பவளவள்ளி நந்தவனத்தில் தன் தோழிகளுடன் ‘கண்ணைக் கட்டி’ விளையாடிக் கொண்டிருந்தாள்  அந்த சமயம் ரவிவர்மா அங்கு வர…

தோழிகள் சொல்ல வாய் அசைப்பதற்குள்.

“ச்… சூ” என விரலை வாயில் வைத்து சைகை காண்பித்தவன் அவர்களைப் போகச் சொன்னான்.

“எங்கு போனீர்கள் என இரு கைகளையும் தடவிக் கொண்டு வந்தாள்” பவளவள்ளி.

ரவிவர்மா முன் நிற்கவும், மாட்டிக் கொண்டாயா! என இருக கட்டித் தழுவிக் கொண்டே… கண் கட்டை அவிழ்த்தாள் பவளவள்ளி. ரவிவர்மா தன் அருகில் நிற்பது கண்டு வெட்கத்தால் தலை குனிந்தாள்.

வெட்கப்படும் போது உன் அழகு இன்னும் கூடுகிறது பவளம் என்றான்.

என்ன சிறு பிள்ளை விளையாட்டு என்றவன். குழந்தையாகி விட்டாயா?தூக்கி வரட்டுமா? என கண்களைச் சிமிட்டினான்.

போங்கள் என்றவள் அவன்  கைப்பிடியில் இருந்து ஓடினாள்.

நில் பவளம், என்றவன். அவளைத் துரத்திக் கொண்டு ஓடினான்.

அந்த சமயம் அங்கு வந்த மந்திரவாதி “ஓம்.. க்ரீம்… க்ரீம்… மகா… காளி என மந்திரக் கோலை” அசைத்தான்.

அடுத்த நொடி பவளவள்ளி அவன் அருகில் நின்றாள்.

என் அருமை காதலியே உன்னை வரவேற்கிறேன். வா… பவளவள்ளி…வா!
என்றான் மந்திரவாதி.

அவனைக் கண்டவள் பயந்து, அத்தான்…   அத்தான் என கத்தினாள் பவளவள்ளி.

ரவிவர்மாவைப் பார்த்து ஏளனமாக சிரித்து விட்டு பவளவள்ளியுடன் மறைந்து போனான் மந்திரவாதி.

பவளவள்ளி தன் கண்முன்னே மறைந்து போனவுடன் செய்வது அறியாது திகைத்தான், புலம்பினான்.

இளவரசியின் ஓலக்குரல் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள்.

பவளவள்ளியும், மந்திரவாதியும் மறைவது கண்டு செய்வது அறியாது திகைத்தனர்.

இளவரசியை மந்திரவாதி தூக்கிச் சென்ற விவரம் காட்டுத்தீ போன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்தது.

நாடே கவலையில் மூழ்கியது. மன்னரும், மகாராணியும் தனது மருமகள் எப்படி இருக்கிறாள், என்ன ஆனால் என்பது அறியாது அழுது புலம்பினர்.

இந்த சூழ்நிலையில் அழுது ஆவது  ஒன்றும் இல்லை என உணர்ந்த ரவிவர்மா.
பவளவள்ளியைக் கண்டு பிடிக்க ஆயத்தமானான்.

தனது தந்தை, தாயாரிடம் விபரத்தை தெரியப்படுத்தினான்.

பவளவள்ளியை தேட… ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“தந்தையே நானே தேடிச் செல்கிறேன். யாரையும் தேடச் சொல்ல வேண்டாம்” என பணிவுடன் கூறினான் ரவிவர்மா.

மகனே! நீ தனியாகச் செல்ல வேண்டாம். நம் படைகளை ஆவது உடன் அழைத்துச் செல் என்றார் மன்னன்.

வேண்டாம் தந்தையே, நானே அந்த மந்திரவாதிக்குப் பாடம் கற்பிக்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும் என்ற   ரவிவர்மா தந்தையின் காலைத் தொட்டு வணங்கினான். 

“ மகனே! உன் மனைவியுடன் திரும்பி வா” என ஆசி வழங்கினார்.

பின் தனது குலதெய்வமான காளிகா தேவியிடம் மண்டியிட்டு வணங்கினான்.

தாயே! தர்மத்தின் பக்கம் நீல் தாயே!என வணங்கி எழுந்தான் ரவிவர்மா.

அப்போது “ஒரு அசரீரி! குரல் கேட்டது”

மகனே! குரங்கு மலை என்னும் மலை உள்ளது. அங்கு தான் மந்திரவாதியின் இருப்பிடம் உள்ளது. 

இதோ என் முன் உள்ள கனியை எடுத்துக்கொள். “என்னை நினைத்து செயல்படு வெற்றி கிட்டும்” எனக் கூறிய குரல் மறைந்தது.

ரவிவர்மாவிற்கு தன் மனைவி கிடைத்து விடுவாள் என்ற   நம்பிக்கை அப்போது வந்துவிட… காளிமுன் உள்ள கனியை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு கிளம்பினான்.

பல ஊர்கள் தாண்டி, பல காடுகள் தாண்டி கடைசியாக குரங்கு மலை அடிவாரத்தைக் கண்டுபிடித்தான் ரவிவர்மா.

மந்திரவாதி, பவளவள்ளியை தன் குகைக்கு கொண்டு சென்றவன். தன்னை திருமணம் செய்யும்படி கேட்டான்.

“நான் திருமணம் ஆனவள். என்னை என் கணவனிடம் விட்டுவிடு” என கெஞ்சினாள் பவளவள்ளி.

மந்திரவாதி கட…கட… என சிரித்தான். உன்னை விடுவதற்காகவா கொண்டு வந்தேன் கண்ணை!

நீ மனம் மாற வேண்டும். என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நீ என்ன கேட்டாலும் கொண்டுவந்து உன் காலடியில் கொட்டுகிறேன். நீ சம்மதம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். என சுற்றி… சுற்றி வந்தான் மந்திரவாதி.

முட்டை கண்ணும், கோர முகமும், காவி படிந்த பற்களும், காடே அதிரும்படி சிரிக்கும் சிரிப்பும் பவளவள்ளிக்கு பயத்தை உண்டு பண்ணியது. கழுத்தில் கிடந்த மண்டை ஓடு வேறு பயமுறுத்தியது.

நடுங்கி ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டாள்.

கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.

Share.

Leave A Reply