நாம் கற்பக் கிரகத்தில் போய் கொழுக்கட்டையை சாப்பிட்டு கோயிலை அசுத்தப் படுத்தியதால் தான் கோயில் குளத்து நீர் வற்றி இருக்குமோ? என ‘திடீர்’ என மண்டையில் உரைத்தது.
தெரியாமல் செய்து சாப்பிட்டது தப்புதான். அதுவும் இல்லாமல் கோயிலுக்குள் வைத்து சாப்பிட்டது அதைவிட தப்புதான். என்ன செய்வது விடிந்தால் நம்மை பிள்ளையார் காட்டிக் கொடுத்து விடுவாரோ! என்ற பயத்தில் திலகத்திற்கு தூக்கம் வரவில்லை.
பயத்தில் திலகம் புரண்டு… புரண்டு படுத்து கொண்டிருந்தாள்.
“என்ன பிள்ளே தூங்காமல் புரளுகிறாய் என்றார் திலகத்தின் கணவன் குமார்.”
“ஒன்னும் இல்லை மச்சான் லேசாக தலைவலி” அதுதான் என தலைக்குப்புற படுத்துக் கொண்டால் திலகா.”
மாமியாருடன் கேட்பதற்கு வெட்கப்பட்ட எனக்கு ஊரார் முன் வெட்கப்பட்டு நிற்கும் படியாகி விடுமோ என்று அஞ்சினாள் திலகா.
கோயிலுக்கு அந்தி காலைப் பொழுதில் சென்றவள் கதவை சாத்திக் கொண்டு “பிள்ளையார் அப்பா” நான் செய்தது தப்புதான் தெரியாமல் செய்துவிட்டேன். திரும்பவும் குளத்தில் நீர் வர வைத்து விடு
இறைவா.
என்னைக் காட்டிக் கொடுத்து ஊரார் முன் அவமானப்பட வைத்து விடாதே.
“ குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோர் மன்னிப்பதில்யா?”
அதுபோல் இது நான் வரை தெய்வ வழிபாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால், இங்கு வந்து சாப்பிட்டு புனிதத்தைக் கெடுத்து விட்டேன்.
இது நான் வரை உன்னை ‘கல்’ என்று தான் நினைத்திருந்தேன்.
“நீ தெய்வம் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னைக் காப்பாற்று” என பலவாறு சொல்லி அழுதாள் திலகா.
தன் மேல் கருணை வந்துவிட்டதா? என அறிய குளத்தைப் பார்த்தாள். குளம் வற்றியே தான் இருந்தது.
இனி வேண்டி பிரயோசனம் இல்லை. நாம் இது நாள் வரை தெய்வத்தை வழிபடாததால் இறைவன் என்னைத் தண்டிக்க முடிவு செய்து விட்டார் என்று எண்ணினாள் திலகா.
ஊரார் முன் அவமானப்படுவதை விட பிள்ளையார் காலடியிலே சாவது மேல் என எண்ணி பிள்ளையார் பாதங்களில் தன் தலையை ஓங்கி…. ஓங்கி மூட்டினாள்.
ரத்தம் கசிந்து ஓடியது. தலை சுற்றி கீழே விழப்போன திலகத்தை ஒரு கரம் தாங்கிப் பிடித்தது.
கை பட்ட உடனே ஏதோ ஒரு சக்தி அவள் உடலில் பரவியது போல் இருந்தது.
தலையில் அடிபட்ட காயம் எதுவும் இல்லை. மாயமாய் மறைந்திருந்தது.
தன்னைத் தாங்கி பிடித்தது யார் எனப் பார்த்தாள். பிள்ளையார் நின்று கொண்டிருந்தார்.
“அப்பா விநாயகா போற்றி!
காப்பாற்றிய கணேசா போற்றி!
மூஞ்சூரு வாகனனே போற்றி!
ஏழைக்கு அருள்பவனே போற்றி!
நிந்தித்தாருக்கும் காட்சி தந்தவனே போற்றி!
என அவர் பாதங்களில் வணங்கி மெய் மறந்து துதித்தாள் திலகா.
“பக்தையே எழுந்திரு உன் மூலம் இந்த உலகிற்குத் தெய்வபக்தியை விளக்கவே இவ்வாறு செய்தோம்” என்றவர் மறைந்துவிட்டார்.
குளத்தில் நீர் பெருகி நிறைந்தது.
இதைக் கண்ட திலகா…. எனக்கு பக்தியும் இல்லை, ஞானமும் இல்லை என்னிடம் விளையாடி என் மானத்தை காத்து விட்டாய் என மனம் நெகிழ்ந்து வணங்கி வீட்டிற்குச் சென்றாள்.
காலையில் எல்லோரும் வந்து பார்த்தால் குளத்தில் நீர் எப்பவும் போல் இருப்பது கண்டு ஆச்சரியம்.
நாம் தான் சரியாகப் பார்க்கவில்லையோ! என குழம்பிப் போனார்கள்.
ஆனால், திலகா பிள்ளையாருக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டே இருந்தாள்.
அதைக் கண்டு பிள்ளையார் சிரித்துக் கொண்டிருந்தார்.
இது மற்றவர்களுக்குத் தெரிய நியாயம் இல்லை என்ற தாத்தா கதையை முடித்தார்.
“வாணி இது பற்றி என்ன நினைக்கிறாய்” எனக் கேட்டார் தாத்தா.
“ நமக்கு மேல் இறை சக்தி இருப்பதை புரிந்து கொண்டேன் தாத்தா என்றாள்” வாணி.
“இறைவனை வணங்கினால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது” என்றார் தாத்தா.
“ இனி வீட்டிற்குச் செல்லுங்கள். அம்மா தேடுவார்கள். என்றார் தாத்தா.
எல்லோரும் வீட்டிற்குப் போக ஆரம்பித்தார்கள்.
கவிஞர் ச. மல்லிகா எழுதும் கதை தொடரும்.