71- நூல் பல கல்
மாதவனும், ராகவனும் நல்ல நண்பர்கள். முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
இருவருக்கும் ஒரே ஒரு விசயத்தில் வேறு பட்டவர்கள்.
மாதவன் பள்ளி பாடப் புத்தகம் படிப்பதுடன், செய்தித்தாள், நூலக புத்தகம் என படிப்பான்.
நூலகத்தில் தான் எடுத்து வரும் புத்தகத்தை படிப்பதுடன் இல்லாமல், ராகவன் எடுத்து வரும் புத்தகத்தையும் வாங்கி படித்து விட்டு….
புத்தகத்தில் உள்ள கதை, கருத்துகளை ராகவனுக்குச் சொல்லவும் செய்வான்.
ராகவன் பாடத்தில் முதல் மதிப்பு வாங்கினாலும் பிற புத்தகங்களைப் படிக்க மாட்டான்.
அதனால், படிப்பு வேலை என சின்ன வட்டத்திற்குள் அவன் வாழ்க்கை அடங்கி விட்டது.
மாதவன் பல புத்தகங்கள் படிப்பதால் பல கருத்துக்களை சிறிய வயதிலேயே தெரிந்து கொண்டு பிறருக்கும் சொல்வதால் அவன் நட்பு வட்டம் பெரியதாகிக் கொண்டு வந்தது.
வாழ்க்கையை நெறியுடனும், நல் வழியிலும் அமைத்துக் கொண்டான்.
இதைத்தான்
ஔவையாரும் அறிவைத் தரக்கூடிய பலவிதமான நூல்களைப் படிக்க வேண்டும் என்கிறார் “நூல் பல கல்” என்று.