16-ஆயிரம் புலி தங்கை
தாத்தா… தாத்தா என ஓடி வந்தான் ரகு.
என்ன ரகு!என்றார் தாத்தா.
தாத்தா நீங்களே சொல்லுங்கள். ரவி விட்டிற்கு அவன் பெரியப்பா வந்து இருக்கிறார். நல்லா படி என்று கூறினார் தாத்தா.
“அதற்கு இவன் போங்க பெரியப்பா! நீங்க ஒன்னும் எனக்குச் சொல்ல வேண்டாம். எனக்கு தெரியும்” என பேசுகிறேன் தாத்தா.
பெரியவர்கள் சொன்னா கேட்கணுமில்ல தாத்தா, என பெரிய மனிதன் போல் பேசினான் ரகு.
பெரியவர்கள் சொல்லைக் கேட்காததினால் ஒரு சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை விளக்க உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன் என சொன்ன தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.
*****
மகத நாட்டை ராஜேந்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்தார்.
அவருக்கு மூன்று மகன்கள். அதில் ரவிக்குமார்,முத்துக்குமார் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
மகன் ஜெயக்குமார் மட்டும் திருமண வயது வந்தும் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்தான்.
அதற்கு காரணம் தனது நண்பர்கள் கூறிய தகவல் தான் காரணம்.
காட்டில் ‘ஆயிரம் புலிகள்’ உள்ளன. அதற்கு ஒரு தங்கை உண்டு. அவள் மிக அழகாக இருப்பாள். அவளை உன்னால் திருமணம் செய்து வர முடியுமா? என விளையாட்டாக கேட்டனர்.
அதன் விளைவு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது ஆயிரம் புலி தங்கையுடன் தான் என உறுதியுடன் சொல்லி வந்தான்.
இதை கேட்ட அண்ணிகள். இந்தப் பிறவியில் உங்களுக்கு திருமணம் கிடையாது, என கேலி செய்தன.
ஜெயக்குமாருக்கு ரோசம் வந்துவிட்டது.
அன்னை, தந்தையிடம் வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு. அண்ணன், அண்ணிகளையும் வணங்கிய பின் காட்டிற்கு பயணப்பட்டான் ஜெயக்குமார்.
“எல்லோரும் தடுத்தும், நான் அந்தப் பெண்ணுடன் தான் வருவேன்” என உறுதியுடன் கிளம்பினான்.
சில நாட்கள் பயணத்திற்குப் பின் ஊரின் வெளிப்புறத்தில் ஒரு குடில் இருப்பது கண்டு அங்கு சென்றான் ஜெயக்குமார்.
குடிசையில் ஒரு வயதான கிழவி தனியாக இருந்தாள்.
“ பாட்டி! நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் பயமாக இல்லையா?” என ஆச்சரியத்துடன் கேட்டான் ஜெயக்குமார்.
“எனது கணவர் வேட்டையாடி பிழைப்பவர். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் இறந்த பின் இந்த குடிசையிலே நானும் சாக வேண்டும் என இங்கே! தங்கிவிட்டேன்.” என்றாள் பாட்டி.
“அது… சரி.. நீ.. எப்படி இங்கு வந்தாய்”
நீ…யார்…? என பாட்டி கேட்டாள்.
பாட்டி” நான் ஆயிரம் புலி தங்கையை திருமணம் செய்ய வேண்டும்.என வந்திருக்கிறேன் என்றான்.
“இன்று இரவு தங்கி வீட்டு காலை விடிந்ததும் போகட்டுமா?” எனக் கேட்டான் ஜெயக்குமார்.
“ஆயிரம் புலி தங்கையை திருமணம் செய்வது என்ன அவ்வளவு லேசா? அதற்கு மந்திரம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமே!” என பாட்டி கூறினாள்.
பாட்டி நான் திரும்புவதாக இருந்தால் அந்தப் பெண்ணுடன் தான் வருவேன். என சவால் விட்டு வந்திருக்கிறேன். என்றான்.
“நான் தனியாக நாட்டிற்குச் சென்றால் என் ராஜகுலத்திற்கே இழுக்கு” எனக் கூறினான்.
“பேரா! வருத்தப்படாதே, எனக்கு மந்திரம் எல்லாம் தெரியும். அதை உனக்கு சொல்லித் தருகிறேன். அதன் உதவியுடன் நான் சொல்வது போல் செய் அந்தப் பெண் கிடைப்பாள்” என்றாள் பாட்டி.
சொல்லுங்கள் பாட்டி அப்படியே செய்கிறேன் என்றான் ஜெயக்குமார்.
பாட்டி கூறத் தொடங்கினாள். ஐந்து கடல் தாண்டிய பின், ஒரு அடர்ந்த காடு வரும். அந்த காட்டில், ஆயிரம் புலிகள் வசிக்கிறது.
அதில் ஒரு புலி ஜோதிடம் பார்க்கும். எந்த எந்த காலத்தில் என்ன நடக்கும் என்பதை அப்படியே சொல்லக்கூடியது.
அந்த புலிக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. என்று நிறுத்தினாள் பாட்டி.
“அப்படி என்றால் நான் எப்படி அந்தப் பெண்ணைக் கூட்டி வருவது” என கவலையுடன் கேட்டான் ஜெயக்குமார்.
வருத்தப்படாதே பேரா! எனச் சொல்லிய பாட்டி. ஒரு மண் கலையத்திற்குள் இருந்து இரண்டு உருண்டைகளை எடுத்தாள். ஒன்றை எடுத்து ஏதோ மந்திரம் சொல்லிய பாட்டி இந்த உருண்டையை கையில் வைத்துக் கொள், என்றாள்.
கடலை கடக்கும் போது “முன் வற்றி பின் பெருகு” என சொல்லிக் கொண்டே போ! அவ்வாறே கடல் நீர் முன்வற்றி பின்னால் பெருகிக் கொண்டே போகும். இவ்வாறு நீ ஐந்து கடல்களையும் தாண்டலாம்.
பின்பு காட்டிற்குள் செல்லும் போது பயன்படுத்த மற்றொரு உருண்டையை மந்திரம் சொல்லிக் கொடுத்தாள் பாட்டி.
புலிகள் இருக்கும்போது நீ மரமாக மாறிவிடலாம். புலிகள் இல்லாமல் இருக்கும் போது நீ மனிதனாக ஆகிவிடுவாய். இதையும் பத்திரப்படுத்திக் கொள் என்றாள் பாட்டி.
உருண்டைகளை வாங்கிக் கொண்ட ஜெயக்குமார். பாட்டி உங்களுக்கு என்ன கைமாறு செய்வது, என கண்கலங்க கேட்டான்.
பேரா இந்த மந்திர உருண்டைகளை உனக்கு சும்மா கொடுக்கவில்லை நீ திரும்பி வரும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். என் இறுதி சடக்குகளை நீ செய்து விட்டு உனது ஊருக்குச் செல் என்றாள்.
நான் இனி அனாதை அல்ல.எனக்கு பேரன் இருக்கிறாய், என்று நிம்மதியுன் இறந்து விடுவேன் என்றாள் பாட்டி.
பாட்டி! நான் அவ்வாறே செய்வேன். என வாக்கு கொடுத்துவிட்டு விடை பெற்றுச் சென்றான் ஜெயக்குமார்.
ஜெயக்குமார் முதல் கடல் கரைக்கு வந்தான். முதல் உருண்டையை கையில் எடுத்துக் கொண்டு ‘முன்வற்றி பின் பெருக’ என சொல்லச் சொல்ல கடல் நீர் வழிவிட்டு பின்வந்து கொண்டே இருந்தது.
ஜெயக்குமார் ஐந்து கடல்களையும் கடந்த பின் அடர்ந்த காடு வந்தது. காட்டிற்குள் சென்றான் ஜெயக்குமார்.
அதே நேரம் சோதிட புலிக்கு மானிட வாடை அடித்து விட்டது.
கவிஞர் ச.மல்லிகா எழுதும் கதை தொடரும்.