Author: டாக்டர் செந்தமிழ்வாணி ச.மல்லிகா

அதிர்ந்து போனான் குமார். எவ்வளவு பெரிய வேலையை இவ்வளவு குறுகிய நேரத்தில் செய்து விட்ட பூதத்தை நினைத்து மனதிற்குள் பயம் தோன்றியது. வெளியில் காட்டிக் கொள்ளாமல், வா! பார்க்கலாம் என அழைத்துச் சென்றான். கிணறு தூர் எடுத்து தெளிந்த நீர் நிறைந்து இருந்தது. இறைப்பதற்கு ஏற்றமும்,இறங்கி ஏற வசதியாகப் படிக்கட்டும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன. வியப்பில் ஆழ்ந்த குமார், அடுத்து என்ன வேலை கொடுக்கலாம் என யோசித்தான். கண்களை சுற்றும், முற்றும் சுழல விட்டான். பக்கத்தில் உள்ள ஏரி தென்பட்டது. “பூதமே! இந்த ஏரியை ஆழப்படுத்தி கரை கட்டி முடித்துவிட்டு என்னை வந்து பார்” என்றான் குமார்.“ அப்படியே செய்கிறேன் எஜமான்” என்ற பூதம், தனக்கு கொடுத்த வேலையைச் செய்ய புறப்பட்டது. குமாரும் வீட்டிற்கு புறப்பட்டான். வீடு வந்து சேர்ந்தான். அவன் முன் பூதம் வந்து நின்றது. “ நான் சொன்ன வேலையை முடிக்காமல் இங்கு என்ன செய்கிறாய்” என்றான் குமார்…

Read More

நீ செய்யும் சிறிய நன்மை ஒருநாள்! பெரிய ஆசீர்வாதமாக திரும்பும்!கடவுள் கருணையே மறப்பதில்லை!அன்புடன் வாழ்ந்திரு!உயிர்களை மதித்து நட!வாழ்க்கை வளம் பெறும். இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Read More

2- பூதம் தந்த பாடம் குழந்தைகள் எல்லாம் அமர்ந்து கொண்டு தாத்தா சொல்லப்போகும் கதையைக் கேட்க ஆர்வமாக இருந்தார்கள். சோமு மட்டும் தூங்கி… தூங்கி பக்கத்தில் இருந்த பாபு மேல் விழுந்தான். இதை தாத்தா கவனித்து விட்டார். சோமு என அழைத்தார் தாத்தா.தூங்கிக் கொண்டு இருந்ததால் சோமுவிற்கு காதில் விழவில்லை. “எழுந்திருடா! தாத்தா கூப்பிடுகிறார்’ என எழுப்பிய பின்பு தான் எழுந்தான் சோமு. சோம்பலால் கண்ணைக் கசக்கிய சோமு. “சோம்பல் தான் சிக்கலுக்கு காரணம் வாழ்க்கையில் சோம்பலைப் போல் விரோதி வேறு யாருமில்லை” என்றார் தாத்தா. “தாத்தா! சோம்பல் அவ்வளவு கொடுமையானதா” என்றனர் குழந்தைகள். ஆமாம்! என்ற தாத்தா அதை விளக்க ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்றார். சரி தாத்தா! என்று குழந்தைகள் கதை கேட்க ஆரம்பித்தார்கள். சோமுவும் தூக்கத்தை துரத்திவிட்டு கதை கேட்க ஆரம்பித்தான். ***** ஒரு ஊரில் ராமு என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு குமார் என்ற…

Read More

75- நொய்ய வுரையேல் உமாவும், கலாவும் பக்கத்து… பக்கத்து வீடு. உமா ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் போதே கவனமாகக் கேட்பாள். அதனால், அவளுக்கு படிக்கும் போது நன்றாகப் புரிந்து படிப்பாள். கலா ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் போது அவள் கவனம் கேட்பதில் இருக்காது. பக்கத்தில் உள்ள மாணவிகளிடம் ஏதாவது கேட்டு பேச்சுக் கொடுப்பாள். வீணாக நேரத்தை போக்கி விடுவாள். வீட்டிற்கு வந்து பாடப் புத்தகத்தை எடுத்தால் ஒன்றும் புரியாது. மூடி வைத்துவிட்டு தம்பி கூட விளையாடப் போய் விடுவாள். உமா நல்ல மார்க்கு வாங்குவாள் கலா குறைவான மார்க்கு வாங்குவாள். கலா அம்மா, உமா அம்மாவிடம் வந்து குறை கூறினாள். கலா அம்மா சொல்வதை கண்டு கொள்ளாமல் அப்போதும் உமாவிடம் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள். இதை கவனித்த உமாவின் அம்மா சொன்னார்கள்…கலா எதையும் கவனிக்காமல் வீண் பேச்சில் கவனம் செலுத்துகிறாள் “நொய்ய வுரையேல்” என்று ஔவையார் கூறி இருக்கிறார்கள். வீண் பேச்சை…

Read More

பொறுமை இல்லாத கனவு பாதியிலே நிற்கும்! கடவுள் காத்திருப்பவரே கைவிடமாட்டார்! மனதை உறுதியாக வை நேரம் வந்தால் மலரும்! வெற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

சரி வாருங்கள் சோதித்துப் பார்க்கலாம் என ஜெயபதியிடம் வந்தார்கள். குதிரை மிகவும் களைத்து இருக்கிறது. இந்த மூட்டைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மரநிழலில் கட்டி விட்டு வருகிறோம் என்ற முத்து வியாபாரிகள். மூட்டைகளைப் போட்டுவிட்டு குதிரையுடன் மறைவிடத்திற்கு சென்றார்கள். எதார்த்தமாக நடந்திருந்தால் மன்னித்து விடலாம். ஏமாற்ற நினைத்தால் நையப்புடைக்க வேண்டியதுதான் என எண்ணியபடி காத்திருந்தார்கள். மறைந்து இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இதை அறியாத ஜெயபதி பழம் நழுவி பாலில் விழுந்து விட்டதாக எண்ணியவன். கரி மூட்டையுடன் முத்து மூட்டையை மாற்றிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான். மறைந்து இருந்த முத்து வியாபாரிகள் ஜெபதியை சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்தார்கள். ஜெயபதி, நானில்லை… நானில்லை எனக் கூறியது அவர்கள் காதுகளில் கேட்கவில்லை. குற்றுயிரும் குலை உயிருமாக வீடு வந்து சேர்ந்தான் ஜெயபதி. உடல் தேற ஆறு மாதம் ஆயிற்று.பெயரில் மட்டும் ‘ஜெயம்’ இருக்கிறது.எங்கு போனாலும் உதைபட்டு வருகிறோம். நடப்பதெல்லாம் தோல்வி. அண்ணன் செய்யும் செயலுக்கு…

Read More

இளைஞனின் பலம் அவன் எண்ணங்களில் உள்ளது! நல்லதை நினை நல்லதைச் செய்! கடவுள் நல்வழி நடத்துவார்! உலகம் உன்னை மதிக்கும். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

ஜெயபதியும் மனைவி சொன்னது போல் புளியோதரை, டமாராத்துடன் காட்டு வழியாகச் சென்றான். மாலையானது மனைவி சொன்னது போல் சாப்பிட்ட ஜெயபதி அதே மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான். கள்வர்கள் வர வேண்டுமே என கவலையுடன் காத்திருந்தான் ஜெயபதி. நள்ளிரவு தீவெட்டிகளுடன் கள்வர்கள் வந்தார்கள். அதே மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். இதைத்தானே எதிர்பார்த்து காத்திருந்தான் ஜெயபதி. உடனே, டமாரத்தை எடுத்து பலமாகத் தட்டினான். ஆனால், கள்வர்கள் ஓடவில்லை. முன்பு போல் ஓடி பெருஞ் செல்வத்தை இழந்தவர்கள் ஆச்சே. மறுநாள் செல்வமும் கிடைத்தது. கள்வர்கள் ஓடி விட்டார்கள் என்ற அறிவிப்பு அரண்மனையில் இருந்து வராததால் இது தனிப்பட்டவனின் ‘சதி’ என ஊகித்து இருந்தனர். இன்றும் அது போல் ‘டமாரம்’ அடிக்கவே சுதாரித்துக் கொண்டு மேலே பார்த்தார்கள் கள்வர்கள். ஜெயபதி எதையும் கவனிக்காமல் ‘டமாரம்’ அடித்துக் கொண்டே இருந்தான். முன்பும் நம்மை ஏமாற்றியவன் இவனாகத்தான் இருக்கும் என எண்ணி மரத்தில் ஏறி நையப்படைத்தார்கள். மறுநாள் குற்றுயிராய்…

Read More

(நாட்டுப்புற அறிவு கதைகள் பகுதி இரண்டு இக்கதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற கதைகள் உங்களுக்காக…)1-அதிர்ஷ்டம் தந்த அற்புதம் குழந்தைகள் எல்லோரும் அமர்ந்து இருந்தார்கள். கதை கேட்கும் ஆர்வத்தில். தாத்தாவும் என்ன கதை சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஓடி வந்த ராமு “தாத்தா நீங்களே!” சொல்லுங்கள் தாத்தா, நான் வரும்போது ஐந்து ரூபாய் கீழே கிடந்தது. “அந்த ரூபாய் எனக்கு வேணும் என்று சங்கர் அழுது ஆர்ப்பாட்டம் செய்து என்னை அடிக்க வருகிறான்” தாத்தா என்றான். ராமு அழுததில் கண்கள் எல்லாம் சிவந்து கன்னம் வீங்கி, மூச்சு விட முடியாமல் தேம்பிக் கொண்டு நின்றான் சங்கர். அவனைக் கண்ட தாத்தா, ராமு, சங்கர் இருவரும் என் அருகில் வாருங்கள் என அன்புடன் அழைத்தார் தாத்தா. தாத்தாவின் அன்பிற்கு பணிந்தவர்களாக இருவரும் அருகில் சென்றனர். என் பக்கத்தில் அமர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். பின்…

Read More

உழைப்புக்கு மாற்று இல்லை! அதிர்ஷ்டம் கூட உழைப்பைத் தேடும்! கடவுள் முயற்சியை உயர்த்துவார்! கடமையைச் செய்! நிச்சயம் பலன் உண்டு. இசை கலைமணிச.ம. பாலகிருஷ்ணன்.

Read More