72-நெற்பயிர் விளை
ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.
விவசாயி “சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்”.
“ விவசாயிகள் கிராமத்தின் முதுகு எலும்புகள்”
சுழலும் உலகில் பல தொழில்கள் இருந்தாலும் அது உழவுத் தொழிலை நம்பியே இயங்குகிறது.
ஏர் தொழில் எத்தனை கஷ்டம் இருந்தாலும் விவசாயமே சிறந்தது.
வேறு தொழில்கள் செய்பவர்கள் பசியையும் போக்குபவன் விவசாயி.
எனவே, விவசாயி தான் உலகம் என்ற வண்டிக்கு அச்சாணி.
நமது நாட்டில் அரிசியை அதிகமாகப் பயன் படுத்துவதால் நெல் அதிகமாக பயிரிடப் படுகிறது.
ஔவையாரும்
“நெற்பயிர் விளை” என்று கூறி இருக்கிறார். என்று மாணவர்களுக்குப் புரியும் படி பாடம் நடத்தினார் ஆசிரியர்.