர்ச்சி அல்ல உரையாடல் எனப்பார் நீயும் உயர்வாய் உண்மையை தாங்கும் போது. எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.
நேசித்தவன் விலகினான் என்றால் சோர்ந்திடாதே அன்பு என்ற ஒன்று தவிர்த்தான் வலிக்கத்தான் செய்கிறது ஆனால் அதனை எல்லாம் உணர்ச்சி அல்ல உரையாடல் எனப்பார் நீயும் உயர்வாய் உண்மையை தாங்கும் போது. எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.
பணம் இல்லாமல் வாழ்வதும் சிறுமையல்ல வலிமை அறம் வாழ்வதையே நான் பாராட்டுகிறேன் நீ தர்மம் செய்தால் தேவைகள் ஓயாமல் தீரும் பரிசுகள் இல்லையெனில் பரிபூரண வாழ்வு இருக்கும். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.